Home

06 November 2023

11 ஆம் வகுப்பு வரலாறு - பாடக்குறிப்பேடு - வாரம் 7

11 ஆம் வகுப்பு - வரலாறு - அலகு 10

தேதி  :       

வகுப்பு  11 ஆம் வகுப்பு      

பாடம்  : வரலாறு     

தலைப்பு  : 10. அரபியர், துருக்கியரின் வருகை  

கற்பித்தல் துணைக் கருவிகள் :       

திறன்பேசி, கணிப்பொறி, QR Code ஸ்கேனர், இந்திய வரைபடம், உலக உருண்டை.  

கற்பித்தல் நோக்கங்கள் :       

1. கஜினி மாமுது மற்றும் கோரி முகமது பற்றி அறியச் செய்தல்.

2. ஐந்து டெல்லி சுல்தான் மரபுகளின் ஆட்சியை புரியச் செய்தல்.

3. அலாவுதீன் கில்ஜி, முகமது பின் துக்ளக் பற்றி உணரச் செய்தல்.

4.டெல்லி சுல்தானிய கால ஆட்சி நிர்வாகத்தை விளங்கச் செய்தல்.    

ஆயத்தம் செய்தல் :      

1. இந்தியாவில் உள்ள மதங்கள் யாவை?

2. இஸ்லாமிய மதம் எந்த நாட்டில் தோன்றியது?

3. இந்தியாவின் மீது 17 முறை படையெடுத்தவர் யார்?    

பாடக் குறிப்புகள் :      

அரபியரும் துருக்கியரும் இந்தியாவின் மீது படையெடுத்தனர். இதன் விளைவாக 1206 ஆம் ஆண்டு தில்லி சுல்தானியம் என்ற இஸ்லாமிய அரசு நிறுவப்பட்டது. தில்லி சுல்தான்கள் ஐந்து வெவ்வேறு வம்சங்களைச் சேர்ந்தவர்கள். இஸ்லாம் மதமும் இஸ்லாமியப் பண்பாடும் இந்தியாவில் காலூன்றின.

* அரபியரின் வருகை: பின்னணி

* சிந்து மீது அரபுப் படையெடுப்பு

* முகமது-பின்-காசிம் - சிந்து படையெடுப்பு

* கஜினி மாமுது - இராணவத் தாக்குதல்கள்

* கோரி முகமது - முதலாம் தரெய்ன் போர், இரண்டாம் தரெய்ன் போர் 

* இராஜபுத்திரர்கள் - பிருத்விராஜ் சௌகான், ஜெயச்சந்திரா

* தில்லி சுல்தானியத்தின் ஆட்சி (12061526)

* அடிமை வம்சம் (12061290) குத்புதீன் ஐபக்

* இல்துமிஷ், ரஸியா சுல்தானா, பால்பன்

* கில்ஜிகள் வம்சம் (1290-1320) - ஜலாலுதீன் கில்ஜி

* அலாவுதீன் கில்ஜி இராணுவத் தாக்குதல்கள், சீர்திருத்தங்கள்    

* துக்ளக் வம்சம் (1320 - 1414) - கியாசுதீன் துக்ளக்

* முகமது-பின்-துக்ளக் - அடையாக நாணயம், தலைநகரம் மாற்றம்

* ஃபெரோஸ் ஷா துக்ளக், தைமூரின் படையெடுப்பு

* சையது வம்சம் (1414-1451) - கிசர் கான்

* லோடி வம்சம் (1451-1526) பஹ்லுல் லோடி

* சிக்கந்தர் லோடி, இப்ராஹிம் லோடி, முதல் பானிப்பட் போர்

* சுல்தானிய நிர்வாகம் - சுல்தானின் அதிகாரம், வரிகள்

* சமூகம் - சாதிமுறை, பெண்கள், சமயம் - சூஃபியிசம், கல்வி,

* பொருளாதாரம் - வணிகம், நகரமயமாக்கம், வரலாற்றியல்,

* கட்டடக் கலை, சிற்பம், ஓவியம், இசை, நடனம், இலக்கியம்

மதிப்பிடுதல் :      

1. மம்லுக் என்பதன் பொருள் என்ன?

2. இபின் பதூதா எந்த நாட்டு பயணி?

3. கஜூராஹோ கோவிலைக் கட்டியவர்கள் யார் ?    

கற்றல் விளைவுகள் :      

1. கஜினி மாமுது மற்றும் கோரி முகமது பற்றி அறிந்து கொண்டனர்.

2. ஐந்து டெல்லி சுல்தான் மரபுகளின் ஆட்சியை புரிந்து கொண்டனர்.

3. அலாவுதீன் கில்ஜி, முகமது பின் துக்ளக் பற்றி தெரிந்து கொண்டனர்.

4. டெல்லி சுல்தானிய கால ஆட்சி நிர்வாகத்தை உணர்ந்து கொண்டனர்.      

தொடர்பணி :       

1. இந்திய வரலாற்றில் இரண்டாம் தரெய்ன் போர் ஒரு திருப்புமுனை - விவரி.

2. கஜினி மாமுது கோரி முகமது ஒப்பிட்டும் வேறுபடுத்தியும் காட்டுக.

3. அலா-உத்-தின் கில்ஜியின் பொருளாதாரச் சீர்திருத்தங்களை விவாதி.     


அ. அறிவழகன், மாநிலத் தலைவர் 

தமிழ்நாடு முதுகலை வரலாறு ஆசிரியர் கழகம் - 9944573722   

Download Pdf Link 👇👇👇

11th History - Notes of Lesson - Week 10








No comments:

Post a Comment

Featured Post

Income Tax Form FY 2024 - 25 (Version 2.0) Date 20/12/2024 Old Regime and New Regime - By Arivazhagan

Income Tax Form Latest Version 2.0  (Old Regime and New Regime)  Financial Year 2024-25 (AY 2025-26)  Auto calculation is enabled in this So...

Popular Posts