Home

02 October 2023

பாமினி பேரரசு - பகுதி 3

பாமினி பேரரசு

இரண்டாம் முகமது ஷா : (1377 - 1397) 

இரண்டாம் முகமது ஷா - ஹசன் கங்குவின் நான்காவது மகனான மாமூத் கானின் மகன். 

19 ஆண்டுகள் அமைதியான வழியில் ஆட்சி செய்தார். 

வயது முதிர்ந்த சைப்புதீன் கோரியை மீண்டும் பிரதம அமைச்சராக அமர்த்தினார். 

பாரசீக கவிஞர் ஹபீஸ், முகமது ஷாவை புகழ்ந்து பாடிய கவிதைகளை அனுப்பி வைத்தார். 

ஹபீஸுக்கு ஆயிரம் பொற்காசுகள் மதிப்புள்ள கலை பொருட்களை பரிசாக அனுப்பினார். 

பாரசீக நாட்டு கவிஞர் ஹபீஸை தனது அரசவைக்கு வருமாறு முகமது ஷா அழைத்தார். 

இரண்டாம் முகமது ஷா கல்வியில் அதிக ஆர்வம் கொண்டவர். 

பல பள்ளிகளை நிறுவினார் - குல்பர்கா, பீடார், காண்டேஷ் (காந்தார்), எலிச்பூர், தௌலதாபாத், சாவூல், தாபூல். 

குல்பர்காவில் பஞ்சம் - பத்தாயிரம் மாட்டு வண்டிகளில் மாளவம், குஜராத்தில் இருந்து உணவு தானியங்களை கொண்டு வந்தார். 

ஹஸ்ரத் குவாஜா கேசுதராஸ் - டெல்லியில் இருந்து தக்காணத்துக்கு வந்து சேவை புரிந்தார். 

1397 இல் - இரண்டாம் முகமது ஷா இறந்தார். 

சுல்தான் இறந்த மறுநாளே 104 வயதான சைப்புதீன் கோரி இறந்தார். 

சைப்புதீன் கோரி - முதல் ஐந்து பாமினி சுல்தான்களிடம் பிரதம அமைச்சராக இருந்தார். 

"ஆங்கிலேய - சாக்சானியர் காலத்து மடாலய ஆட்சியாளர் டன்ஸ்டன்" என்பவருடன் சைப்புதீன் கோரி ஒப்பிடப்படுகிறார். 

இரண்டாம் அரிஸ்டாட்டில் என்று இரண்டாம் முகமது ஷாவை மக்கள் அழைத்தனர். 


கியாசுதீன் : (1397 ஏப்ரல் - ஜூன்) 

கியாசுதீன் - இரண்டாம் முகமது ஷாவின் மூத்த மகன். 

17 வயதான கியாசுதீன் மூன்று மாதமே ஆட்சியில் இருந்தார். 

தகல்சின் - இரண்டாம் முகமது ஷாவின் துருக்கிய அடிமை. 

தகல்சின் மகளை மணந்து கொள்ள கியாசுதீன் விரும்பினார். தகல்சினும் ஆசைகாட்டி வந்தார். 

தகல்சின், அந்தப்புரத்தில் இருந்த கியாசுதீனின் இரு கண்களையும் குருடாக்கி பட்டத்தில் இருந்து விலகுமாறு செய்தார். 


ஷம்சுதீன் : (1397 ஜூன் - நவம்பர்) 

ஷம்சுதீன் - இரண்டாம் முகமது ஷாவின் இளைய மகன். 

தகல்சின் ஷம்சுதீனை பட்டத்தில் அமர்த்தினார். 

ஷம்சுதீன் தாவூத் என்ற பட்டப் பெயருடன் அரியணை ஏறினார். 

ஆறு மாத காலம் மட்டுமே ஆட்சியில் இருந்தார். 

தகல்சின் தன்னே தானே பிரதம அமைச்சராக அறிவித்ததுக் கொண்டார். 

ஹசன் கங்குவின் மூன்றாவது மகன் அகமது கான். 

அகமது கானின் மகன்கள் - 1. பிரோஸ் ஷா, 2. அகமது ஷா. 

அகமது கானின் மகன்கள் தகல்சினை கொன்றனர். 

ஷம்சுதீன் கண்களை குருடாக்கி பட்டத்தில் இருந்து இறக்கினர். 


பிரோஸ் ஷா : (1397 - 1422) 

பிரோஸ் ஷா - ஹசன் கங்குவின் மூன்றாவது மகனான அகமது கானின் மூத்த மகன். 

தாஜூத்தீன் பிரோஸ் ஷா என்ற பட்டப் பெயருடன் அரியணை ஏறினார். 

தனது தம்பி அகமதுவை பிரதம அமைச்சராக அமர்த்தினார். 

பிரோஸ் ஷா காலத்தில் பாமினி அரசின் புகழ் அதன் உச்ச நிலையை அடைந்தது. 

பிரோஸ் ஷா முஸ்லிம்களின் வழக்கப்படி நான்கு பெண்களை மணந்தார். 

முதா மணம் (தற்காலிக மணம்) என்ற புதிய முறைப்படி பல பெண்களை மணந்தார். 

உணர்ச்சிகளை கட்டுப்படுத்த அதிகப்படியான மதுவை குடிப்பதாக கூறிக்கொண்டார். 

பிரோஸ் ஷாவின் அந்தப்புரத்தில் ஐரோப்பிய பெண்கள் உட்பட 800 பெண்கள் இருந்தனர். 

பல மொழிகளை கற்றிருந்தார். ஒவ்வொரு பெண்ணிடமும் அவரது தாய் மொழியிலேயே பேசுவார். 

கல்வி மான்கள் மற்றும் துறவிகளை ஆதரித்தார் என புர்ஹான் இ மாசிர் கூறுகிறது. 

பிரோஸ் ஷா தன்னுடைய ஆட்சிக் காலத்தில் 24 படைப்புகளை மேற்கொண்டார். 

1398 இல் - விஜயநகர அரசர் இரண்டாம் ஹரிஹரர் பாமினி மீது படையெடுத்து வந்தார். 

குவாசி சிராஜூதீனும் அவனது ஆட்களும் கூத்தர் போல் வேடமிட்டு சென்றார்கள். 

விஜயநகர படை முகாமில் நடனமாடிக் கொண்டே ஹரிஹரனின் மகனை கொன்றார்கள். 

தோல்வி அடைந்த இரண்டாம் ஹரிஹரர் சமாதானம் செய்து கொண்டான். 

பாமினி அரசு தெற்கில் துங்கபத்திரா நதி வரை விரிவடைந்தது. 

குல்பர்காவில் இருந்து ரெய்ச்சூர் தோவாபை பிரித்து தனி மாகாணமாக அறிவித்தார். 

1401 ஆம் ஆண்டில் அசர்பைஜானில் இருந்த தைமூரிடம் இருந்து ஒரு பட்டயத்தைப் பெற்றார். 

தக்காணம், குஜராத், மாளவம் ஆகிய பிரதேசங்கள் சுல்தான் பிரோஸ் ஷாவிற்கு கொடுக்கப்பட்டவை எனக் கூறும் ஒரு பட்டயத்தைப் பெற்றார். 

குஜராத், மாளவம், விஜயநகரம் ஆகிய மூன்றும் ஒரு கூட்டுறவை ஏற்படுத்திக் கொண்டன. 

1404 இல் - இரண்டாம் ஹரிஹரர் மரணமடைந்தார். இரண்டாம் புக்கர் அரியணை ஏறினார். 

1406 இல் - இரண்டாம் புக்கரை வீழ்த்திவிட்டு, முதலாம் தேவராயர் அரியணை ஏறினார். 

நாகலம்மாவை திருமணம் செய்து கொள்ள முதலாம் தேவராயர் விரும்பினார். 

நாகலம்மா அல்லது நிகால் என்ற அழகி முட்கல் ஊரைச் சேர்ந்த இராமப்பாவின் மகள். 

அந்தண ஆசிரியர் வெங்கடாத்திரி தூது சென்றார். ஆனால் நாகலம்மா மறுத்துவிட்டார். 

நாகலம்மாவை அடைய அச்சுதராயர் தலைமையில் 5000 படை வீரர்களை அனுப்பினார். 

விஜயநகரப் படைகள் பாமினி எல்லைக்குள் புகுந்து முட்கல் நகரத்தை சூறையாடின. 

பௌலத்கான் தலைமையிலான பாமினிப் படை விஜயநகரப் படைகளைத் தோற்கடித்தது. 

நாகலம்மாவை பிரோஸ் ஷா தனது மகன் ஹாசன் கானுக்கு மணம் செய்து வைத்தார். 

முதலாம் தேவராயரின் மகளை பிரோஸ் ஷா திருமணம் செய்து கொண்டார். 

திருமணப் பரிசாக பங்காப்பூரை பிரோஸ் ஷா கேட்டு வாங்கிக் கொண்டார். 

பீரார் மீது படையெடுத்து வந்த கோண்டுவானா அரசரை வென்றார். 

1412 இல் - கலகம் செய்த மாகூர் மகாண ஆளுநரை அடிபணிய செய்தார். 

கெர்லா நாட்டு அரசர் நரசிங்க ராஜனை பிரோஸ் ஷா தோல்வியடையச் செய்தார். 

நரசிங்க ராஜன் தனது மகளை பிரோஸ் ஷாவிற்கு கொடுத்து சமாதானம் செய்து கொண்டார். 

1417 இல் - அன்னதேவர், வேலமா உதவியுடன் இராஜ மகேந்திரத்தை வெற்றி கொண்டார் என பெரிஷ்டா கூறுகிறார். 

மற்ற ஆதாரங்கள் - கோதாவரி நதியை கடக்க முடியாமல் திரும்பினார் என்கிறது. 

1420 இல் - விஜயநகர அரசின் கீழ் இருந்த பீல் கொண்டாவைத் தாக்கினார். 

ரெய்ச்சூர் தோவாப் இளவரசர் அகமதுவால் கைப்பற்றப்பட்டது. 

பிரோஸ் ஷாவின் பிரதம அமைச்சர் மீர் பஸீலுல்லா இஞ்சு கொல்லப்பட்டார். 

துறவி ஜமாலுதீன் ஹுசேனி பிரோஸின் தம்பி அகமது அரசனாவான் என்று கூறினார். 

அரசு அதிகாரங்களை அயினுல் முல்க், நிஜாமுல் முல்க் என்ற இரு அடிமைகளிடம் இருந்தது. 

இரு அடிமைகளும் அகமதுவின் கண்களை குருடாக்கிவிடுமாறு பிரோஸ் ஷாவிடம் கூறினார்கள். 

அகமது, துறவி கேசுதராஸ் என்பவரிடம் அடைக்கலம் புகுந்தார். 

அகமதுவிற்கு பஸ்ரா நாட்டைச் சேர்ந்த கலப் ஹாசன் துணை நின்றார். 

போரில் வெற்றி பெற்ற அகமது அரியணை ஏறினார். 

பிரோஸ் ஷாவின் இரு மகன்கள் - ஹாசன் கான், முபாரக் கான் 

பிரோஸ் ஷாவின் மகன்களை அகமது தனது அரண்மனையிலேயே வைத்துக் கொண்டார். 

ஹாசன் கான் கண்கள் குருடாக்கப்பட்டன. 

1422 இல் பிரோஸ் ஷா இறந்தார். 

தலைநகருக்கு தெற்கில் பீமா நதிக் கரையில் பிரோஸ்ஷாபாத் எனும் நகரத்தை நிர்மாணித்தார். 

தௌலதாபாத்தில் வானநூல் ஆராய்ச்சிக் கூடம் ஒன்றை அமைத்தார். 

குல்பர்காவை தலைநகராகக் கொண்ட கடைசி பாமினி சுல்தான். 

Part 2

Part 4

அ. அறிவழகன், முதுகலை ஆசிரியர், 9944573722




No comments:

Post a Comment

Featured Post

Income Tax Form FY 2024 - 25 (Version 2.0) Date 20/12/2024 Old Regime and New Regime - By Arivazhagan

Income Tax Form Latest Version 2.0  (Old Regime and New Regime)  Financial Year 2024-25 (AY 2025-26)  Auto calculation is enabled in this So...

Popular Posts