Home

Showing posts with label Educational News. Show all posts
Showing posts with label Educational News. Show all posts

08 September 2021

பாடப் புத்தகங்களில் முதல்வரின் படங்களைப் பயன்படுத்தக்கூடாது: உயா் நீதிமன்றம் உத்தரவு.

பாடப் புத்தகங்கள், நோட்டுகளில் முதல்வரின் படங்களை பயன்படுத்தக்கூடாது என உத்தரவிட்ட சென்னை உயா் நீதிமன்றம், எதிா்காலத்தில் இந்த விஷயத்தில் அரசு அதீத கவனம், எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.


சென்னை உயா்நீதிமன்றத்தில் நமது திராவிட இயக்கம் என்ற அமைப்பின் தலைவா் ஓவியம் ரஞ்சன் என்பவா் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில் கூறியிருப்பதாவது: பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தற்போது இருப்பில் உள்ள பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்களை வழங்க வேண்டும்.


இருப்பில் உள்ள பாடப்புத்தகங்கள் நோட்டுகள்,பைகள் உள்ளிட்டவற்றில் முன்னாள் முதல்வா்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படங்கள் இருப்பதனால் அவற்றை விநியோகிக்க வேண்டாம் என்று பள்ளிக் கல்வித்துறை வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.


பொது மக்களுடைய வரிப் பணத்தை வீணாக்கக் கூடாது. எனவே, ஏற்கெனவே அச்சிடப்பட்ட பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுகள், பைகளை வீணாக்கக்கூடாது. அவற்றை மாணவ, மாணவிகளுக்கு விநியோகிக்க உத்தரவிட வேண்டும். எதிா்காலத்தில் இதுபோல பாடப்புத்தகங்கள் நோட்டுகள், பைகளில் அரசியல் கட்சித் தலைவா்களின் படங்களை அச்சிட தடை விதிக்க வேண்டுமென கோரியிருந்தாா்.


இவ்வழக்கு சென்னை உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு செவ்வாய்க் கிழமை விசாரணைக்கு வந்தது.


அப்போது ஆஜரான தலைமை வழக்குரைஞா் ஆா். சண்முகசுந்தரம், ஏற்கெனவே செலவழித்த பணத்தை வீணாக்காத வகையில், முந்தைய முதல்வா்கள் படங்களுடன் அச்சடிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள், நோட்டுகளை வீணாக்காமல் அச்சடிக்கப்பட்ட அதே நிலையில் மாணவா்களுக்கு வழங்கப்படும் என்று முதல்வா் அறிவித்துள்ளாா். அதன் அடிப்படையில் மாணவா்களுக்கு அந்த புத்தகங்கள் தீா்ந்துபோகும் வரை தொடா்ந்து பயன்படுத்தப்படும்.


எதிா்காலத்தில் இதுபோன்ற பாடப் புத்தக பைகளில், தனது புகைப்படங்கள் வெளியிடப்படுவதை முதல்வா் விரும்பவில்லை என்றாா்.


இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், வாக்களிக்கும் உரிமை இல்லாத பள்ளி செல்லும் குழந்தைகளுக்கான புத்தகங்கள், பைகளில் முதல்வா்கள் புகைப்படங்கள் இடம்பெறக்கூடாது. எந்தவொரு அரசியல்வாதியும் தனிப்பட்ட நலன்களுக்காக, பொது நிதியை தவறாகப் பயன்படுத்த முடியாது. எதிா் காலத்தில் இதுபோன்ற நடைமுறை தொடராமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.


விளம்பரப் பதாகைகள், பிற பொருட்களில் அரசியல் தலைவா்களின் விளம்பர நோக்கங்களுக்காக பொது நிதி செலவழிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய, தீவிர அக்கறையும், எச்சரிக்கையும் எடுக்கப்பட வேண்டும் என்று அரசுக்கு அறிவுறுத்துவதைத் தவிர வேறு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்பட வேண்டியதில்லை.


இருப்பினும், முதல்வரின் புகைப்படங்கள் செய்தித்தாள்கள், விளம்பரப் பதாகைகள், விளம்பரங்களில் இடம்பெறலாம். ஆனால் பாட புத்தகங்கள், எந்த கல்வி சாா்ந்த பொருட்களிலும் பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவில் குறிப்பிட்டனா்.

07 September 2021

உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் குறித்து தமிழக அரசு தலைமைச் செயலரின் வழிகாட்டு நெறிமுறைகள்.

உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் குறித்து தமிழக அரசு தலைமைச் செயலரின் கடிதம் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் ஊக்க ஊதியம் குறித்து மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளது. 

Download Order 👇👇👇

Incentive Related Order

தமிழக அரசு பள்ளிகளில் செப்டம்பர் 30 வரை மாணவர் சேர்க்கை – பள்ளிக் கல்வித்துறை அனுமதி.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தனியார் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேருவதன் காரணமாக இந்த மாதம் இறுதி வரை சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மாணவர் சேர்க்கை :


நாடு முழுவதும் கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தேர்வுகள் நடத்தப்பட்டது. 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.


தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், ஜூன் முதல் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அனைத்து வகுப்புகளிலும் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், 9ம் வகுப்பு வரையிலானோருக்கு, மாற்று சான்றிதழ் இல்லாவிட்டாலும், ‘எமிஸ்’ என்ற கல்வி மேலாண்மை தளத்தின் சிறப்பு எண் இருந்தால் போதும். அந்த எண்ணில் உள்ள விவரங்கள் அடிப்படையில், மாணவர்களை சேர்க்கலாம் என்று தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 25% மாணவர்களை கூடுதலாக சேர்க்க உயர்கல்வித்துறை அனுமதி.

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 25% மாணவர்களை கூடுதலாக சேர்க்க உயர்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு பல்கலைக்கழகங்களிடம் கல்லூரிகள் அனுமதி பெற வேண்டும் என உயர்கல்வித்துறை தெரிவித்து உள்ளது. 

10, 11 ஆம் வகுப்புகளுக்கான துணைத் தேர்வு நுழைவுச்சீட்டு வெளியீடு.

10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு தற்போது நடைபெறவுள்ள துணைத் தேர்வுகளுக்கான நுழைவுச்சீட்டு (ஹால் டிக்கெட்) வெளியிடப்பட உள்ளது. நாளை காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

06 September 2021

கல்வி ஆண்டு தொடங்குவதற்கு ஆறு மாதத்திற்கு முன்பே திட்டங்கள் வகுக்கப்பட்டு உரிய நேரத்தில் மடிக்கணினி வழங்கப்படும் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கருத்து

2017-18 கல்வியாண்டில் பயின்ற 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடர்பாக மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் வி.பி. நாகைமாலி மற்றும் மா. சின்னதுரை கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இதற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது, 2011-12 முதல் 2019-20ம் ஆண்டு முடிய இத்திட்டத்தின் கீழ் 4571675 மாணவர்கள் மடிக்கணினி பெற்றுள்ளனர். இதற்காக 6349.63 கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது. 

பள்ளிகளின் வேலை நேரம் குறித்த குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி : கல்வித் துறை அதிகாரிகள் விளக்கம்.

தமிழகத்தில் கரோனா பரவல் சற்று தணிந்துள்ளதால் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. முதல் கட்டமாக 9 முதல் 12-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு மட்டும் சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் மற்றும் பள்ளிக்கு வருகை தரும் மாணவர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை கண்டிப்பாக Covid - 19 SWAB TEST மேற்கொள்ள திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் 01.09.2021 முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. மாணவர்களுக்கும் , ஆசிரியர்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படா வண்ணம் மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் கணக்கெடுப்புப் பணி தீவிரம் : அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் விவரங்களை பள்ளிக்கல்வித் துறை கணக்கெடுத்து வருகிறது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில், அனைத்துமாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம் :

Featured Post

சிந்தனைக் களம் - 3

வெற்றிக்குத் தேவை இலக்கு வெற்றி என்பது தேர்ந்தெடுத்த ஒரு இலக்கை அடைவதன் மூலம் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் மகிழ்ச்சியடையச் செய்யும் ஒ...

Popular Posts