12 ஆம் வகுப்பு - வரலாறு - அலகு 1
தேதி :
வகுப்பு : 12 ஆம் வகுப்பு
பாடம் : வரலாறு
தலைப்பு : 1. இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி
கற்பித்தல் துணைக் கருவிகள் :
திறன்பேசி, கணிப்பொறி, QR Code ஸ்கேனர், இந்திய வரைபடம், உலக உருண்டை.
கற்பித்தல் நோக்கங்கள் :
1. இந்தியாவில் தேசியம் தோன்றியதை அறியச் செய்தல்.
2. மேலைக் கல்வியின் தாக்கத்தை பற்றி புரியச் செய்தல்.
3. இந்திய தேசிய காங்கிரசின் தோற்றத்தை உணரச் செய்தல்.
4. ஆங்கிலேயரின் செல்வச் சுரண்டலைப் விளங்கச் செய்தல்.
ஆயத்தம் செய்தல் :
1. இந்தியாவை அடிமைப்படுத்திய ஐரோப்பிய நாடு எது ?
2. இந்திய விடுதலைப் போராட்டத் தலைவர்கள் யார் ?
3. தேசிய உணர்வு என்பதன் பொருள் என்ன ?
பாடக் குறிப்புகள் :
இந்தியாவை கட்டுப்படுத்துவதற்காகவும் அதிகமாகச் சுரண்டுவதற்காகவும் இந்திய அரசியலை, பொருளாதாரத்தை ஆங்கிலேயர்கள் ஒருமுகப்படுத்தினர். இது தேசிய உணர்வின் வளர்ச்சிக்கும், தேசிய இயக்கம் தோன்றுவதற்கும் இட்டுச் சென்றது.
1. சமூகப் பொருளாதாரப் பின்னணிகள்.
* புதிய நிலவுடைமை உரிமைகளால் ஏற்பட்ட பாதிப்புகள்.
* கட்டுப்பாடுகளற்ற வணிகக் கொள்கை, தொழில் நீக்கச் செயல்பாடுகள்.
* பஞ்சங்களும் இந்தியர்கள் ஆங்கிலேயரின் கடல் கடந்த காலனிகளில் குடியேறுதலும்,
2. மேற்கத்தியக் கல்வியும் அதன் தாக்கமும்.
* ஆங்கிலேயருக்கு முந்தைய இந்தியாவில் கல்வி, மெக்காலே கல்வி முறை.
* கற்றறிந்த மத்தியதர வகுப்பினரின் பங்கு, சமயப்பரப்பாளர்களின் பங்களிப்பு.
3. சமய சமூக சீர்திருத்தங்கள்.
* சமய சீர்திருத்த இயக்கங்கள்.
* சமூக சீர்திருத்தவாதிகள்.
4. தேசியத்தின் எழுச்சிக்கு ஏனைய முக்கியக் காரணங்கள்.
* 1857 குறித்த ஓயாத நினைவுகள், இனப்பாகுபாடு
* இந்தியர்களுக்கு எதிரான அடக்குமுறை, சுரண்டல் நடவடிக்கைகள்.
* பத்திரிகைகளின் பங்கு, இந்தியாவின் பழம் பெருமையை வணங்குதல்,
5. இந்தியாவில் சங்கங்கள் உருவாதல்.
* சென்னைவாசிகள் சங்கம், சென்னை மகாஜன சங்கம்.
* இந்திய தேசிய காங்கிரஸ், தொடக்ககால தேசியவாதிகள்.
6. தாதாபாய் நௌரோஜி அவர்களின் சுரண்டல் கோட்பாடு.
மதிப்பிடுதல் :
1. அவுரிப் புரட்சி எந்த ஆண்டு நடைபெற்றது ?
2. மெக்காலேயின் இந்தியக் கல்வி குறிப்பு யாது?
3. இந்தியாவின் முதுபெரும் மனிதர் யார் ?
கற்றல் விளைவுகள் :
1. இந்தியாவில் தேசியம் தோன்றியதை அறிந்து கொண்டனர்.
2. மேலைக் கல்வியின் தாக்கத்தை பற்றி புரிந்து கொண்டனர்.
3. இந்திய தேசிய காங்கிரசின் தோற்றத்தை உணர்ந்து கொண்டனர்.
4. ஆங்கிலேயரின் செல்வச் சுரண்டலைப் தெரிந்து கொண்டனர்.
தொடர்பணி :
1. தேசிய உணர்வு தோன்றக் காரணமான சமூகப் பொருளாதாரக் காரணிகளை ஆய்க.
2. பிரிட்டிஷாரின் அடக்குமுறை, இனவெறிக் கொள்கைகளை விவரி.
3. இந்தியத் தேசியக் காங்கிரஸின் நோக்கங்களை விளக்குக.
அ. அறிவழகன், மாநிலத் தலைவர்
TNPGHTA அமைப்பு - 9944573722
Download Pdf Link 👇👇👇
12th History - Notes of Lesson - Week 1
No comments:
Post a Comment