Home

02 October 2023

பாமினி பேரரசு - பகுதி 2

பாமினி பேரரசு

முதலாம் முகமது ஷா : (1358 - 1375) 

ஹசன் கங்குவின் மகன்கள் - 1. முதலாம் முகமது, 2. தாவூத் கான், 3. அகமது கான், 4. மாமூத் கான் 

முதலாம் முகமது ஷா - ஹசன் கங்குவின் மூத்த மகன் 

தாய் - மெக்காவிற்கு புனித யாத்திரை சென்றார். 1360-61 இல் இந்தியா திரும்பினார். 

முகமது ஷாவை "தக்காணத்தின் அரசர்" என அங்கீகரிக்கும் உரிமை சாசனத்தை கலிஃபாவிடம் இருந்து பெற்று வந்தார். 

அல் முத்தாதித் - எகிப்தில் பெயரளவு கலீஃபாவாக இருந்தார். 

வாரங்கல், விஜயநகர அரசுடன் வாழ்நாள் முழுவதும் இடைவிடாது போரிட்டார். 

முகமது ஷா ஒரு லட்சம் இந்துக்களின் உயிரை பறிக்கும் வரை போரை நிறுத்த மாட்டேன் என்று சபதமிட்டார். 

1360 இல் - இந்து வங்கியாளர்களை தூக்கிலிடுமாறு உத்தரவிட்டார். 

காரணம் - பாமினி சுல்தான் வெளியிடப்பட்ட தங்க நாணயங்களை உருக்கி இந்து அரசர்களுக்கு அனுப்பி வைத்தனர். 

விஜயநகர அரசர்கள் அதை மீண்டும் தமது நாணயங்களாக அச்சிட்டு பயன்படுத்தினர். 

கௌலாஸ் கோட்டையை ஒப்படைக்குமாறு காப்பையா நாயக்கர் தூது அனுப்பினார். 

ரெய்ச்சூர் தோவாப் பகுதியை ஒப்படைக்குமாறு முதலாம் புக்கர் தூது அனுப்பினார். 

தூதுவர்களை கைது செய்து 18 மாதங்கள் சிறையில் அடைத்து போருக்கு தயாரானார். 

வாரங்கல் அரசன் காப்பைய நாயக்கர் மகன் விநாயகத் தேவர் கௌலாஸ் கோட்டையை முற்றுகையிட்டார். 

முதல் படையெடுப்பில் - விநாயகத் தேவர் தோற்கடிக்கப்பட்டு மன்னிக்கப்பட்டார். 

1362 இல் வாரங்கல் இளவரசர் விநாயகத் தேவர் - பாமினி சுல்தானுக்கு விற்பதற்காக வணிகர்கள் கொண்டுவந்த குதிரைகளை மிரட்டி வாங்கிக் கொண்டார். 

இரண்டாவது படையெடுப்பில் - விநாயகத் தேவர் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார். 

வாரங்கலிடம் இருந்து கோல்கொண்டாவை கைப்பற்றி இணைத்துக் கொண்டார். 

நவரத்தினங்கள் பதித்த அரியணையை பாமினி சுல்தான் பரிசாகப் பெற்றார். 

கிருஷ்ணப்ப நாயக்கர் சுல்தானுக்கு அடிபணிந்தார். 

1365 மார்ச் 21 இல் - இசை, நடன கலைஞர்களை வரவழைத்து வெற்றி விழா கொண்டாடினார். 

கலைஞர்களுக்கான ஊதியத்தை விஜயநகர அரசு வழங்குமாறு ஆணையிட்டார். 

முதலாம் புக்கர் முட்கல் கோட்டையை கைப்பற்றினார். 

1367 இல் - தூங்கபத்ரா நதிக்கு தெற்கில் கௌதாலம் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் விஜயநகர படைகள் தோல்வி அடைந்தன. 

முதலாம் முகமது அதோனி கோட்டையை முற்றுகையிட்டார். புக்கர் தோல்வி அடைந்தார். 

பலமுறை தனது நாட்டை சுற்றி வந்து அலுவலர்களின் பணியைக் கண்காணித்தார். 

நாட்டில் மதுவுக்கு தடை விதித்தார். மதுபான ஆலைகளை மூட உத்தரவிட்டார். 

20,000 கொள்ளையர்களை இரக்கமின்றி கொடூரமாக கொன்று குவித்தார். 

நால்வகை நாணயங்கள் வெளியிட்டார். (கால், அரை, முக்கால், ஒரு டங்கா) 

எட்டு அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையை உருவாக்கினார். 

1. வக்கீல் - உஸ் - சுல்தானத் = பிரதம அமைச்சர் 

2. வசீர் - இ - ஜும்லா = தலைமை அமைச்சர் 

3. அமீர் - இ - ஜும்லா = நிதி அமைச்சர் 

4. வசீர் - இ - அஷ்ரப் = வெளியுறவு அமைச்சர் 

5. நசீர் = உதவி நிதி அமைச்சர் 

6. பீஷ்வா = பீஷ்வா 

7. கொத்வால் = காவல் அலுவலர் 

8. சதர் - இ - ஜஹான் = முதன்மை நீதிபதி / சமய அறநிலை அமைச்சர் 

கலகம் செய்த ஒன்றிவிட்ட சகோதரன் பஹ்ரம் - கான் - மசன்தரானி யை மன்னித்தார். 

1367 இல் - கார்டோவா பாணியில் குல்பர்காவில் பெரிய மசூதியைக் கட்டினார். (மீடோஸ் டெய்லர்) 

இந்தியாவில் உள்ள மசூதிகளுள் திறந்த முற்றம் இல்லாத ஒரே மசூதி - குல்பர்கா பெரிய மசூதி. 

கோல்கும்பாஸ் - குல்பர்காவில் கட்டப்பட்டு உள்ளது. 

கோல்கும்பாஸ் இந்தியாவில் பட்டாணியர்களால் கட்டப்பட்ட தொழுகை தளங்களில் மிகவும் அழகு மிக்கவைகளில் ஒன்று என ஃபெர்குஸ்சன் கூறினார். 

ஃபெர்குஸ்சன் - "கிழக்கு மற்றும் இந்திய கட்டடக் கலை" எனும் நூலின் ஆசிரியர். 

கோல்கும்பாஸ் கார்டோவாவில் உள்ள தொழுகை தலத்தை பிரதிபலிப்பதாக உள்ளது என மீடோஸ் டெய்லர் கூறினார். 

"பாமினி வம்சத்தின் மிகச்சிறந்த ஆட்சியாளர்களில் ஒருவராக முகமது ஷா உள்ளார்" என பேராசிரியர் ஷெர்வானி கூறுகிறார். 

முதலாம் முகமதுஷா ஆதரித்த அறிஞர்கள் - ஷேக் உல் மாஷாய், கா ஜெய்னுதீன் தௌலதாபாதி, அய்னுதீன் பீஜப்பூரி, மௌலானா நிஜாமுதீன் பரனி, ஹகீம் ஜாஹிருதீன் தப்ரிஜி. 

தக்காணத்து பாமினிகள் (நூல்) - தக்காணம் கற்றோரின் உறைவிடமாகவும் இந்தியாவின் பல்வேறு பாகத்தில் உள்ளோரின் பொறாமைக்கு இலக்காகவும் விளங்கியது என கூறுகிறது. 


முஜாஹித் ஷா : (1375 - 1377) 

முஜாஹித் ஷா - முதலாம் முகமது ஷாவின் மகன். 

விஜயநகர அரசின் மீது இரண்டு முறை படையெடுத்து தோல்வியைத் தழுவினார். 

பாமினிப் படைகள் அதோனி கோட்டையை ஒன்பது மாதங்கள் முற்றுகையிட்டன. 

விஜயநகர அரசர் முதலாம் புக்கரிடம் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டார். 

விஜயநகர முற்றுகையை திறமையாக நடத்தவில்லை என தாவூத் கானை கண்டித்தார் . 

முஜாஹித் ஷா தனது சிற்றப்பா தாவூத் கானால் கொல்லப்பட்டார். 


தாவூத் கான் : (1377) 

தாவூத் கான் - ஹசன் கங்குவின் இரண்டாவது மகன். 

தாவூத் கான் ஒரு மாதம் கூட ஆட்சி புரியவில்லை. 

முஜாஹித் ஷாவின் வளர்ப்பு சகோதரி - ருஹ் பர்வர் ஆகா தனது அடிமைகளை அனுப்பி தாவூத் கானை கொலை செய்தார். 

Part 1

Part 3

அ. அறிவழகன், முதுகலை ஆசிரியர், 9944573722 



No comments:

Post a Comment

Featured Post

Income Tax Form FY 2024 - 25 (Version 2.0) Date 20/12/2024 Old Regime and New Regime - By Arivazhagan

Income Tax Form Latest Version 2.0  (Old Regime and New Regime)  Financial Year 2024-25 (AY 2025-26)  Auto calculation is enabled in this So...

Popular Posts