07 November 2023

12 ஆம் வகுப்பு வரலாறு - பாடக்குறிப்பேடு - வாரம் 3

12 ஆம் வகுப்பு - வரலாறு - அலகு 3

தேதி  :       

வகுப்பு  12 ஆம் வகுப்பு      

பாடம்  : வரலாறு     

தலைப்பு  : 3. இந்திய விடுதலைப் போரில் முதல் உலகப் போரின் தாக்கம்.

கற்பித்தல் துணைக் கருவிகள் :       

திறன்பேசி, கணிப்பொறி, QR Code ஸ்கேனர், இந்திய வரைபடம், உலக உருண்டை.  

கற்பித்தல் நோக்கங்கள் :       

1. தன்னாட்சி இயக்கங்களின் தோற்றம், வளர்ச்சியை அறியச் செய்தல்.

2. இந்தியாவில் முதல் உலகப் போரின் தாக்கத்தை புரியச் செய்தல்.

3. லக்னோ ஒப்பந்தம் மற்றும் கிலாபத் இயக்கத்தை உணரச் செய்தல்.

4. இந்தியத் தொழிலாளர் இயக்கத்தின் எழுச்சியை விளங்கச் செய்தல்.

ஆயத்தம் செய்தல் :      

1. உலகப் போர் என்றால் என்ன ?

2. தன்னாட்சி என்பதன் பொருள் யாது?

3. தீவிர தேசியவாதிகள் யார் ?

பாடக் குறிப்புகள் :      

முதல் உலகப் போர் 1914 முதல் 1918 வரை நடைபெற்றது. இந்ந போர் இந்திய தேசிய இயக்கத்தை வலுப்படுத்தியது. இந்து முஸ்லிம் ஒற்றுமையை உண்டாக்கியது. இந்தியாவில் தொழிற் சங்கங்கள் தோன்ற வழிவகுத்தது.

1. அகில இந்தியத் தன்னாட்சி இயக்கம்.

* அன்னிபெசண்ட் வாழ்க்கை நிகழ்வுகள்.

* திலகரின் தன்னாட்சி இயக்கம்.

* அன்னி பெசண்டின் தன்னாட்சி இயக்கம்.

* தன்னாட்சி இயக்கத்தின் முக்கியத்துவம், வீழ்ச்சி.

2. முதல் உலகப் போரின் தாக்கம்.

* கதர் கட்சியின் தோற்றம், எழுச்சி.

* லக்னோ ஒப்பந்தத்தின் அம்சங்கள்.

3. காலனி ஆதிக்க அரசின் அடக்குமுறைகள்.

* இந்தியப் பாதுகாப்புக்கான சட்டம் -1915.

4. கிலாபத் இயக்கம் - தோற்றம், எழுச்சி.

* கிலாபத் இயக்கத்தின் கோரிக்கைகள்.

* மலபார் மாப்பிள்ளை கிளர்ச்சி.

5. தொழிலாளர் இயக்கத்தின் எழுச்சி.

* அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ்.

மதிப்பிடுதல் :      

1. தன்னாட்சி இயக்கத்தின் குறிக்கோள் யாது ?

2. கதர் கட்சி யாரால் தொடங்கப்பட்டது ?

3. லக்னோ ஒப்பந்தத்தின் தலைமை சிற்பி யார் ?

கற்றல் விளைவுகள் :      

1. தன்னாட்சி இயக்கங்களின் தோற்றம், வளர்ச்சியை அறிந்து கொண்டனர்.

2. இந்தியாவில் முதல் உலகப் போரின் தாக்கத்தை புரிந்து கொண்டனர்.

3. லக்னோ ஒப்பந்தம் மற்றும் கிலாபத் இயக்கத்தை உணர்ந்து கொண்டனர்.

4. இந்தியத் தொழிலாளர் இயக்கத்தின் எழுச்சியை தெரிந்து கொண்டனர்.

தொடர்பணி :       

1. லக்னோ ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களை விவரி.

2. தன்னாட்சி இயக்கத்தின் முக்கியத்துவத்தை ஆய்க.

3. கிலாபத் இயக்கத்தின் கோரிக்கைகளை விவாதிக்க.


அ. அறிவழகன், மாநிலத் தலைவர் 

TNPGHTA அமைப்பு - 9944573722   

Download Pdf Link 👇👇👇

12th History - Notes of Lesson - Week 3








No comments:

Post a Comment

Featured Post

IT Projection Form FY 2025-26 (AY 2026-27) Version 26.0

வருமான வரி கணிப்பு படிவம்  நிதியாண்டு (2025 - 2026) Income Tax Projection Form - Version 26.0  (Old Regime and New Regime)  Financial Year 2...