ஆகஸ்ட் 02
ராவ் சாகேப் ஆபிரகாம் பண்டிதர் புகழ்பெற்ற தமிழிசைக் கலைஞர், சித்த மருத்துவர் மற்றும் தமிழ் கிறித்தவ கவிஞர். ஆரம்ப காலத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய ஆபிரகாம் பண்டிதர், பின் தமிழ் இலக்கியத்திலும், தமிழ் மருத்துவத்திலும் கொண்ட ஆர்வத்தினால், முழுநேர மருத்துவராகப் பயிற்சி பெற்றுப் பணியாற்றலானார். ஆபிரகாம் பண்டிதர் தமிழிசைக்கு ஆற்றிய பணி சிறப்பானது. பழந்தமிழ் இலக்கியங்களில் தமிழிசையை ஆய்ந்த ஆபிரகாம் பண்டிதரின் ஆராய்ச்சி நூலான கருணாமிர்த சாகரத் திரட்டு, தமிழ் இசை வரலாறு, தமிழ் மருத்துவம், இசையாளர்கள் பற்றிய ஒரு கலைக்களஞ்சியமாக நோக்கப்படுகிறது. இவர் பிறந்த தினம் ஆகஸ்ட் 2, 1859.
உலக ஆங்கிலோ இந்தியர்கள் தினம். அனைத்து இந்திய ஆங்கிலோ மன்றத்தின் ஜாம்ஷெட்பூர் பிரிவினரால் உலக ஆங்கிலோ இந்தியர்கள் கொண்டாடப்பட்டது.
1790 – ஐக்கிய அமெரிக்காவில் முதன் முறையாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டது.
அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் ஓர் அறிவியலாளர், பொறியாளர், கண்டுபிடிப்பாளர், ஆசிரியர் மற்றும் அறிவியல் அறிஞர் ஆவார். தொலைபேசியைக் கண்டுபிடித்ததற்காக அறியப்படுகிறார். தனது இளமையில் பிரிட்டன் குடிமகனாக இருந்தார். பின்னர் அமெரிக்கக் குடியுரிமை பெற்றார்." இவரது தாயாரும் மனைவியும் செவிடராதலினால் இவரது ஆய்விற்கு இது ஓர் உந்து சக்தியாக அமைந்திருக்கலாம். இவரது ஆய்வுகள் ஊடாக 1876 ஆம் ஆண்டு தொலைபேசி உருவாக்கப்பட்டது. இவர் பெல் தொலைபேசி நிறுவனத்தின் நிறுவனரும் ஆவார். 1922 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 ஆம் தேதி அலெக்சாண்டர் கிரகாம் பெல் இறந்தார்.
No comments:
Post a Comment