Home

17 December 2024

Income Tax Form FY 2024 - 25 (Version 2.0) Date 20/12/2024 Old Regime and New Regime - By Arivazhagan

Income Tax Form Latest Version 2.0 (Old Regime and New Regime) Financial Year 2024-25 (AY 2025-26) Auto calculation is enabled in this Software. Last Updated 20/12/2024


13 October 2024

சிந்தனைக் களம் - 3

வெற்றிக்குத் தேவை இலக்கு

வெற்றி என்பது தேர்ந்தெடுத்த ஒரு இலக்கை அடைவதன் மூலம் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் மகிழ்ச்சியடையச் செய்யும் ஒரு செயலாகும். தான் வெற்றிபெற வேண்டும் என்று நினைக்காத மனிதர்களே இல்லை. எனவே வெற்றியானது ஒவ்வொரு மனிதனுக்குமான அடிப்படைத் தேவையாக உள்ளது. 


ஒருவன் வெற்றிபெற வேண்டுமெனில் முதலில் இலக்கைத் தேர்வு செய்ய வேண்டும். பின்னர் இலக்கை அடைவதற்கான சரியான வழியை கண்டறியும் முயற்சியில் இறங்க வேண்டும். தொடர் பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் இலக்கை அடைந்து இறுதியாக வெற்றியைச் சுவைக்க முடியும். முயற்சியும் பயிற்சியும் சரியாக அமைந்தால் நூறு சதவீதம் வெற்றி நிச்சயம். 


இதற்கு கிரிக்கெட் விளையாடும் ஒரு பந்துவீச்சாளரை நாம் உதாரணமாகச் சொல்லலாம். பேட்ஸ்மேனுக்கு பின்புறம் உள்ள குச்சிகளைத் தாக்க வேண்டும் என்பதே ஒரு பந்து வீச்சாளரின் இலக்கு. புதிதாகப் பந்துவீசப் பழகும் ஒருவர் முதல்முறையே நேராக குச்சிகளை தாக்குவதில்லை. முதல்முறை பந்துவீச முயற்சி செய்து பார்க்கிறார். அது அகலப் பந்தாகச் (வைட் பால்) சென்றுவிடுகிறது. ஆனாலும் அவர் பின்வாங்கவில்லை. பயிற்சியாளர் ஒருவரின் உதவியோடு அதை தொடர்ந்து முயற்சி செய்து பார்க்கிறார். அதன்மூலம் அவருக்கு முழுமையானப் பயிற்சி கிடைக்கிறது. இறுதியில் பந்து இலக்கைத் தாக்குகிறது. குச்சிகள் சிதறுகின்றன. முயற்சியும் பயிற்சியும் சரியாக அமைந்ததால் அவருக்கு வெற்றி கிடைத்தது. என்னால் முடியவில்லை என்று முதல் முயற்சியிலேயே பின்வாங்கி இருந்தால் இந்த வெற்றி அவருக்கு கிடைக்காமல் போயிருக்கும். 


நான் ஒரு மாவட்ட ஆட்சியராக வேண்டும், காவல்துறை அதிகாரியாக வேண்டும், மருத்துவராக வேண்டும், ஆசிரியராக வேண்டும், வங்கி மேலாளராக வேண்டும், விளையாட்டு வீரராக வேண்டும். இப்படி நீ என்னவாக வேண்டும் என்ற ஒரு இலக்கை முதலில் தேர்வு செய்ய வேண்டும். பிறகு ஆசிரியர்களின் வழிகாட்டுதல்படி முயற்சியும் பயிற்சியும் செய்தால் எதிர்காலத்தில் நாம் ஒரு நினைத்த பதவியை அடையலாம். 


நாளை நீ என்னவாக வேண்டும் என்பதை இன்றே தேர்வு செய்ய வேண்டும். காலம் கடந்த பிறகு சிந்திப்பது பயனற்ற ஒன்றாக மாறிவிடும். ஏனென்றால் ஒவ்வொரு தேர்வுக்கும் ஒரு குறிப்பிட்ட வயதுத் தகுதி நிர்ணயிக்கப்படுகிறது. உதாரணமாக ஐ.ஏ.எஸ் தேர்வு 35 வயதுக்கு மேல் எழுத முடியாது. அதனால் 35 வயதிற்கு மேல் நான் ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்று சிந்திக்க முடியாது. அப்போது அதற்கான வயதுத் தகுதி முடிந்துவிட்டு இருக்கும். 

அ. அறிவழகன் M.A, M.Phil, M.Ed,

வரலாறு முதுகலை ஆசிரியர் 


06 August 2024

முக்கிய நிகழ்வுகள் - ஆகஸ்ட் 06

ஆகஸ்ட் 06

ஹிரோசிமா தினம். இரண்டாம் உலக யுத்தத்தின்போது அமெரிக்கா, ஜப்பானில் உள்ள ஹிரோசிமா என்னும் நகரத்தின் மீது 1945ம் ஆண்டு ஆகஸ்டு 6 அன்று லிட்டில் பாய் (Little Boy) என்ற அணுகுண்டை வீசியது. குண்டு விழுந்த சில நொடிகளில் மக்கள், கட்டிடங்கள், இரும்புகள் உள்பட அனைத்தும் ஆவியாயின. 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் இறந்தார்கள். இந்தப் கொடுமை மீண்டும் நிகழாமல் இருக்க இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.


அலெக்சாண்டர் பிளெமிங் பிறந்த தினம் ஆகஸ்ட் 6, 1881. ஸ்காட்லாந்து நாட்டில் பிறந்தார். நுண்ணுயிர் கொல்லியான சிதைநொதியைக் கண்டுபிடித்தவர். மேலும், நுண்ணுயிர் கொல்லியான பெனிசிலினை பெனிசிலியம் நொடேடம் (Penicillium notatum) என்ற பூஞ்சையிலிருந்து பிரித்தெடுத்தார்.


ஜெர்மன் விஞ்ஞானி பால் என்ரிக் என்பவர் ‘சிஃபிலிஸ்’ என்ற கொடிய பால்வினை நோய்க்கு ‘ஸல்வார்ஸன்’ என்ற மருந்தைக் கண்டுபிடித்திருந்தார்.


1996 – செவ்வாயில் இருந்து தோன்றியதாகக் கருதப்படும் ஏ.எல்.எச் 84001 என்ற விண்கல் ஆரம்பகால உயிரினங்கள் பற்றிய தகவலைக் கொண்டிருப்பதாக நாசா அறிவித்தது.


1961 – வஸ்தோக் 2: முதன்முதலாக ஒரு முழு நாள் மனிதன் விண்வெளியில் இருந்த பெருமையை சோவியத் விண்வெளி வீரர் கேர்மான் டீட்டோவ் பெற்றார்.


ஒரு இந்திய சுதந்திர போராட்ட வீராங்கனை மற்றும் இந்திய தேசிய காங்கிரசைச் சேர்ந்த அரசியல்வாதியான இவர் சென்னை மாகாண சட்டமன்றத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் உறுப்பினரும் மற்றும் சென்னை மாகாணத்தின் முதல் பெண் அமைச்சருமான ருக்மிணி லட்சுமிபதி 1951 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் நாள் இறந்தார்.

04 August 2024

முக்கிய நிகழ்வுகள் - ஆகஸ்ட் 04

ஆகஸ்ட் 04

சிம்லா ஒப்பந்தம் வங்காளதேச விடுதலைப் போரினைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான்  அரசுகளுக்கிடையே ராஜதந்திர நல்லுறவைகளை மேம்படுத்துவதற்காக, இந்தியாவின் இமாசலப் பிரதேச மாநிலத் தலைநகரான சிம்லாவில் இந்திய அரசுக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் இடையே ஜூலை 28, 1972 இல் கையெழுத்தானது. இது 1971 இல் நடந்த வங்காள தேச விடுதலைப் போருக்கு பின்னர் ஏற்படுத்தப்பட்டது. மேலும் இந்த ஒப்பந்தம் வங்காளதேச சுதந்திரத்திற்கு வழிவகுத்தது. இத்திட்டம் நடைமுறைக்கு வந்த தினம் ஆகஸ்ட் 04, 1972.


பீனிக்ஸ்  என்பது செவ்வாய் கோளில் ஆய்வுகள் மேற்கொள்ளுவதற்காக விண்ணுக்கு ஏவப்பட்ட ஆளில்லா தானியங்கி தரையுளவி ஆகும். செவ்வாய்க் கிரகத்தில் ஆய்வுகள் நடத்த தேவையான பல கருவிகள் இக்கலத்தில் உள்ளன. இவற்றைக் கொண்டு செவ்வாயில் உயிரினங்கள் மற்றும் நீர் போன்றவற்றின் வரலாறுகள் பற்றியும் இவற்றைக் கொண்டு ஆய்வுகள் நடத்த அறிவியலாளர்கள் திட்டமிட்டுள்ளனர். நாசா ஆய்வு மையத்தின் ஆதரவுடன் அரிசோனா பல்கலைக்கழகத்தினால் ஆகஸ்ட் 4, 2007 05:26 நிமிட  நேரத்திற்கு டெல்டா II ராக்கெட் மூலம் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் கேப்கெனரவல் விமானப்படைத் தளத்தில் இருந்து விண்ணுக்கு வெற்றிகரமாக ஏவப்பட்ட தினம் ஆகஸ்ட் 04, 2007.


அமெரிக்க அரசியல்வாதியும், ஐக்கிய அமெரிக்காவின் 44 வது அரசுத் தலைவருமான  பராக் உசைன் ஒபாமா  ஆகஸ்ட் 4 ஆம் தேதி, 1961 ஆம் ஆண்டு பிறந்தார்.


1972 – உகாண்டாவின் இராணுவத் தலைவர் இடி அமீன் அங்கு வாழும் ஆசிய நாட்டவர்கள அனைவரையும் 90 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற ஆணையிட்டார்.


புனித ஜான் பாப்டிஸ்ட் மரிய வியான்னி .பிரான்சு நாட்டில் உள்ள ஆர்ஸ் எனும் சிற்றூரின் பங்கு குருவாய் இருந்தவர். பிரெஞ்சுப் புரட்சியின் காரணமாக விசுவாசமும் இறை நம்பிக்கையும் குறைந்து போய் இருந்த அப்பங்கு, இவரின் கடின உழைப்பால் மனம் மாறியது என்பர். மரியன்னை மீதும் நற்கருணை மீதும் மிகுந்த பக்தி கொண்டிருந்த இவர், ஒப்புரவு அருட்சாதனத்தில் மிகுந்த நேரத்தை செலவிட்டார். இவர் கத்தோலிக்க குருக்களின் பாதுகாவலர் ஆவார். ஆகஸ்ட் 4, 1859 இல் இறந்தார்.

03 August 2024

முக்கிய நிகழ்வுகள் - ஆகஸ்ட் 03

ஆகஸ்ட் 03 

காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் (Gandhigram Rural University) இந்தியாவின் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். தமிழ்நாட்டிலுள்ள திண்டுக்கல் நகருக்கு அருகில் இப்பல்கலைக் கழகம் அமைந்துள்ளது. முனைவர் டி.எசு. சௌந்தரம் மற்றும் முனைவர் சி.ராமச்சந்திரன் ஆகியோர் இணைந்து இந்நிறுவனத்தை உருவாக்கினர். காந்தி கிராம கிராமிய உயர் கல்வி நிறுவனம் 1956 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்நிறுவனம் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் அறிவு மற்றும் வேலை ஆகியவை தனித்தனியானவை அல்ல என்று குறிப்பிடுகின்ற ஒரு கொள்கையால் அமைந்த சர்வோதயக் கல்வி முறையைத் தொடர்வதற்காக இதை அவர்கள் உருவாக்கினர். 1976, ஆகஸ்ட் மாதம் 3 ஆம் நாள் மத்திய அரசால் தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஒரு பல்கலைக்கழகமாக காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் மாறியது. 


ஸ்ரீ பிரகாசா ஓர் விடுதலைப் போராட்ட வீரரும் அரசியல்வாதியும் சிறந்த நிர்வாகியும் ஆவார். இந்தியாவின் முதல் பேராளராக பாக்கித்தானில் 1947 முதல் 1949 வரை பணியாற்றியவர். 1949 முதல் 1950 வரை அசாமிலும் 1952 முதல் 1956 வரை சென்னை மாகாணத்திலும் 1956 முதல் 1962 வரை மகாராட்டிர மாநிலத்திலும் ஆளுநராகப் பணியாற்றினார். இவர் பிறந்த தினம் ஆகஸ்ட் 03, 1890.


அலாவுதின் பாமன் ஷா என்பவரின், இயற்பெயர் ஜாபர் கான் ஆகும். இவர் ஆப்கானின் 34 மாகாணங்களில் ஒன்றான, பாதாக்சானின் வழிவந்தவர். இவர் ஈரானின் பாரசீக மொழி பேசும் மக்களான, தத்சிக் பரம்பரையைச் சார்ந்தவர் என வரலாற்று ஆய்வுகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இவர், பாரசீக அரசரான பாமனின் வழித்தோன்றல் என கருதப்பட்டார். இவர் பிறந்த தினம் ஆகஸ்ட் 03, 1347.


தேவதாஸ் காந்தி என்பவர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் நான்காவது மகனாவார். இவர் பிறந்தது தென்னாப்பிரிக்காவில் இவர் தன் பெற்றோருடன் இந்தியா திரும்பும்போது இளைஞனாக வளர்ந்திருந்தார். இவர் தன் தந்தையின் இயக்கத்தில் கலந்துகொண்டார். தன் வாழ்நாளில் பல காலம் சிறையில் கழித்தார். இவர் ஒரு பத்திரிக்கையாளராகவும் இருந்தார். இந்துஸ்தான் டைம்ஸ் இதழின் ஆசிரியராக இருந்தார். இவர் இறந்த தினம் ஆகஸ்ட் 03, 1957.


சுவாமி சின்மாயானந்தா ஒரு இந்திய ஆன்மீகவாதி. சின்மயா மிஷன் என்ற அமைப்பைத் தொடங்கி அதன் மூலம் உலகெங்கும் ஆன்மீக வேதாந்த கருத்துக்களை பரப்பியவர். இவரது இயற்பெயர் பாலகிருஷ்ண மேனன் என்பதாகும். லக்னோ பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை முடித்து வெளியேறியவர் ஊடகவியல் துறையில் நுழைந்து இந்திய அரசியல், பொருளாதார மற்றும் சமூகவியலில் பணிகளை ஆற்ற முனைந்தார். இந்திய விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். பின்னர் "நாஷ்னால் ஹெரால்ட்" என்ற பத்திரிகையில் பணியாற்றினார். ரிசிகேஷம் சென்று சுவாமி சிவானந்தரைச் சந்தித்தார். அன்றிலிருந்து அவர் இந்து சமய ஆன்மீகத்துறையில் அதிக அக்கறை கொண்டார். சுவாமி சிவானந்தரினால் 1949 ஆம் ஆண்டு பெப்ரவரி 25 சிவராத்திரி நாளன்று பாலகிருஷ்ண மேனன் சந்நியாச தீட்சை பெற்றுக் கொண்டு "சுவாமி சின்மயானந்தா" என்ற பெயரையும் பெற்றார். இவர் இறந்த தினம் ஆகஸ்ட் 03, 1993.





02 August 2024

கைப்பிள்ளைக்கு மவுசு அதிகம்.

ஒரு கண்ணில் வெண்ணையும் மறு கண்ணில் சுண்ணாம்பும் வைத்தால் எப்படி லாபமாகும்? 

இருவர் சொல்வதை கேட்டு ஒருவரிடம் வஞ்சம் பாராட்டினால் எப்படி நியாயமாகும்? 

வளைந்து கொடுப்பதால் மூங்கிலை உடைத்துவிட நினைப்பது எப்படி முறையாகும்? 

உண்மையாக உழைப்பவரை பார்த்து குறைத்து பேசினால் தலைக்கு எப்படி அழகாகும்? 

எப்படி இருந்தாலும் சும்மா சுற்றும் கைப்பிள்ளைக்குத் தான் மவுசு அதிகம். ஆனால் காலம் பதில் சொல்லும். 




சிந்தனைக் களம் 2

உருவ கேலி கூடாது

ஒருவருடைய உருவத்தை வைத்து கேலி செய்யும் பழக்கம் பெரும்பாலான நபர்களிடம் உள்ளது. ஆனால் அப்படி செய்வது ஒரு தவறான செயலாகும். உருவத்தை வைத்து ஒருவரை மதிப்பிட முடியாது. அவருடைய குணத்தை வைத்துத் தான் மதிப்பிட வேண்டும். 


அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது. அப்படியாகினும் குறை இல்லாமல் பிறத்தல் அதனினும் அரிது. அதனால் அனைவருமே ஏதோ வகையில் ஏதோ ஒரு குறையுடன்தான் இருக்கிறார்கள். கண், காது, கால் ஆகியற்றில் திறன் குறைபாடுடன் இருப்பது மட்டுமே மனிதனுக்கு குறையல்ல. 


உயரமாகவோ அல்லது குள்ளமாகவோ இருப்பது, குண்டாகவோ அல்லது ஒல்லியாகவோ இருப்பது, வெள்ளையாகவோ அல்லது கருப்பாகவோ இருப்பது, பல் வெளியே நீண்டோ அல்லது பல்லே இல்லாமலோ இருப்பது, கண் பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ இருப்பது, காது அகலமாகவோ அல்லது குறுகலாகவோ இருப்பது என இந்த பட்டியலில் இல்லாத நபர்களும் இல்லை; இதை நினைத்து கவலைப்படாத மனிதர்களும் இல்லை.  இவை அனைத்தும் ஏதோ ஒரு வகையில் குறை என்பதால்தான் அதை நினைத்து நாம் கவலைப்படுகிறோம். அதனால் அடுத்தவர் உருவத்தைப் பார்த்து கேலி செய்வதற்கு முன்னால் நம்மை பற்றியும் ஒருமுறை சிந்துத்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி சிந்தித்தால் நமக்கு கேலி செய்யும் எண்ணமே வராது. 


அதேபோல் வாய்பேச முடியாதவர்கள் எனச் சிலரைப் பார்த்து சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் வாய்பேச முடியாதவர்கள் அல்ல, காது கேளாதவர்கள். காது கேளாமல் இருப்பதால் நாம் சொல்லும் உச்சரிப்புகள் அவர்களுக்கு கேட்பதில்லை. அதனால் அதை திருப்பிச் சொல்லத் தெரியவில்லை. எனவே உலகில் வாய்பேச முடியாதவர்கள் என்று யாருமே இல்லை என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். 



முக்கிய நிகழ்வுகள் - ஆகஸ்ட் 02

ஆகஸ்ட் 02

ராவ் சாகேப் ஆபிரகாம் பண்டிதர் புகழ்பெற்ற தமிழிசைக் கலைஞர், சித்த மருத்துவர் மற்றும் தமிழ் கிறித்தவ கவிஞர். ஆரம்ப காலத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய ஆபிரகாம் பண்டிதர், பின் தமிழ் இலக்கியத்திலும், தமிழ் மருத்துவத்திலும் கொண்ட ஆர்வத்தினால், முழுநேர மருத்துவராகப் பயிற்சி பெற்றுப் பணியாற்றலானார். ஆபிரகாம் பண்டிதர் தமிழிசைக்கு ஆற்றிய பணி சிறப்பானது. பழந்தமிழ் இலக்கியங்களில் தமிழிசையை ஆய்ந்த ஆபிரகாம் பண்டிதரின் ஆராய்ச்சி நூலான கருணாமிர்த சாகரத் திரட்டு, தமிழ் இசை வரலாறு, தமிழ் மருத்துவம், இசையாளர்கள் பற்றிய ஒரு கலைக்களஞ்சியமாக நோக்கப்படுகிறது. இவர் பிறந்த தினம் ஆகஸ்ட் 2, 1859.


உலக ஆங்கிலோ இந்தியர்கள் தினம். அனைத்து இந்திய ஆங்கிலோ மன்றத்தின் ஜாம்ஷெட்பூர் பிரிவினரால் உலக ஆங்கிலோ இந்தியர்கள் கொண்டாடப்பட்டது.


1790 – ஐக்கிய அமெரிக்காவில் முதன் முறையாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டது.


அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் ஓர் அறிவியலாளர், பொறியாளர், கண்டுபிடிப்பாளர், ஆசிரியர் மற்றும் அறிவியல் அறிஞர் ஆவார். தொலைபேசியைக் கண்டுபிடித்ததற்காக அறியப்படுகிறார். தனது இளமையில் பிரிட்டன் குடிமகனாக இருந்தார். பின்னர் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார்." இவரது தாயாரும் மனைவியும் செவிடராதலினால் இவரது ஆய்விற்கு இது ஓர் உந்து சக்தியாக அமைந்திருக்கலாம். இவரது ஆய்வுகள் ஊடாக 1876 ஆம் ஆண்டு தொலைபேசி உருவாக்கப்பட்டது. இவர் பெல் தொலைபேசி நிறுவனத்தின் நிறுவனரும் ஆவார். 1922 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி அலெக்சாண்டர் கிரகாம் பெல் இறந்தார்.

01 August 2024

முக்கிய நிகழ்வுகள் - ஆகஸ்ட் 01

ஆகஸ்ட் 01

உலக சாரணர் தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1ஆம் தேதி உலக சாரணர் தினம் கொண்டாடப்படுகிறது. உலகளாவிய சாரணியத்தின் இலட்சியங்களையும், நோக்கங்களையும் நினைவுகூறும் வகையில் உலக சாரணர் தினம் உலகெங்கும் அனுசரிக்கப்படுகிறது. 1907ஆம் ஆண்டு ஜுலை 28ஆம் தேதி சாரண இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படும் பேடன் பவல் என்பவரால் 20 இளைஞர்களுடன் சாரணர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.


பொதுவாக சில நாடுகளில் ஜுலை மாத இறுதி வாரமும், ஆகஸ்ட் முதலாம் வாரமும் சாரணியத்தைப் பொருத்தவரையில் முக்கியமான நாட்களாகும்.


2008 – ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி உலகின் மிக வேகமான தொடருந்து சேவை சீனாவில் பெய்ஜிங், தியான்ஜின் ஆகிய நகரங்களுக்கிடையே ஆரம்பிக்கப்பட்டது.


1952 – இதே நாளில் தொடருந்து நிலையங்களில் இந்தி அழிப்புப் போராட்டத்தை தந்தை பெரியார் துவக்கி வைத்தார்.


கமலா நேரு என்பவர், இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், இந்தியாவின் முதல் பிரதமருமான ஜவஹர்லால் நேருவின் மனைவியும், இந்தியாவின் முதல் பெண் பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் தாயாரும் ஆவார். இவர் மிகவும் உண்மையானவராகவும், தேசபக்தி மிக்கவராகவும், எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவராகவும் இருந்தார். கமலா நேரு சிறிது காலம் சபர்மதி ஆசிரமத்தில் தங்கியிருந்த போது அவருக்கு கஸ்தூரிபாய் காந்தியுடனும் பிரபாவதி தேவியுடனும் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. இவர் பிறந்த தினம் ஆகஸ்ட் 01, 1899.


இந்திய விடுதலைப் போராட்ட வீரரான லோகமான்ய கேசவ் பால கங்காதர திலகர் 1920 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 இல் இறந்தார்.


டெல்லி கணேஷ் ஆகஸ்ட் 1, 1944 ல் திருநெல்வேலியில் பிறந்தார். மூத்த தமிழ் நடிகரான இவர் பெரும்பாலும் குணசித்திர வேடங்களில் காணப்படும் ஒரு தமிழ் திரைப்பட நடிகர். கமலஹாசன் உடன் இணைந்து அவர் நடித்த நகைச்சுவைத் திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர். அவரது பாத்திரம் நாயகன் மற்றும் மைக்கேல் மதன காமராஜன் திரைப்படங்களில் மிகவும் சிறப்பாக அறியப்பட்டது.

27 July 2024

சிந்தனைக் களம் 1

கல் எறிதல் கூடாது

கல் எறிந்தால் எங்கு, எப்போது, யார் மேல் விழும் என்றே நம்மால் கணிக்க முடியாது. எதிர்பாராத விதமாக திடீரென ஒருவர் குறுக்கே வந்துவிட்டால் அவரது கதை முடிந்தது. அதனால்தான் கல் எறிதல் கூடாது என்று சொல்வார்கள். 

07 July 2024

10th Social Science PPT Work - TM and EM

10 ஆம் வகுப்பு / 10th STD 

சமூக அறிவியல் / Social Science

PPT Work Thanks to

S. Rajeswari Madam

Chengalpet District

10th Std Social Science - Economics PPT - Unit 5

10 ஆம் வகுப்பு - சமூக அறிவியல்

பொருளியல் - அலகு 5

5. தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்

Download Link 👇👇👇

10th Economics PPT - Unit 5 TM


10th STD - Social Science

Economics - Unit 5

5. Industrial Clusters in Tamil Nadu

Download Link 👇👇👇

10th Economics PPT - Unit 5 EM





 

 

10th Std Social Science - Economics PPT - Unit 4

10 ஆம் வகுப்பு - சமூக அறிவியல்

பொருளியல் - அலகு 4

4. அரசாங்கமும் வரிகளும்

Download Link 👇👇👇

10th Economics PPT - Unit 4 TM


10th STD - Social Science

Economics - Unit 4

4. Government and Taxes

Download Link 👇👇👇

10th Economics PPT - Unit 4 EM





 

 

10th Std Social Science - Economics PPT - Unit 3

10 ஆம் வகுப்பு - சமூக அறிவியல்

பொருளியல் - அலகு 3

3. உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து

Download Link 👇👇👇

10th Economics PPT - Unit 3 TM


10th STD - Social Science

Economics - Unit 3

3. Food Security and Nutrition

Download Link 👇👇👇

10th Economics PPT - Unit 3 EM





 

 

10th Std Social Science - Economics PPT - Unit 2

10 ஆம் வகுப்பு - சமூக அறிவியல்

பொருளியல் - அலகு 2

2. உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்

Download Link 👇👇👇

10th Economics PPT - Unit 2 TM


10th STD - Social Science

Economics - Unit 2

2. Globalization and Trade

Download Link 👇👇👇

10th Economics PPT - Unit 2 EM





 

 

10th Std Social Science - Economics PPT - Unit 1

10 ஆம் வகுப்பு - சமூக அறிவியல்

பொருளியல் - அலகு 1

1. மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி : ஓர் அறிமுகம்

Download Link 👇👇👇

10th Economics PPT - Unit 1 TM


10th STD - Social Science

Economics - Unit 1

1. Gross Domestic Product and its Growth : an Introduction

Download Link 👇👇👇

10th Economics PPT - Unit 1 EM





 

 

10th Std Social Science - Civics PPT - Unit 5

10 ஆம் வகுப்பு - சமூக அறிவியல்

குடிமையியல் - அலகு 5

5. இந்தியாவின் சர்வதேச உறவுகள்

Download Link 👇👇👇

10th Civics PPT - Unit 5 TM


10th STD - Social Science

Civics - Unit 5

5. India’s International Relations

Download Link 👇👇👇

10th Civics PPT - Unit 5 EM





 

 

10th Std Social Science - Civics PPT - Unit 4

10 ஆம் வகுப்பு - சமூக அறிவியல்

குடிமையியல் - அலகு 4

4. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

Download Link 👇👇👇

10th Civics PPT - Unit 4 TM


10th STD - Social Science

Civics - Unit 4

4. India’s Foreign Policy

Download Link 👇👇👇

10th Civics PPT - Unit 4 EM





 

 

Featured Post

Income Tax Form FY 2024 - 25 (Version 2.0) Date 20/12/2024 Old Regime and New Regime - By Arivazhagan

Income Tax Form Latest Version 2.0  (Old Regime and New Regime)  Financial Year 2024-25 (AY 2025-26)  Auto calculation is enabled in this So...

Popular Posts