ஆசிரியர் தினம்:
ஆசிரியர் தினம் என்பது கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பல்வேறு நாடுகளில் பல்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் முனைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் நாள் ஆசிரியர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இவர் நாட்டின் உயர் பதவியில் இருந்ததோடு மட்டுமல்லாமல் சிறந்த ஆசிரியராகவும் தனது பங்களிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
குடியரசுத் தலைவர் வாழ்த்து.
செப்டம்பர் 5 ஆம் தேதி இந்தியாவில் ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், நாட்டில் உள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். அந்த செய்திக் குறிப்பில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அனைத்து ஆசிரியர்களுக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நம் குழந்தைகளின் அறிவாற்றல் மற்றும் ஒழுக்க மேம்பாட்டில் முன்னிலை வகிக்கும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பை கௌரவிக்கும் தருணமாக ஆசிரியர் தினம் அமைகிறது.
இந்திய பாரம்பரியத்தில் இறைவனுக்கு சமமாக ஆசிரியர்கள் கருதப்படுகிறார்கள். மேலும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஆன்லைன் வழி கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட போது ஆசிரியர்கள் மிகவும் அரும்பாடுபட்டு மாணவர்களுக்கு பாடங்களை நடத்தினார்கள். வலுவான மற்றும் வளமான நாட்டின் கட்டமைப்பை நோக்கிய ஆசிரியர்களின் உழைப்பை வழங்கி வரும் ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்திற்கு இந்தத் தருணத்தில் நாம் அனைவரும் நமது நன்றியைத் தெரிவிப்போம் என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment