Home

06 November 2023

11 ஆம் வகுப்பு வரலாறு - பாடக்குறிப்பேடு - வாரம் 8

11 ஆம் வகுப்பு - வரலாறு - அலகு 11

தேதி  :       

வகுப்பு  11 ஆம் வகுப்பு      

பாடம்  : வரலாறு     

தலைப்பு  : 11. பிற்காலச் சோழர்கள், பாண்டியர்கள்  

கற்பித்தல் துணைக் கருவிகள் :       

திறன்பேசி, கணிப்பொறி, QR Code ஸ்கேனர், இந்திய வரைபடம், உலக உருண்டை.  

கற்பித்தல் நோக்கங்கள் :       

1. இடைக்கால சோழ அரசர்களின் சாதனைகளை அறியச் செய்தல்.

2. சோழர்களின் கீழ் ஏற்பட்ட பண்பாட்டு வளர்ச்சியை புரியச் செய்தல்.

3. பிற்கால பாண்டியர்களின் எழுச்சி, வீழ்ச்சியை உணரச் செய்தல்.

4. பாண்டியர்களின் பண்பாடு, நீர்பாசன முறையை விளங்கச் செய்தல்.      

ஆயத்தம் செய்தல் :      

1. கரிகாலன் எந்த வம்சத்தைச் சேர்ந்த அரசர்?

2. தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டியவர் யார்?

3. மதுரை யாருடைய தலைநகரமாக விளங்கியது?     

பாடக் குறிப்புகள் :      

சங்க இலக்கியம் மூவேந்தர்களைப் பற்றி குறிப்பிடுகிறது. பொ.ஆ. 9 ஆம் நுற்றாண்டில் பேரரசு சோழர்கள் ஆட்சி தோன்றியது. சோழர்கள் செல்வாக்கு இழந்ததும், மதுரை பகுதியில் பாண்டியர் ஆட்சி செய்யத் தொடங்கினர்.

* சோழப் பரம்பரையின் தோற்றம் - விஜயாலயன்.

* முதலாம் பராந்தகன் - உத்திரமேரூர் கல்வெட்டு.

* முதலாம் இராஜராஜன் - சோழப் பேரரசு உருவாக்கம்.

* முதலாம் இராஜேந்திரன் - கடல் கடந்த படையெடுப்பு.

* சாளுக்கிய சோழர்கள் - முதலாம் குலோத்துங்கன்.

* சோழர்களின் ஆட்சி நிர்வாகம், மண்டலங்கள்.

* உள்ளாட்சி முறை - ஊரார், சபையார், நகரத்தார், நாட்டார்.

* புரவுவரித் திணைக்களம், வேளாண்மை, நில அளவீடுகள்.

* நீர்பாசன முறை வடி, வாய்க்கால், ஏரிகள் கட்டமைத்தல்.

* சமூகம் - பிரம்மதேயம், தேவதானம், சாதிமுறை.    

* மதம் - சைவம், வைணவம், ஸ்ரீராமானுஜர்.

* தஞ்சை பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம்.

* இரண்டாம் இராஜராஜன் - தாராசுரம் கோயில்.

* ஐநூற்றுவர், திசை ஆயிரத்து ஐநூற்றுவர், வளஞ்சியர்.

* எண்ணாயிரம், திருபுவனி, திருமுக்கூடல் கல்லூரிகள்.

* பாண்டியர்களின் எழுச்சி - கடுங்கோன், அரிகேசரி மாறவர்மன்.

* இரண்டாம் வரகுணன், சடையவர்மன் சுந்தர பாண்டியன்,

* மாறவர்மன் குலசேகரன், மாலிக்காபூர் படையெடுப்பு.

* பாண்டியர்களின் ஆட்சி முறை, கோயில்கள், நீர்பாசன முறை.

மதிப்பிடுதல் :      

1. சோழர் காலத்தில் வசூலிக்கப்பட்ட வரிகள் யாவை?

2. முதலாம் இாஜேந்திரனின் பட்டங்களைக் கூறுக.

3. தமிழ் சங்கம் என்பதன் பொருள் என்ன?     

கற்றல் விளைவுகள் :      

1. இடைக்கால சோழ அரசர்களின் சாதனைகளை அறிந்து கொண்டனர்.

2. சோழர்களின் கீழ் ஏற்பட்ட பண்பாட்டு வளர்ச்சியை புரிந்து கொண்டனர்.

3. பிற்கால பாண்டியர்களின் எழுச்சி, வீழ்ச்சியை உணர்ந்து கொண்டனர்.

4. பாண்டியர்களின் பண்பாடு, நீர்பாசன முறையை தெரிந்து கொண்டனர்.      

தொடர்பணி :       

1. சோழர் காலக் கட்டுமானக் கலையின் சிறப்புகளை எழுதுக.

2. கோவில் - ஒரு சமூக நிறுவனம் இக்கூற்றை நிறுவுக.

3. பாண்டியர் ஆட்சியில் வணிகத்தில் ஏற்பட்ட வளர்ச்சியை கூறுக.    


அ. அறிவழகன், மாநிலத் தலைவர் 

தமிழ்நாடு முதுகலை வரலாறு ஆசிரியர் கழகம் - 9944573722   

Download Pdf Link 👇👇👇

11th History - Notes of Lesson - Week 8








No comments:

Post a Comment

Featured Post

Income Tax Form FY 2024 - 25 (Version 2.0) Date 20/12/2024 Old Regime and New Regime - By Arivazhagan

Income Tax Form Latest Version 2.0  (Old Regime and New Regime)  Financial Year 2024-25 (AY 2025-26)  Auto calculation is enabled in this So...

Popular Posts