ஆகஸ்ட் 01
உலக சாரணர் தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1ஆம் தேதி உலக சாரணர் தினம் கொண்டாடப்படுகிறது. உலகளாவிய சாரணியத்தின் இலட்சியங்களையும், நோக்கங்களையும் நினைவுகூறும் வகையில் உலக சாரணர் தினம் உலகெங்கும் அனுசரிக்கப்படுகிறது. 1907ஆம் ஆண்டு ஜுலை 28ஆம் தேதி சாரண இயக்கத்தின் தந்தை என அழைக்கப்படும் பேடன் பவல் என்பவரால் 20 இளைஞர்களுடன் சாரணர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
பொதுவாக சில நாடுகளில் ஜுலை மாத இறுதி வாரமும், ஆகஸ்ட் முதலாம் வாரமும் சாரணியத்தைப் பொருத்தவரையில் முக்கியமான நாட்களாகும்.
2008 – ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 ஆம் தேதி உலகின் மிக வேகமான தொடருந்து சேவை சீனாவில் பெய்ஜிங், தியான்ஜின் ஆகிய நகரங்களுக்கிடையே ஆரம்பிக்கப்பட்டது.
1952 – இதே நாளில் தொடருந்து நிலையங்களில் இந்தி அழிப்புப் போராட்டத்தை தந்தை பெரியார் துவக்கி வைத்தார்.
கமலா நேரு என்பவர், இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், இந்தியாவின் முதல் பிரதமருமான ஜவஹர்லால் நேருவின் மனைவியும், இந்தியாவின் முதல் பெண் பிரதமராக இருந்த இந்திரா காந்தியின் தாயாரும் ஆவார். இவர் மிகவும் உண்மையானவராகவும், தேசபக்தி மிக்கவராகவும், எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவராகவும் இருந்தார். கமலா நேரு சிறிது காலம் சபர்மதி ஆசிரமத்தில் தங்கியிருந்த போது அவருக்கு கஸ்தூரிபாய் காந்தியுடனும் பிரபாவதி தேவியுடனும் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. இவர் பிறந்த தினம் ஆகஸ்ட் 01, 1899.
இந்திய விடுதலைப் போராட்ட வீரரான லோகமான்ய கேசவ் பால கங்காதர திலகர் 1920 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 1 இல் இறந்தார்.
டெல்லி கணேஷ் ஆகஸ்ட் 1, 1944 ல் திருநெல்வேலியில் பிறந்தார். மூத்த தமிழ் நடிகரான இவர் பெரும்பாலும் குணசித்திர வேடங்களில் காணப்படும் ஒரு தமிழ் திரைப்பட நடிகர். கமலஹாசன் உடன் இணைந்து அவர் நடித்த நகைச்சுவைத் திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர். அவரது பாத்திரம் நாயகன் மற்றும் மைக்கேல் மதன காமராஜன் திரைப்படங்களில் மிகவும் சிறப்பாக அறியப்பட்டது.
No comments:
Post a Comment