12 ஆம் வகுப்பு - வரலாறு - அலகு 14
தேதி :
வகுப்பு : 12 ஆம் வகுப்பு
பாடம் : வரலாறு
தலைப்பு : 14. இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும்.
கற்பித்தல் துணைக் கருவிகள் :
திறன்பேசி, கணிப்பொறி, QR Code ஸ்கேனர், இந்திய வரைபடம், உலக உருண்டை.
கற்பித்தல் நோக்கங்கள் :
1. இரண்டாம் உலகப் போருக்கான காரணங்களை அறியச் செய்தல்.
2. இரண்டாம் உலகப் போரின் போக்கு, விளைவுகள் புரியச் செய்தல்.
3. சீனப் புரட்சி, ஷியாங் கே-ஷேக், மா சே-துங் பற்றி உணரச் செய்தல்.
4. இந்தோனேஷியா, பிலிப்லைன்ஸ் விடுதலை பற்றி விளங்கச் செய்தல்.
ஆயத்தம் செய்தல் :
1. இத்தாலியில் பாசிச ஆட்சியை நிறுவியவர் யார்?
2. ஜெர்மனியின் மீது திணிக்கப்பட்ட ஒப்பந்தம் எது?
3. பன்னாட்டு சங்கத்தில் இருந்து வெளியேறிய நாடுகள் எவை?
பாடக் குறிப்புகள் :
முதல் உலகப் போருக்குப் பின் கூட்டுப் பாதுகாப்பை முன்னிறுத்தி உருவாக்கப்பட்ட பன்னாட்டு அமைப்பு தகர்ந்தது. 1939 செப்டம்பரில் ஐரோப்பா, மீண்டும் ஒரு பெரும் போரை எதிர்கொண்டது. 1939 முதல் 1945 வரை நடந்த போர், இதற்குமுன் 1914 முதல் 1918 வரை நடந்த உலகப்போரை விஞ்சியதாக இருந்தது.
* இரண்டாம் உலகப்போர் : காரணங்கள்
* அமைதி உடன்படிக்கையின் நியாயமற்ற தன்மை
* பன்னாட்டு சங்கத்தின் தோல்வி, பொருளாதாரப் பெருமந்தம்
* ஜெர்மானிய தேசப்பற்றாளர்களின் மனக் குறைகள்
* முசோலினியின் விரிவாக்கக் கொள்கை
* ஜப்பானின் ஏகாதிபத்திய கொள்கை
* போர் உருவாகுதலில் ஹிட்லரின் பொறுப்பு
* மூனிச் ஒப்பந்தம், நாஜி-சோவியத் உடன்படிக்கை
* போரின் பல்வேறு நிலைகள் - ஐரோப்பாவில் போர்
* ஆசியா, பசிபிக் போர்கள் - பேர்ல் துறைமுக சம்பவம்
* ஸ்டாலின்கிராட் போர், முசோலினியின் வீழ்ச்சி
* ஆங்கிலேய - அமெரிக்க படைகளின் படையெடுப்பு
* அணுகுண்டுகள் வீச்சும் இரண்டாம் உலகப்போரின் முடிவும்
* அமைதியை நிலை நிறுத்தல், அமைதி மாநாடு, 1946
* இரண்டாம் உலகப்போரின் முடிவுகள், விளைவுகள்
* சீனப் புரட்சி, சன் யாட்-சென், யுவான் ஷி-காய்
* கோமின்டாங்கும் சியாங்க் கே-ஷேக்கும், மா சே-துங்
* இந்தோனேஷியா விடுதலை போராட்டங்கள் - சுகர்னோ
* பிலிப்பைன்ஸ் விடுதலை போராட்டங்கள் - ஹக் கிளர்ச்சி
மதிப்பிடுதல் :
1. பேர்ல் துறைமுகம் மீது தாக்குதல் நடத்திய நாடு எது?
2. நான்கிங் உடன்படிக்கையின் முக்கியத்துவம் யாது?
3. இந்தோனேஷிய விடுதலைக்கு பாடுபட்டவர் யார்?
கற்றல் விளைவுகள் :
1. இரண்டாம் உலகப் போருக்கான காரணங்களை அறிந்து கொண்டனர்.
2. இரண்டாம் உலகப் போரின் போக்கு, விளைவுகள் புரிந்து கொண்டனர்.
3. சீனப் புரட்சி, ஷியாங் கே-ஷேக், மா சே-துங் பற்றி உணர்ந்து கொண்டனர்.
4. இந்தோனேஷியா, பிலிப்லைன்ஸ் விடுதலை பற்றி தெரிந்து கொண்டனர்.
தொடர்பணி :
1. இரண்டாம் உலகப்போரின் விதைகளை வெர்செய்ல்ஸ் ஒப்பந்தமே தூவியது - விவரி
2. இரண்டாம் உலகப்போர் ஏற்பட ஜெர்மனியும், ஹிட்லரும் காரணம் - விளக்குக.
3. சீனாவில் பொதுவுடைமை அரசு உருவாக மா சே-துங்கின் பங்களிப்பை விவாதி.
அ. அறிவழகன், மாநிலத் தலைவர்
TNPGHTA அமைப்பு - 9944573722
Download Pdf Link 👇👇👇
12th History - Notes of Lesson - Week 14
No comments:
Post a Comment