Home

07 November 2023

12 ஆம் வகுப்பு வரலாறு - பாடக்குறிப்பேடு - வாரம் 5

12 ஆம் வகுப்பு - வரலாறு - அலகு 5

தேதி  :       

வகுப்பு  12 ஆம் வகுப்பு      

பாடம்  : வரலாறு     

தலைப்பு  : 5. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம். 

கற்பித்தல் துணைக் கருவிகள் :       

திறன்பேசி, கணிப்பொறி, QR Code ஸ்கேனர், இந்திய வரைபடம், உலக உருண்டை.  

கற்பித்தல் நோக்கங்கள் :       

1. கான்பூர் சதி வழக்கு, மீரட் சதி வழக்கு பற்றி அறியச் செய்தல்.

2. பகத் சிங், கல்பனா தத், சூரியா சென் பற்றி புரியச் செய்தல்.

3. உலகப் பெருமந்தத்தின் தாக்கத்தினை உணரச் செய்தல்.

4. இந்தியாவில் தொழில்துறை வளர்ச்சியை விளங்கச் செய்தல்.

ஆயத்தம் செய்தல் :      

1. தீவிர தேசியவாதம் என்றால் என்ன?

2. தீவிர தேசியவாதம் எப்போது வலுப்பெற்றது?

3. இடதுசாரிகள் என்பவர்கள் யார்?

பாடக் குறிப்புகள் :      

இந்திய தேசிய காங்கிரசில் இடதுசாரிகளின் செல்வாக்கு படிப்படியாக அதிகரித்தது. சுதந்திரப் போராட்டத்தில் அது ஏற்படுத்திய தாக்கம் 1920 களின் பிற்பகுதியில் உணரப்பட்டது. புரட்சிகர தேசியவாதம் தோன்றி வன்முறைகள் வெடித்தன. பொருளாதார பெருமந்தம் ஏற்பட்டு உலக நாடுகள் பாதிப்படைந்தன.

* இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி நிறுவப்படுதல்.

* கான்பூர் சதி வழக்கு 1924.

* கோரக்பூர் அமர்வு நீதிபதி - H.E. ஹோம்ஸ்.

* மீரட் சதி வழக்கு 1929.

* கே.எஃப். நாரிமன், எம்.சி. சக்லா

* மீரட் சதி வழக்கு விசாரணையும் தண்டணையும்.

* பகத் சிங்கின் புரட்சிகர நடவடிக்கைகள்.

* மத்திய சட்டமன்றத்தில் குண்டு வீச்சு.

* இரண்டாவது லாகூர் சதி வழக்கு.

* கல்பனா தத் மற்றும் சூரியா சென்.

* காங்கிரசின் கராச்சி அமர்வு 1931.

* உலகப் பெருமந்தமும் இந்தியாவும்.

* இந்தியாவில் தொழிற்துறை வளர்ச்சி.

* துவாரகநாத் தாகூர், ஜே.என். டாடா.

* இந்தியாவில் பல தொழிற்சாலைகள்.

* தமிழ்நாட்டில் தொழிற்துறை வளர்ச்சி.

மதிப்பிடுதல் :      

1. கான்பூர் சதி வழக்கு என்றால் என்ன?

2. பொருளாதார பெருமந்தம் என்பது யாது?

3. துவாரகநாத் தாகூர் என்பவர் யார்?

கற்றல் விளைவுகள் :      

1. கான்பூர் சதி வழக்கு, மீரட் சதி வழக்கு பற்றி அறிந்து கொண்டனர்.

2. பகத் சிங், கல்பனா தத், சூரியா சென் பற்றி புரிந்து கொண்டனர்.

3. உலகப் பெருமந்தத்தின் தாக்கத்தை உணர்ந்து கொண்டனர்.

4. இந்தியாவில் தொழில்துறை வளர்ச்சியை தெரிந்து கொண்டனர்.

தொடர்பணி :       

1. பகத் சிங்கின் புரட்சிகர நடவடிக்கைகளை விளக்குக.

2. இந்திய தேசிய காங்கிரசின் கராச்சி மாநாடு குறித்து விவரி.

3. இந்தியாவில் ஏற்பட்ட தொழிற்துறை வளர்ச்சியை மதிப்பிடுக.


அ. அறிவழகன், மாநிலத் தலைவர் 

TNPGHTA அமைப்பு - 9944573722   

Download Pdf Link 👇👇👇

12th History - Notes of Lesson - Week 5








No comments:

Post a Comment

Featured Post

Income Tax Form FY 2024 - 25 (Version 2.0) Date 20/12/2024 Old Regime and New Regime - By Arivazhagan

Income Tax Form Latest Version 2.0  (Old Regime and New Regime)  Financial Year 2024-25 (AY 2025-26)  Auto calculation is enabled in this So...

Popular Posts