வாழ்க்கையில் நமக்கு எவ்வளவோ துன்பங்கள் (கஷ்டங்கள்) இருக்கும். ஆனால் நாம் செய்யும் வேலையில் வெற்றி பெறும் போது நம்முடைய துன்பங்கள் எல்லாம் பறந்து போகிறது. அந்த ஒரு கனம் எவ்வளவு பெரிய துன்பமாக இருந்தாலும் அதை மறைந்து ஆனந்தத்தை அனுபவிக்கிறோம். அதனால் துன்பங்களை நினைத்து கவலைப்படாமல், நம்முடைய வெற்றியை நோக்கி பயணிப்பதே வாழ்கையை மாற்றும்.
வெற்றிக்கும் மரியாதைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. வெற்றியும் தோல்வியும் ஒருவர் மீதுள்ள மரியாதை எப்படி மாற்றுகிறது என்பதை இரண்டு சிங்கத்தின் கதைகள் வாயிலாகப் பார்க்கலாம் வாங்க.
சிங்கம் தன்னுடைய குகைக்குள் இருக்கின்ற வரைக்கும் அதற்கு நல்ல மரியாதை கிடைக்கிறது. முதலில் ஒரு சிங்கம் வேட்டைக்குச் செல்கிறது. காட்டில் மேய்ந்துக் கொண்டிருந்த மான் ஒன்றை வேட்டையாடுகிறது. அதைப் பார்த்த மற்ற விலங்குகள் நடுங்குகிறது. வெற்றி பெற்ற சிங்கத்திற்கு அந்த காட்டிற்குள் செல்லும் இடமெல்லாம் இராஜ மரியாதை கிடைக்கிறது.
இப்போது இரண்டாவது சிங்கம் வேட்டையாட காட்டிற்குச் செல்கிறது. கண்ணில் தென்பட்ட விலங்குகளை எல்லாம் வேட்டையாட முயல்கிறது. ஆனால் எதிலும் வெற்றி கிடைக்கவில்லை. இதைப் பார்த்த மற்ற விலங்குகள் சிங்கத்தை ஏளனம் செய்கிறது. தோல்வியடைந்த சிங்கத்திற்கு அந்த காட்டிற்குள் செல்லும் இடமெல்லாம் அவ மரியாதை கிடைக்கிறது.
இதைப் போலத் தான் நம்முடைய வாழ்க்கையிலும் நடைபெறுகிறது. பள்ளிக்குள் இருக்கும் வரை மாணவன் என்ற மரியாதை கிடைக்கிறது. தேர்விலும் வாழ்க்கையிலும் வெற்றி பெற்ற பிறகு இராஜ மரியாதை கிடைக்கிறது. வெற்றி பெறாதவருக்கு எந்தவித மரியாதையும் கிடைப்பதில்லை. இதை உணர்ந்து மாணவர்கள் தேர்வில் வெற்றிபெற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.
No comments:
Post a Comment