2024 - 25 கல்வி ஆண்டில் ஜூன் 10 ஆம் தேதி பள்ளிகள் திறப்பு : தமிழக அரசு
முன்னதாக ஜூன் 6 - ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜூன் 10 ஆம் தேதி முதல் திறக்கப்படும் என கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஜூன் 10 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்தது. அதேபோல் தமிழ்நாட்டிலும் பள்ளிகள் திறப்பை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் இருந்து வலியுறுத்தப்பட்டது. அதனைக் தொடர்ந்து இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.