ஆகஸ்ட் 03
காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் (Gandhigram Rural University) இந்தியாவின் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். தமிழ்நாட்டிலுள்ள திண்டுக்கல் நகருக்கு அருகில் இப்பல்கலைக் கழகம் அமைந்துள்ளது. முனைவர் டி.எசு. சௌந்தரம் மற்றும் முனைவர் சி.ராமச்சந்திரன் ஆகியோர் இணைந்து இந்நிறுவனத்தை உருவாக்கினர். காந்தி கிராம கிராமிய உயர் கல்வி நிறுவனம் 1956 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்நிறுவனம் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் அறிவு மற்றும் வேலை ஆகியவை தனித்தனியானவை அல்ல என்று குறிப்பிடுகின்ற ஒரு கொள்கையால் அமைந்த சர்வோதயக் கல்வி முறையைத் தொடர்வதற்காக இதை அவர்கள் உருவாக்கினர். 1976, ஆகஸ்ட் மாதம் 3 ஆம் நாள் மத்திய அரசால் தன்னாட்சி அதிகாரம் பெற்ற ஒரு பல்கலைக்கழகமாக காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் மாறியது.
ஸ்ரீ பிரகாசா ஓர் விடுதலைப் போராட்ட வீரரும் அரசியல்வாதியும் சிறந்த நிர்வாகியும் ஆவார். இந்தியாவின் முதல் பேராளராக பாக்கித்தானில் 1947 முதல் 1949 வரை பணியாற்றியவர். 1949 முதல் 1950 வரை அசாமிலும் 1952 முதல் 1956 வரை சென்னை மாகாணத்திலும் 1956 முதல் 1962 வரை மகாராட்டிர மாநிலத்திலும் ஆளுநராகப் பணியாற்றினார். இவர் பிறந்த தினம் ஆகஸ்ட் 03, 1890.
அலாவுதின் பாமன் ஷா என்பவரின், இயற்பெயர் ஜாபர் கான் ஆகும். இவர் ஆப்கானின் 34 மாகாணங்களில் ஒன்றான, பாதாக்சானின் வழிவந்தவர். இவர் ஈரானின் பாரசீக மொழி பேசும் மக்களான, தத்சிக் பரம்பரையைச் சார்ந்தவர் என வரலாற்று ஆய்வுகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் இவர், பாரசீக அரசரான பாமனின் வழித்தோன்றல் என கருதப்பட்டார். இவர் பிறந்த தினம் ஆகஸ்ட் 03, 1347.
தேவதாஸ் காந்தி என்பவர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் நான்காவது மகனாவார். இவர் பிறந்தது தென்னாப்பிரிக்காவில் இவர் தன் பெற்றோருடன் இந்தியா திரும்பும்போது இளைஞனாக வளர்ந்திருந்தார். இவர் தன் தந்தையின் இயக்கத்தில் கலந்துகொண்டார். தன் வாழ்நாளில் பல காலம் சிறையில் கழித்தார். இவர் ஒரு பத்திரிக்கையாளராகவும் இருந்தார். இந்துஸ்தான் டைம்ஸ் இதழின் ஆசிரியராக இருந்தார். இவர் இறந்த தினம் ஆகஸ்ட் 03, 1957.
சுவாமி சின்மாயானந்தா ஒரு இந்திய ஆன்மீகவாதி. சின்மயா மிஷன் என்ற அமைப்பைத் தொடங்கி அதன் மூலம் உலகெங்கும் ஆன்மீக வேதாந்த கருத்துக்களை பரப்பியவர். இவரது இயற்பெயர் பாலகிருஷ்ண மேனன் என்பதாகும். லக்னோ பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை முடித்து வெளியேறியவர் ஊடகவியல் துறையில் நுழைந்து இந்திய அரசியல், பொருளாதார மற்றும் சமூகவியலில் பணிகளை ஆற்ற முனைந்தார். இந்திய விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். பின்னர் "நாஷ்னால் ஹெரால்ட்" என்ற பத்திரிகையில் பணியாற்றினார். ரிசிகேஷம் சென்று சுவாமி சிவானந்தரைச் சந்தித்தார். அன்றிலிருந்து அவர் இந்து சமய ஆன்மீகத்துறையில் அதிக அக்கறை கொண்டார். சுவாமி சிவானந்தரினால் 1949 ஆம் ஆண்டு பெப்ரவரி 25 சிவராத்திரி நாளன்று பாலகிருஷ்ண மேனன் சந்நியாச தீட்சை பெற்றுக் கொண்டு "சுவாமி சின்மயானந்தா" என்ற பெயரையும் பெற்றார். இவர் இறந்த தினம் ஆகஸ்ட் 03, 1993.
No comments:
Post a Comment