Home

06 November 2023

11 ஆம் வகுப்பு வரலாறு - பாடக்குறிப்பேடு - வாரம் 3

11 ஆம் வகுப்பு - வரலாறு - அலகு 4

தேதி  :       

வகுப்பு  11 ஆம் வகுப்பு      

பாடம்  : வரலாறு     

தலைப்பு  : 4. அரசு மற்றும் பேரரசு உருவாக்கம்  

கற்பித்தல் துணைக் கருவிகள் :       

திறன்பேசி, கணிப்பொறி, QR Code ஸ்கேனர், இந்திய வரைபடம், உலக உருண்டை.  

கற்பித்தல் நோக்கங்கள் :       

1. ஹரியங்கா வம்சம், நந்த வம்சம் பற்றி அறியச் செய்தல்.

2. பாரசீக, மாசிடோனிய படையெடுப்புகளை புரியச் செய்தல்.

3. அசோகரின் கல்வெட்டுக் கட்டளைகளை உணரச் செய்தல்.

4. மௌரியப் பேரரசின் ஆட்சி முறையை விளங்கச் செய்தல்.   

ஆயத்தம் செய்தல் :      

1. மகாஜன பதங்கள் என்றால் என்ன ?

2. சமண மதத்தை ஆதரித்த அரசர்கள் யார் ?

3. பௌத்த மதத்தை ஆதரித்த அரசர்கள் யார் ?     

பாடக் குறிப்புகள் :      

பொ.ஆ.மு. ஆறாம் நூற்றாண்டில் இருந்து மூன்றாம் நூற்றாண்டு வரை வட இந்தியா பல முக்கியமான அரசியல், சமூக மாற்றங்களை எதிர் கொண்டது. பல வலிமையான பேரரசுகள் தோன்றியுள்ளன. அயலவர் படையெடுப்புகளும் நடைபெற்றன.

* மௌரியர் கால வரலாற்றுச் சான்றுகள்.

* அர்த்தசாஸதிரம், இண்டிகா, முத்ராராட்சசம்.

* ஹரியங்கா வம்சத்தின் கீழ் மகதத்தின் எழுச்சி.

* நந்தர்கள் : இந்தியாவில் முதல் பேரரசை உருவாக்கியவர்.

* பாரசீக, மாசிடோனிய படையெடுப்புகள்.

* பாரசீகத் தொடர்பின் தாக்கம்.

* அலெக்சாண்டரின் படையெடுப்பும் அதன் தாக்கமும்.

* மௌரியப் பேரரசு - சந்திரகுப்தர், பிந்துசாரர், அசோகர்.

* அசோகரின் கல்வெட்டுக் கட்டளைகள்.

* மூன்றாவது பௌத்த சங்கம் - பாடலிபுத்திரம்.

* மௌரிய அரசும் ஆட்சி அமைப்பு - அர்த்தசாஸ்திரம்.

* மாகாண நிர்வாகம் மாவட்டம் மற்றும் கிராம நிர்வாகம்.

* வருவாய் ஆதாரம், நீதி நிர்வாகம், அசோகரின் தம்ம அரசு.

* பொருளாதாரமும் சமூகமும் - வேளாண்மை, வணிகம்.

* கைவினைப் பொருட்கள், நாணயமும் பணமும்.

* பொ.ஆ.மு. ஆறாம் நூற்றாண்டில் நகரமயமாக்கம்.

* வீடுகளும் நகர அமைப்பும் - பாடலிபுத்திரம்.

* மௌரியர் காலக் கலையும் பண்பாடும்.

மதிப்பிடுதல் :      

1. முதல் இந்தியப் பேரரசர் யார் ?

2. போரஸ் யாரிடம் தோல்வியுற்றார் ?

3. அசோகரின் தம்ம அரசு என்பது யாது ?

கற்றல் விளைவுகள் :      

1. ஹரியங்கா வம்சம், நந்த வம்சம் பற்றி அறிந்து கொண்டனர்.

2. பாரசீக, மாசிடோனிய படையெடுப்புகளை புரிந்து கொண்டனர்.

3. அசோகரின் கல்வெட்டுக் கட்டளைகளை உணர்ந்து கொண்டனர்.

4. மௌரியப் பேரரசின் ஆட்சி முறையை தெரிந்து கொண்டனர்.

தொடர்பணி :       

1.மௌரியப் பேரரசை பற்றி அறிய உதவும் சான்றுகளை விளக்குக.

2. அசோகரின் கல்வெட்டுக் கட்டளைகளை விளக்குக.

3. மௌரிய ஆட்சியமைப்பின் முக்கிய கூறுகளை விவரி.


அ. அறிவழகன், மாநிலத் தலைவர் 

தமிழ்நாடு முதுகலை வரலாறு ஆசிரியர் கழகம் - 9944573722   

Download Pdf Link 👇👇👇

11th History - Notes of Lesson - Week 3








No comments:

Post a Comment

Featured Post

Income Tax Form FY 2024 - 25 (Version 2.0) Date 20/12/2024 Old Regime and New Regime - By Arivazhagan

Income Tax Form Latest Version 2.0  (Old Regime and New Regime)  Financial Year 2024-25 (AY 2025-26)  Auto calculation is enabled in this So...

Popular Posts