Home

08 September 2021

பாடப் புத்தகங்களில் முதல்வரின் படங்களைப் பயன்படுத்தக்கூடாது: உயா் நீதிமன்றம் உத்தரவு.

பாடப் புத்தகங்கள், நோட்டுகளில் முதல்வரின் படங்களை பயன்படுத்தக்கூடாது என உத்தரவிட்ட சென்னை உயா் நீதிமன்றம், எதிா்காலத்தில் இந்த விஷயத்தில் அரசு அதீத கவனம், எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.


சென்னை உயா்நீதிமன்றத்தில் நமது திராவிட இயக்கம் என்ற அமைப்பின் தலைவா் ஓவியம் ரஞ்சன் என்பவா் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில் கூறியிருப்பதாவது: பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தற்போது இருப்பில் உள்ள பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்களை வழங்க வேண்டும்.


இருப்பில் உள்ள பாடப்புத்தகங்கள் நோட்டுகள்,பைகள் உள்ளிட்டவற்றில் முன்னாள் முதல்வா்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படங்கள் இருப்பதனால் அவற்றை விநியோகிக்க வேண்டாம் என்று பள்ளிக் கல்வித்துறை வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.


பொது மக்களுடைய வரிப் பணத்தை வீணாக்கக் கூடாது. எனவே, ஏற்கெனவே அச்சிடப்பட்ட பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுகள், பைகளை வீணாக்கக்கூடாது. அவற்றை மாணவ, மாணவிகளுக்கு விநியோகிக்க உத்தரவிட வேண்டும். எதிா்காலத்தில் இதுபோல பாடப்புத்தகங்கள் நோட்டுகள், பைகளில் அரசியல் கட்சித் தலைவா்களின் படங்களை அச்சிட தடை விதிக்க வேண்டுமென கோரியிருந்தாா்.


இவ்வழக்கு சென்னை உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு செவ்வாய்க் கிழமை விசாரணைக்கு வந்தது.


அப்போது ஆஜரான தலைமை வழக்குரைஞா் ஆா். சண்முகசுந்தரம், ஏற்கெனவே செலவழித்த பணத்தை வீணாக்காத வகையில், முந்தைய முதல்வா்கள் படங்களுடன் அச்சடிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள், நோட்டுகளை வீணாக்காமல் அச்சடிக்கப்பட்ட அதே நிலையில் மாணவா்களுக்கு வழங்கப்படும் என்று முதல்வா் அறிவித்துள்ளாா். அதன் அடிப்படையில் மாணவா்களுக்கு அந்த புத்தகங்கள் தீா்ந்துபோகும் வரை தொடா்ந்து பயன்படுத்தப்படும்.


எதிா்காலத்தில் இதுபோன்ற பாடப் புத்தக பைகளில், தனது புகைப்படங்கள் வெளியிடப்படுவதை முதல்வா் விரும்பவில்லை என்றாா்.


இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், வாக்களிக்கும் உரிமை இல்லாத பள்ளி செல்லும் குழந்தைகளுக்கான புத்தகங்கள், பைகளில் முதல்வா்கள் புகைப்படங்கள் இடம்பெறக்கூடாது. எந்தவொரு அரசியல்வாதியும் தனிப்பட்ட நலன்களுக்காக, பொது நிதியை தவறாகப் பயன்படுத்த முடியாது. எதிா் காலத்தில் இதுபோன்ற நடைமுறை தொடராமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.


விளம்பரப் பதாகைகள், பிற பொருட்களில் அரசியல் தலைவா்களின் விளம்பர நோக்கங்களுக்காக பொது நிதி செலவழிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய, தீவிர அக்கறையும், எச்சரிக்கையும் எடுக்கப்பட வேண்டும் என்று அரசுக்கு அறிவுறுத்துவதைத் தவிர வேறு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்பட வேண்டியதில்லை.


இருப்பினும், முதல்வரின் புகைப்படங்கள் செய்தித்தாள்கள், விளம்பரப் பதாகைகள், விளம்பரங்களில் இடம்பெறலாம். ஆனால் பாட புத்தகங்கள், எந்த கல்வி சாா்ந்த பொருட்களிலும் பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவில் குறிப்பிட்டனா்.

07 September 2021

முதல்வர் படம் இல்லாமல் சான்றிதழ் : நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் நெகிழ்ச்சி

14 ஆண்டுகளுக்கு பிறகு முதலமைச்சரின் விளம்பரம் இல்லாமல் அரசு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 


டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாளில், சிறந்த கல்வித் தொண்டாற்றும் நல்லாசிரியர்களுக்கு “டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது” வழங்கி தமிழ்நாடு அரசு கவுரவித்து வருகிறது.


அந்த வகையில் 2020-21ஆம் கல்வியாண்டில் அனைத்து வகையான பள்ளிகளிலும் சிறப்பாக பணிபுரிந்த 379 ஆசிரியர்கள், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தைச் சார்ந்த 10 ஆசிரியர்கள் என மொத்தம் 389 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. 


சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 15 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதிற்கான வெள்ளிப்பதக்கம், 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை, பாராட்டுச் சான்றிதழையும் முதலமைச்சர் வழங்கினார்.


சிறந்த ஆசிரியர்களின் பெயர்கள் பள்ளிக்கல்வித்துறையால் தேர்வுச் செய்யப்பட்டப் பின்னர் அவர்களுக்கான விருது தயார் செய்யப்படும். அதனைத் தொடர்ந்து ஆசிரியர்களுக்கு வெள்ளிப்பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். 2007 ஆம் ஆண்டு முதல் பாராட்டு சான்றிதழில் அப்போது தமிழ்நாடு முதலமைச்சராக இருப்பவரின் புகைப்படம் இடம் பெறுவது வழக்கம்.


ஆனால் நடப்பாண்டில் தமிழ்நாடு அரசு வழங்கிய டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கான சான்றிதழில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படம் இடம்பெறவில்லை. 14 ஆண்டுகளுக்கு பிறகு முதலமைச்சரின் விளம்பரம் இல்லாமல் அரசு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. விருதில் அரசின் முத்திரை, முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் படம் ஆகியவை மட்டுமே இடம் பெற்றுள்ளது. 


முதலமைச்சரின் விளம்பரம் இல்லா சான்றிதழ் வழங்கப்பட்டது விருது பெற்ற ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் குறித்து தமிழக அரசு தலைமைச் செயலரின் வழிகாட்டு நெறிமுறைகள்.

உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் குறித்து தமிழக அரசு தலைமைச் செயலரின் கடிதம் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் ஊக்க ஊதியம் குறித்து மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளது. 

Download Order 👇👇👇

Incentive Related Order

தமிழக அரசு பள்ளிகளில் செப்டம்பர் 30 வரை மாணவர் சேர்க்கை – பள்ளிக் கல்வித்துறை அனுமதி.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தனியார் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேருவதன் காரணமாக இந்த மாதம் இறுதி வரை சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மாணவர் சேர்க்கை :


நாடு முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தேர்வுகள் நடத்தப்பட்டது. 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.


தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், ஜூன் முதல் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அனைத்து வகுப்புகளிலும் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், 9ம் வகுப்பு வரையிலானோருக்கு, மாற்று சான்றிதழ் இல்லாவிட்டாலும், ‘எமிஸ்’ என்ற கல்வி மேலாண்மை தளத்தின் சிறப்பு எண் இருந்தால் போதும். அந்த எண்ணில் உள்ள விவரங்கள் அடிப்படையில், மாணவர்களை சேர்க்கலாம் என்று தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகளுக்கு ஜாக்டோ ஜியோ வரவேற்பு!

ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கடந்த 20.08.2021 அன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை மரியாதை நிமித்ததமாகச் சந்தித்தனர். இச்சந்திப்பின்போது தமிழக முதலமைச்சராகப் பதவி பொறுப்பேற்றதற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர். மேலும் , மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது , முடக்கப்பட்டுள்ள அகவிலைப்படியினை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பான ஜாக்டோ ஜியோவின் சார்பாக கோரிக்கை மனுக்களை அளித்தனர்.


இன்றைய தினம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தமிழக சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் ஆசிரியர்கள்- அரசு ஊழியர்கள் தொடர்பாக 13 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்கள்.


மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகளுக்கு ஜாக்டோ ஜியோ நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது. ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள திராவிட முன்னேற்றக் கழக அரசு என்றைக்குமே அரசுக்கும் ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் இடையேயான நல்லுறவினைப் பேணிப் பாதுகாக்கும் என்பதனை நிரூபிக்கும் விதமாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் அமைந்துள்ளது. மேலும் , ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் நியாயமான உரிமைகளை வென்றெடுப்பதற்காக 2017 ல் தொடங்கப்பட்ட ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பிற்கு , தொடங்கிய நாள் முதலே தனது ஆதரவினை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் எதிர்கட்சித் தலைவராக இருந்தபோது நல்கி வந்துள்ளார்.


அதோடு மட்டுமல்லாமல் , ஜாக்டோ ஜிபோ போராட்டக் களத்திற்கே வந்து , கழக ஆட்சி அமைந்தவுடன் ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதியினையும் அளித்து வந்துள்ளார் . 2017 முதல் 2019 வரையிலான போராட்டக் காலம் அனைத்தும் பணிக்காலமாக வரன்முறைப்படுத்தப்படும் , ஒழுங்கு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட பதவி உயர்வு மீண்டும் வழங்கப்படும் , பழிவாங்கலால் செய்யப்பட்ட பணிமாறுதல் இரத்து செய்யப்படும் போன்ற அறிவிப்புகள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் போராட்ட காலத்தில் அளித்த வாக்குறுதிகளை எள்ளவும் மாற்றாமல் நிறைவேற்றி உள்ளார் என்பதனை நன்றிப் பெருக்கோடு ஜாக்டோ ஜியோ வரவேற்கிறது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தனது 110 உரையினை பின்வரும் வரிகளோடு முத்தாய்ப்பாக நிறைவு செய்துள்ளர் . " மக்களாட்சித் தத்துவத்தின் நான்கு தூண்களின் ஒன்றான நிருவாகத்தின் அடித்தளமாக விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள். அவர்களது நலனில் எப்போதுமே அக்கறை கொண்டு அவர்களது நியாயமான கோரிக்கைகளை இந்த அரசு படிப்படியாக , நிச்சயமாக , உறுதியாக நிறைவேற்றும் ” மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் முத்தாய்ப்பான நிறைவுரை என்பது , ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் பிரதான கோரிக்கையான மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையினை ஏற்படுத்தியுள்ளது. 


மாநில ஒருங்கிணைப்பாளர்கள் 

ஜாக்டோ ஜியோ 



அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 25% மாணவர்களை கூடுதலாக சேர்க்க உயர்கல்வித்துறை அனுமதி.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 25% மாணவர்களை கூடுதலாக சேர்க்க உயர்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு பல்கலைக்கழகங்களிடம் கல்லூரிகள் அனுமதி பெற வேண்டும் என உயர்கல்வித்துறை தெரிவித்து உள்ளது. 

10, 11 ஆம் வகுப்புகளுக்கான துணைத் தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு.

10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு தற்போது நடைபெறவுள்ள துணைத் தேர்வுகளுக்கான நுழைவுச்சீட்டு (ஹால் டிக்கெட்) வெளியிடப்பட உள்ளது. நாளை காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

பள்ளிகளில் இனி 15 நாள்களுக்கு ஒருமுறை RTPCR Test : தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறப்பிற்கு பின் கொரோனா பரவல் அதிகரிக்காவிட்டாலும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தொடர்ந்து தொற்று பதிவாகி வருகிறது. பள்ளிகள் திறக்கப்பட்ட பின் கொரோனா பரவுகிறது என்று சொல்வது தவறான கருத்து. ஏற்கெனவே அறிகுறிகள் இருந்தவர்களுக்கு பள்ளிகளில் நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 


எந்தெந்த பள்ளிகளில் கொரோனா பாதிப்பு பதிவாகிறதோ அங்கு உடனடியாக விடுமுறை அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 23 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனோ தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. மாணவர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர அனுமதிக்கப்பட்டு உள்ளது. வாரத்தில் 6 நாட்கள் மட்டுமே பள்ளிகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு வகுப்பறையில் 20 மாணவர்களை மட்டுமே உட்கார வைக்க வேண்டும், மாணவர்கள் மத்தியில் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் ஆகிய பாதுகாப்பு வழிமுறைகளும் பின்பற்றப்பட்டு வருகின்றன. 


மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா பரவி வரும் நிலையில் கொரோனா பரவலைத் தடுக்க தமிழகத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் RT-PCR பரிசோதனை நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் தொற்று பாதிப்புள்ளவர்கள் உடனடியாக கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்படுவர், இதனால் பரவல் வேகம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

புத்தாக்கப் பயிற்சி கட்டகத்தை பயன்படுத்தும் முறை குறித்து தெளிவுரை வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு.



கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் நீண்டகாலம் மூடப்பட்டிருந்த காரணத்தால் மாணர்வகளுக்கு ஏற்பட்டிருக்கும் கற்றல் இழப்பை சரிசெய்யும் பொருட்டு பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் அவர்களின் அறிவுரையின்படி புத்தாக்கப் பயிற்சிக் கட்டகங்கள் II-XII வகுப்புகள் வரை முந்தைய வகுப்பிற்கான அடிப்படை மற்றும் முக்கியப் பாடக்கருத்துகளை (Basic and Critical Concepts) உள்ளடக்கி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, முதற்கட்டமாக IX - XII ஆம் வகுப்புகளுக்கு Soft copy அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டு, அவர்கள் மூலம் பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டது. 


இந்தப் புத்தாக்கப்பயிற்சிக் கட்டகம் அனைத்துப் பகுதி மாணவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு கீழ்க்கண்டவாறு தயாரிக்கப்பட்டுள்ளது.


• IX, X வகுப்புகளுக்கான தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கான புத்தாக்கப் பயிற்சிக் கட்டகத்தில் மாணவர்கள் தெரிந்திருக்க வேண்டிய மிக அடிப்படையான பாடக்கருத்துக்கள் (Fundamental Concepts) முதலில் கொடுக்கப்பட்டிருக்கும்.


• அடுத்து, முந்தைய வகுப்பு வரையிலான அடிப்படை மற்றும் முக்கிய கருத்துகள் (Basic and Critical Concepts) கொடுக்கப்பட்டிருக்கும்.


அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான புத்தாக்கப் பயிற்சிக் கட்டகங்களில் முந்தைய வகுப்பு வரையிலான அடிப்படை மற்றும் முக்கிய பாடக்கருத்துகள் (Basic கொடுக்கப்பட்டிருக்கும். and Critical Concepts) மட்டும்


மிக அடிப்படையான பாடக்கருத்துகளில் (Fundamental Concepts) கற்றல் அடைவு போதிய அளவு மாணவர்கள் பெற்றிருப்பின், அடுத்ததாக உள்ள அடிப்படை மற்றும் முக்கியப் பாடக்கருத்துகளைக் (Basic and Critical concepts) கற்பிக்கலாம்.


செப்டம்பர் 1 -ம் நாள் பள்ளி திறந்தவுடன் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகத்தில் உள்ள பாடப்பொருளைக் கற்பிக்கப் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது ஆய்வு அலுவலர்கள், மாவட்டங்களுக்கு, பள்ளி திறப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வுக்குச் சென்றபோது சில பள்ளிகளில் Online மூலம் முறையாக கால அட்டவணை தயாரிக்கப்பட்டு பாடங்கள் முடிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் பள்ளிகளில் உள்ள இடவசதிக்கேற்றவாறு மாணவர்களை தினசரி வரவழைக்கும் நிலையில், அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே மாதிரியான வகுப்புகள் நடைபெற வாய்ப்பு இல்லாமல் உள்ளது. உதாரணமாக சில பள்ளிகளில் IX - XII வகுப்புகள் தினசரி வருகை புரியவும், சில பள்ளிகளில் X, XII வகுப்பு மாணவர்கள் தினசரியும், IX, XI வகுப்பு மாணவர்கள் ஒரு நாள் விட்டு ஒருநாளும் வருகை புரியுமாறு திட்டமிடப்பட்டுள்ளது. 


இந்நிலையில் அனைத்துப் பள்ளிகளும் ஒரே மாதிரியாக கட்டகத்தைப் பயன்படுத்த தேவை எழாத நிலை உருவாகியுள்ளது.


எனவே, ஒவ்வொரு பள்ளியின் தலைமை ஆசிரியரும், பள்ளியில் ஒவ்வொரு பாட ஆசிரியரும் எந்த அளவுக்கு முந்தைய வகுப்பில் உள்ள பாடங்கள் மற்றும் தற்போதைய வகுப்பில் உள்ள பாடங்கள் ஆகியவற்றைக் கற்பித்து உள்ளனர் என்பதையும், மாணவர்களின் கற்றல் நிலை ஒவ்வொரு வகுப்பிலும், ஒவ்வொரு பாடத்திலும் எந்த நிலையில் உள்ளது என்பதையும், ஆசிரியர் உதவியுடன் ஆய்வு செய்து, அதற்கேற்றவாறு புத்தாக்கப் பயிற்சிக் கட்டகத்தை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள பள்ளிகளுக்கு அறிவுறுத்தக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.


முந்தைய வகுப்புகளுக்கு விடுமுறையின் போது Online மூலம் வகுப்புகள் முறையான நடைபெற்றிருந்தால் முந்தைய வகுப்புகளுக்கான அடிப்படை மற்றும் முக்கிய கருத்துக்கள் (Basic and Critical Concepts) கற்பிக்கப்படவேண்டிய கால அளவை பாட ஆசிரியர்களே நிர்ணயித்துக் கொள்ள பள்ளிகளுக்கு அறிவுறுத்தக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.


Online மூலம் வகுப்புகள் நடைபெற்ற போது, அதில் கலந்து கொள்ளாத, சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கு அதற்கேற்றவாறு திட்டமிட்டு புத்தாக்கப் பயிற்சிக் கட்டகத்தில் உள்ள பாடக்கருத்துகளை 45 - 50 நாட்களுக்குள் கற்பிக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.


இவ்வாறு, ஒவ்வொரு பள்ளியிலும், ஒவ்வொரு பாடத்திலும் மாணவர்களின் கற்றல் அடைவின் நிலைக்கு ஏற்ப, முறையாகத் திட்டமிட்டு, புத்தாக்க பயிற்சிக் கட்டகத்தில் உள்ள பாடக்கருத்துகளைக் கற்பிக்கப் பள்ளிகளுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 


முதல்வர் 110 விதியின் கீழ் இன்றைய அறிவிப்புகள்


ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது. 

1/1/2022 முதல் அகவிலைப்படி அமல்படுத்தப்படும்

முன்னதாக ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜனவரி முதல் வழங்கப்படும் என அறிவிப்பு


அரசு பணியில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர்கள் பணிக்கான காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்


2017,18,19 ஆம் ஆண்டுகளில் வேலைநிறுத்தம் மற்றும் தற்காலிக பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தப்படும்


ஒழுங்கு நடவடிக்கை காரனமாக பதவி உயர்வு பாதிக்கப்பட்டு இருந்தால் அது சரி செய்யப்படும்


அரசு ஊழியர்களுக்கு உதவி பெறும் வகையில் ஒருங்கிணைந்த தனி தொலைபேசி உதவி மையம் அமைக்கப்படும்


புதிதாக அரசுப் பணியில் சேரும் பணியாளர்கள் மற்றும் பதவி உயர்வு பெறும் பணியாளர்களுக்கு பணி தொடர்பான பயிற்சி அந்தந்த மாவட்ட வாரியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்


அரசு ஊழியர்களின் நலனில் எப்பொழுதும் அக்கறை கொண்டு அவர்களது நியாயமான கோரிக்கைகளை இந்த அரசு படிப்படியாக நிறைவேற்றப்படும்


சத்துணவு சமையலர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு ஓய்வு பெறும் வயது வரம்பு 58 இருந்து 60 ஆக உயர்த்தப்படும்


அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதால் மாணவர்கள் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பபடும்


வேலை நிறுத்த போராட்டத்தின் போது பணிமாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு அதே இடத்தில் பணியாற்ற கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்கப்படும்


அவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்க நடவடிக்கை மற்றும் அதனால் பதவி உயர்வில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தீர்க்கப்படும்


முதலமைச்சரின் 110 விதியின் 13 புதிய அறிவிப்புகள் வாசிக்கப்பட்டது.

110 விதியின் கீழ் அறிவிப்புகள்


ஜனவரி 1 முதல் அகவிலைப்படி உயர்வு அமல்: முதல்வர் ஸ்டாலின்


2022 ஏப்ரல் 1 க்கு பதில் 2022 ஜனவரி 1 முதல் அகவிலைப்படி உயர்வு அமல் படுத்தப்படும் என சட்ட சபையில் 110 விதியின்கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு. 

06 September 2021

NEET Exam (UG) - 2021 - Admit Card : நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியீடு.

12.09.2021 அன்று நடைபெற உள்ள நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியீடு! 

NEET - NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST (UG) - 2021 - Admit Card! 


Admit Card for NEET EXAM

Download Link 1

Download Link 2


நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிய மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நிலையில் தற்போது நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்டு உள்ளது. 


நாடு முழுவதும் இந்த ஆண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்புக்கான தேசிய நுழைவு மற்றும் தகுதி தேர்வான நீட் செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வுகள் முகமை அறிவித்தது. விண்ணப்பங்கள் அனுப்பும் பணி கடந்த ஜூலை 13 ஆம் தேதி தொடங்கியது.


விண்ணப்பங்கள் அனுப்புவது, விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்வது, விண்ணப்பக் கட்டணம் செலுத்துவது என அனைத்து பணிகளும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி முடிவடைந்தது. மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வு நடக்கும் இடங்களின் எண்ணிக்கை 155 இல் இருந்து 198 ஆக உயர்த்தப்பட்டது. இதனிடையே இதர தேர்வுகளும் செப்டம்பர் 12 ஆம் தேதியில் நடைபெறுவதால் நீட் தேர்வை ஒத்திவைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பலர் வழக்கு தொடர்ந்தனர். 


இதனை விசாரித்த நீதிபதிகள் நீட் தேர்வை 16 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர் என்றும் ஒருசில மாணவர்களின் வேண்டுகோள்களுக்கு இணங்க நீட் தேர்வை ஒத்திவைக்க முடியாது என்றும் கூறினர். தேவையெனில் மனுதாரர்கள் தேசிய தேர்வுகள் முகமையிடம் முறையிடலாம் என்று நீதிபதிகள் யோசனை தெரிவித்தனர். 

கல்வி ஆண்டு தொடங்குவதற்கு ஆறு மாதத்திற்கு முன்பே திட்டங்கள் வகுக்கப்பட்டு உரிய நேரத்தில் மடிக்கணினி வழங்கப்படும் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கருத்து

2017-18 கல்வியாண்டில் பயின்ற 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடர்பாக மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் வி.பி. நாகைமாலி மற்றும் மா. சின்னதுரை கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இதற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது, 2011-12 முதல் 2019-20ம் ஆண்டு முடிய இத்திட்டத்தின் கீழ் 4571675 மாணவர்கள் மடிக்கணினி பெற்றுள்ளனர். இதற்காக 6349.63 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. 

பள்ளிகளின் வேலை நேரம் குறித்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி : கல்வித் துறை அதிகாரிகள் விளக்கம்.

தமிழகத்தில் கரோனா பரவல் சற்று தணிந்துள்ளதால் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. முதல் கட்டமாக 9 முதல் 12-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு மட்டும் சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் பள்ளிக்கு வருகை தரும் மாணவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக Covid - 19 SWAB TEST மேற்கொள்ள திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் 01.09.2021 முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. மாணவர்களுக்கும் , ஆசிரியர்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படா வண்ணம் மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் கணக்கெடுப்புப் பணி தீவிரம் : அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் விவரங்களை பள்ளிக்கல்வித் துறை கணக்கெடுத்து வருகிறது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில், அனைத்துமாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம் :

05 September 2021

வ.உ.சி.பெயரில் ரொக்கப்பரிசுடன் கப்பலோட்டிய தமிழன் விருது- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

வ.உ.சி என்று சுருக்கமாக அழைக்கப்படும் வ.உ.சிதம்பரனார் தமிழகத்தில் தோன்றிய சுதந்திர போராட்ட வீரர்களில் மிகவும் தனித்துவம் வாய்ந்த தலைவர். சுதேசி இயக்கத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதோடு 1906 ஆம் ஆண்டு சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனியை நிறுவினார். சுதேசி இயக்கத்தின் செயல் வடிவமாக எழுச்சி பெற்ற வ.உ.சி. நாட்டுக்கே முன்னோடியாகத் திகழ்ந்தார். ஆங்கிலேயர்களின் கடலாதிக்க முற்றுரிமைக்கு சவால்விடும் வகையில் முதன் முதலாக கப்பலோட்டினார். அதன் காரணமாக கப்பலோட்டிய தமிழன் என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்டார். 

டெல்லி சட்டப்பேரவை முதல் செங்கோட்டை வரை கண்டறியப்பட்ட சுரங்கப்பாதை

டெல்லி சட்டப்பேரவை வளாகத்திற்குள் சுரங்கப்பாதை போன்ற ஒரு அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. டெல்லி செய்தித் தொடர்பாளர் ராம் நிவாஸ் கோயல் அளித்த பேட்டியில், இந்தச் சுரங்கப்பாதை டெல்லி சட்டப்பேரவையை செங்கோட்டையுடன் இணைக்கிறது என்றும் சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் போது வீரர்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க ஆங்கிலேயர்களால் பயன்படுத்தப்பட்டது என்றும் கூறினார். 

1993 இல் நான் எம்எல்ஏ ஆனபோது, ​​செங்கோட்டைக்கு செல்லும் ஒரு சுரங்கப்பாதை இருப்பதை அறிந்ததும், அதன் வரலாற்றை தேட முயற்சித்தேன். ஆனால் அது தெளிவாக இல்லை" என்று அவர் கூறினார். இப்போது நாம் சுரங்கப்பாதையின் முகப்பு பகுதியை மட்டுமே கண்டறிந்து உள்ளோம், ஆனால் நாங்கள் அதை மேலும் தோண்ட மாட்டோம், ஏனென்றால் சுரங்கப்பாதையின் அனைத்து வழிகளும் சுரங்கப்பாதை திட்டங்கள் மற்றும் கழிவுநீர் அமைப்புகளால் அழிக்கப்பட்டிருக்கலாம்" என்று அவர் கூறினார். 


ஆங்கிலேயர் ஆட்சியின் போது 1912 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு தலைநகர் மாற்றப்பட்டது. தற்போது டெல்லி சட்டப்பேரவை செயல்பட்டு வரும் இந்த கட்டிடம் அந்த காலகட்டத்தில் மத்திய சட்டப்பேரவையாக இருந்தது. அதன் பின்னர் கடந்த 1926 ஆம் ஆண்டு அது நீதிமன்றமாக மாற்றப்பட்டது. சுதந்திர போராட்ட வீரர்களை நீதிமன்றத்திற்கு அழைத்து வர ஆங்கிலேயர்கள் இந்த சுரங்கப்பாதையைப் பயன்படுத்தினர் என்று கோயல் தெரிவித்தார். 

சட்டப்பேரவை வளாகத்திற்குள் தூக்கு அறை ஒன்று இருப்பதை நாங்கள் அனைவரும் அறிந்திருந்தோம், ஆனால் அதை ஒருபோதும் திறக்கவில்லை. இப்போது சுதந்திரத்தின் 75 வது ஆண்டு, இந்த அறையை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளோம். இந்த அறையை சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவிடமாக மாற்றும் எண்ணம் உள்ளது. சுதந்திரத்துடன் தொடர்புடைய டெல்லியில் உள்ள சட்டப் பேரவையின் வரலாற்றைக் கருத்தில் கொண்டு, தூக்கு அறையை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அடுத்த ஆண்டு சுதந்திர தினத்துக்கு முன் திறக்க உள்ளதாகவும் அதற்கான பணிகள் தொடங்கிவிட்டதாகவும் அவர் கூறினார். 

"ஆசிரியர்கள் இறைவனுக்கு சமமானவர்கள்" - ஆசிரியர் தின வாழ்த்து செய்தியில் குடியரசுத் தலைவர் புகழாரம்.

ஆசிரியர் தினம்:

ஆசிரியர் தினம் என்பது கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பல்வேறு நாடுகளில் பல்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் முனைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் நாள் ஆசிரியர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இவர் நாட்டின் உயர் பதவியில் இருந்ததோடு மட்டுமல்லாமல் சிறந்த ஆசிரியராகவும் தனது பங்களிப்பை வெளிப்படுத்தியுள்ளார். 

04 September 2021

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தி!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தி செ.கு.எண்: 54, நாள்: 04.09.2021

ஆசிரியர் பணியிட விவரங்களை EMIS இணையத்தில் DSE Staff fixation-ல் பதிவேற்றம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவு.

2021-22ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் சார்பாக கல்வி மேலாண்மைத் தகவல் முகமை இணையதளத்தில் மாணவர்களின் சேர்க்கை விவரம் மற்றும் பணிபுரியும் ஆசிரியர்களின் விவரம் ஆகியவை முதன்மைக் கல்வி அலுவலர்களால் பதிவேற்றம் செய்யப்பெற்று வருகின்றன.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய செப்டம்பர் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்துவது போன்றவற்றிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதேஇதைக் கருத்தில் கொண்டு வரி செலுத்துவோருக்கு ஏதுவாக, பல்வேறு படிவங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசத்தை வருமான வரித் துறை நீட்டித்துள்ளது. இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

மத்திய அரசு ஊழியர்களுக்கான DA 28% லிருந்து 31% மாக உயர வாய்ப்பு.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட். நிலுவையில் இருந்த 11% DA மற்றும் DR சமீபத்தில் உயர்த்தி வழங்கப்பட்ட நிலையில் தற்போது ஜூலை 2021 கான அகவிலைப்படி மேலும் 3% உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டு உள்ளது. 

03 September 2021

மகப்பேறு விடுப்பு நீட்டிப்பு கோருதல் படிவம்

2021 ஜூலை 1 முதல் மகப்பேறு விடுப்பு 270 நாட்களில் இருந்து 365 நாள்களாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. (அரசாணை எண்.84, நாள் - 23/08/2021 மனிதவள மேலாண்மைத் துறை)

நடப்பு கல்வி ஆண்டில் மாநில நல்லாசிரியர் விருதுக்கு 385 பேர் தேர்வு

முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்.5 ஆம் தேதி பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் ஆசிரியர் தின விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

02 September 2021

அரசுப் பணியாளர்களுக்கு வீடுகட்டும் முன்பணம் குறித்து அறிவிப்பு

🔥 தனது வாழ்நாளில் ஒரு வீட்டை சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்பது அரசுப் பணியாளர்களின் கனவாகும். அரசு பணியாளர்களின் இக்கனைவை நனவாக்கும் வகையில், அரசு ஒரு நலத்திட்டமாக பணியாளர்களுக்கு வீடு கட்டுவதற்கும், கட்டிய வீடு /அடுக்குமாடி குடியிருப்பினை வாங்குவதற்கும் "வீடு கட்டும் முன்பணத்தினை" வழங்குகிறது. 

பணியின் போது மரணமடையும் அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.3,00,000/- லிருந்து ரூ.5,00,000/- ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு

அரசாணை எண் 197, நாள் : 01/09/2021. பணியின் போது மரணமடையும் அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.3,00,000/- லிருந்து ரூ.5,00,000/- ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதேநேரத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் தொகை ரூ.60 லிருந்து ரூ.110 ஆக உயர்த்தி செப்டம்பர் 2021 முதல் பிடித்தம் செய்யப்படும் என ஆணையிடப்பட்டு உள்ளது. 

Featured Post

Income Tax Form FY 2024 - 25 (Version 2.0) Date 20/12/2024 Old Regime and New Regime - By Arivazhagan

Income Tax Form Latest Version 2.0  (Old Regime and New Regime)  Financial Year 2024-25 (AY 2025-26)  Auto calculation is enabled in this So...

Popular Posts