Home

06 November 2023

11 ஆம் வகுப்பு வரலாறு - பாடக்குறிப்பேடு - வாரம் 14

11 ஆம் வகுப்பு - வரலாறு - அலகு 18

தேதி  :       

வகுப்பு  11 ஆம் வகுப்பு      

பாடம்  : வரலாறு     

தலைப்பு  : 18. ஆங்கிலேய ஆட்சிக்குத் தொடக்க கால எதிர்ப்புகள் 

கற்பித்தல் துணைக் கருவிகள் :       

திறன்பேசி, கணிப்பொறி, QR Code ஸ்கேனர், இந்திய வரைபடம், உலக உருண்டை.  

கற்பித்தல் நோக்கங்கள் :       

1. மைசூர் சுல்தான்களின் எதிர்ப்பு, மைசூர் போர்கள் அறியச் செய்தல்.

2. தென்னகப் பாளையக்காரர் தொடக்க கால எதிர்ப்பு புரியச் செய்தல்.

3.விவசாயிகள், பழங்குடிகள் ஆகியோரின் கிளர்ச்சி உணரச் செய்தல்.

4.தென்னிந்தியக் கிளர்ச்சி, 1857 பெருங்கிளர்ச்சி விளங்கச் செய்தல்.     

ஆயத்தம் செய்தல் :      

1. கட்டபொம்மன் யாரை எதிர்த்து போரிட்டார்?

2. கர்நாடகப் போர்களில் வெற்றி பெற்றது யார்?

3. பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது?

பாடக் குறிப்புகள் :      

ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி, தங்களது ஆட்சி எல்லையை தொடர்ந்து விரிவுப்படுத்தி வந்ததே பல கிளர்ச்சிகளுக்கு வழிவகுத்தன. அவர்களால் பதவியில் இருந்து நீக்கப்பட்ட மன்னர்கள் அல்லது அவர்களின் வாரிசுகள், ஜமீன்தார்கள், பாளையக்காரர்கள் ஆகியோரால் இத்தகைய கிளர்ச்சிகள் ஏற்பட்டன.

* மைசூர் சுல்தான்கள் - ஹைதர் அலி, திப்பு சுல்தான்

* முதலாம் மைசூர் போர் - சென்னை உடன்படிக்கை

* இரண்டாம் மைசூர் போர் - மங்களூர் உடன்படிக்கை

* மூன்றாம் மைசூர் போர் - ஸ்ரீரங்கப்பட்டண உடன்படிக்கை

* நான்காம் மைசூர் போர் - திப்பு சுல்தான் கொல்லப்பட்டார்

* தென்னகப் பாளையக்காரர்களின் தொடக்க கால எதிர்ப்புகள்

* பாளையக்காரர் தோற்றம், பாளையக்காரர்களின் கிளர்ச்சிகள்

* வேலு நாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை

* மருது சகோதரர்கள், 1801 தென்னிந்தியக் கிளர்ச்சி

* தீரன் சின்னமலை, வேலூர் புரட்சி (1806), சிப்பாய் கலகம்

* விவசாயிகள், பழங்குடிகள் ஆகியோரின் கிளர்ச்சிகள்

* கோல் கிளர்ச்சி - புத்த பதக், சோட்டா நாக்பூர் பகுதி

* சந்தால் கிளர்ச்சி - சித்தோ, கானு, ராஜ்மகல் குன்றுகள்

* முண்டா கிளர்ச்சி - பிர்சா முண்டா, சோட்டா நாக்பூர் பகுதி

* 1857 பெருங்கிளர்ச்சிக்கு காரணங்கள், மங்கள் பாண்டே

* ஜான்சி ராணி, நானா சாகிப், இரண்டாம் பகதூர்ஷா

* 1857 ஆம் ஆண்டு பெருங்கிளர்ச்சியின் விளைவுகள்

* விக்டோரியா மகாராணியின் பேரறிக்கை - 1858

மதிப்பிடுதல் :      

1. வராகன் (பகோடா) என்றால் என்ன?

2. கோல்களின் எழுச்சியை பற்றி குறிப்பிடுக.

3. தீரன் சின்னமலையின் கிளர்ச்சியை கூறுக.

கற்றல் விளைவுகள் :      

1. மைசூர் சுல்தான்களின் எதிர்ப்பு, மைசூர் போர்கள் அறிந்து கொண்டனர்.

2. தென்னகப் பாளையக்காரர் தொடக்க கால எதிர்ப்பு புரிந்து கொண்டனர்.

3.விவசாயிகள், பழங்குடிகள் ஆகியோரின் கிளர்ச்சி உணர்ந்து கொண்டனர்.

4.தென்னிந்தியக் கிளர்ச்சி, 1857 பெருங்கிளர்ச்சி தெரிந்து கொண்டனர்.

தொடர்பணி :       

1.1801 இல் நடைபெற்ற தென்னிந்தியக் கிளர்ச்சி பற்றி விவரிக்க.

2.1806 வேலூர் புரட்சிக்கான காரணங்கள், போக்கினை விளக்குக.

3.1857 புரட்சிக்கான காரணங்களையும், விளைவுகளையும் விவாதிக்க.


அ. அறிவழகன், மாநிலத் தலைவர் 

தமிழ்நாடு முதுகலை வரலாறு ஆசிரியர் கழகம் - 9944573722   

Download Pdf Link 👇👇👇

11th History - Notes of Lesson - Week 14








No comments:

Post a Comment

Featured Post

Income Tax Form FY 2024 - 25 (Version 2.0) Date 20/12/2024 Old Regime and New Regime - By Arivazhagan

Income Tax Form Latest Version 2.0  (Old Regime and New Regime)  Financial Year 2024-25 (AY 2025-26)  Auto calculation is enabled in this So...

Popular Posts