12 ஆம் வகுப்பு - வரலாறு - அலகு 9
தேதி :
வகுப்பு : 12 ஆம் வகுப்பு
பாடம் : வரலாறு
தலைப்பு : 9. ஓர் புதிய சமூக - பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல்.
கற்பித்தல் துணைக் கருவிகள் :
திறன்பேசி, கணிப்பொறி, QR Code ஸ்கேனர், இந்திய வரைபடம், உலக உருண்டை.
கற்பித்தல் நோக்கங்கள் :
1. சுதந்திர இந்தியாவின் பொருளாதார நிலை அறியச் செய்தல்.
2. பசுமைப் புரட்சி, தொழிற்துறை வளர்ச்சியை புரியச் செய்தல்.
3. இந்தியா இயற்றிய ஐந்தாண்டு திட்டங்களை உணரச் செய்தல்.
4. கல்வி, அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை விளங்கச் செய்தல்.
ஆயத்தம் செய்தல் :
1. இந்தியா எப்போது சுதந்திரம் பெற்றது?
2. இந்தியாவின் முதல் பிரதமர் யார்?
3. பசுமைப் புரட்சி என்றால் என்ன?
பாடக் குறிப்புகள் :
1947 இல் இந்தியா விடுதலையடைந்த போது நாட்டின் பொருளாதாரம் மிகவும் வலுவற்றதாகவும் பல பிரச்சனைகளையும் எதிர்கொண்டது. வறுமையின் அளவு மிக அதிகமாக இருந்தது. கிராமப்புறங்களில் வசித்த 80 சதவீத மக்கள் வேளாண்மையைச் சார்ந்திருந்தனர்.
* இந்தியா சுதந்திரம் அடைந்த போது எதிர்கொண்ட சவால்கள்
* வேளாண்மை மற்றும் தொழிற்துறையில் இருந்த சவால்கள்
* சமதர்ம சமூக அமைப்பு, வேளாண் கொள்கை.
* நிலச்சீர்திருத்தங்கள் மற்றும் கிராமப்புற மறுசீரமைப்பு
* ஜமீன்தாரி முறை ஒழிப்பு, குத்தகை சீர்திருத்தம், நில உச்ச வரம்பு
* வேளாண்மையின் வளர்ச்சி பசுமைப் புரட்சி ஊரக வளர்ச்சித் திட்டங்கள்
* ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம், 1980 1999
* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம், 2005
* தொழிலக வளர்ச்சி, தொழில் கொள்கை, பொதுத்துறை நிறுவனங்கள்
* சந்தைப் பொருளாதாரம், தனியார் மயமாக்கம், தராளமயமாக்கம்.
* பொதுத்துறை தொழில் நிறுவனங்களில் ஏற்பட்ட நெருக்கடிகள்
* தாராளமயமாக்கம் - தொழில் கொள்கை அறிக்கை 1991
* ஐந்தாண்டு திட்டங்கள் மற்றம் அதன் சாதனைகள்
* முதலாவது ஐந்தாண்டு திட்டம், 1951 - 1956
* இரண்டாவது ஐந்தாண்டு திட்டம், 1956 1961
* மூன்றாவது ஐந்தாண்டு திட்டம், 1961 1966
* கல்வி வளர்ச்சி - பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள்
* SSA, RMSA, சமக்ர சிக்ஷா அபியான் திட்டங்கள்
* அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் வளர்ச்சி
* இந்திய அறிவியல் நிறுவனம், இந்திய தொழில்நுட்ப கழகம்
மதிப்பிடுதல் :
1. பூமிதான இயக்கத்தைத் தொடங்கியவர் யார்?
2. டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் எப்போது அமைக்கப்பட்டது?
3. 1951 இல் இந்தியாவில் எத்தனை பொதுத்துறை நிறுவனங்கள் இருந்தன?
கற்றல் விளைவுகள் :
1. சுதந்திர இந்தியாவின் பொருளாதார நிலை அறிந்து கொண்டனர்.
2. பசுமைப் புரட்சி, தொழிற்துறை வளர்ச்சியை புரிந்து கொண்டனர்.
3. இந்தியா இயற்றிய ஐந்தாண்டு திட்டங்களை தெரிந்து கொண்டனர்.
4. கல்வி, அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியை உணர்ந்து கொண்டனர்.
தொடர்பணி :
1. சுதந்திர இந்தியாவில் ஏற்பட்ட கல்வி முன்னேற்றம் குறித்து மதிப்பிடுக.
2. முதல் இரண்டு ஐந்தாண்டு திட்டங்களின் சாதனைகளை மதிப்பிடுக.
3. விடுதலைக்குப் பின் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியை விவரி.
அ. அறிவழகன், மாநிலத் தலைவர்
TNPGHTA அமைப்பு - 9944573722
Download Pdf Link 👇👇👇
12th History - Notes of Lesson - Week 9
No comments:
Post a Comment