01 February 2022

அஞ்சலக ஆயுள் காப்பீடு பிரீமியம் செலுத்து சான்றிதழ் (PLI Annual Statement) வாங்க இனி தபால் நிலையம் செல்ல வேண்டாம். சுலபமாக வீட்டில் இருந்தபடியே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வருமான வரி செலுத்தும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் சேமிப்புக்காக வேண்டி அஞ்சலக ஆயுள் காப்பீடு (PLI) செலுத்துவது வழக்கம். அவ்வாறு செலுத்தும் நபர் அந்த நிதி ஆண்டில் PLI பிரீமியம் செலுத்தியதற்கான சான்றிதழை தபால் நிலையத்தில் வாங்கி வருமான வரி படிவத்துடன் இணைக்க வேண்டியது அவசியமாகும். 


ஆனால் அஞ்சலக ஆயுள் காப்பீடு பிரீமியம் செலுத்தியதற்கான சான்றிதழை (PLI Annual Statement) வாங்க தபால் நிலையம் செல்லாமல் இனி சுலபமாக வீட்டில் இருந்தபடியே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 


Click Here 👉 PLI Customer Portal

https://pli.indiapost.gov.in/CustomerPortal/PSLogin.action என்ற இணையதள பக்கத்தில் Login செய்து Tools and Utilities என்ற ஆப்சனை தேர்வு செய்யவும். பிறகு திரையில் தோன்றும் Income Tax Certificate ஆப்சனை கிளிக் செய்து தங்களுக்கு தேவையான நிதி ஆண்டிற்கான பிரிமியம் செலுத்தியதற்கான சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


Login ID இல்லாதவர்கள் Generate Customer ID ஆப்சனை தேர்வு செய்து தங்களுக்கான Login ID மற்றும் Password ஐ பெற்றுக் கொள்ளலாம். 




No comments:

Post a Comment

Featured Post

Income Tax Form FY 2025-2026 (AY 2026-2027) By Arivazhagan - Version 2.0 Dated 10/12/2025

  Income Tax Form Version 2.0 (New Regime) Last Updated 10/12/2025