11 ஆம் வகுப்பு - வரலாறு - அலகு 1
தேதி :
வகுப்பு : 11 ஆம் வகுப்பு
பாடம் : வரலாறு
தலைப்பு : 1. பண்டைய இந்தியா : தொடக்கம் முதல் சிந்து நாகரிகம் வரை
கற்பித்தல் துணைக் கருவிகள் :
திறன்பேசி, கணிப்பொறி, QR Code ஸ்கேனர், இந்திய வரைபடம், உலக உருண்டை.
கற்பித்தல் நோக்கங்கள் :
1. இந்தியாவில் வாழ்ந்த கற்கால மனிதர்களை அறியச் செய்தல்.
2. புதிய கற்காலப் புரட்சியின் முக்கியத்துவத்தை புரியச் செய்தல்.
3. சிந்து நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டதை உணரச் செய்தல்.
4. சிந்து நாகரிகத்தின் சிறப்பியல்புகளை விளங்கச் செய்தல்.
ஆயத்தம் செய்தல் :
1. கற்காலம் என்றால் என்ன? நீ அறிந்தது என்ன?
2. கற்கால மனிதர்கள் எவ்வாறு காணப்பட்டனர்?
3. இந்தியாவில் முதல் நாகரிகம் எங்கு தோன்றியது?
பாடக் குறிப்புகள் :
இந்திய வரலாற்றில் கற்காலம் முதல் சிந்து நாகரிகம் வரையிலான காலத்தைப் புரிந்துகொள்ள தொல்லியல் சான்றுகளே உதவுகின்றன. வரலாற்றுக்கு முந்தைய காலம் என்பது எழுத்துமுறை தோன்றுவதற்கு முந்தைய காலகட்டமாகும். மனித மூதாதையர்கள் முதலில் ஆப்பிரிக்காவில் தோன்றி, பின்னர் உலகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தனர். சிந்து நாகரிகம் என்பது இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னமாகும்.
* வரலாற்றுக்கு முந்தைய இந்தியா - கற்காலம், வெண்கல காலம், இரும்பு காலம்.
* கற்காலம் - பழங்கற்காலம், இடைக்கற்காலம், புதியகற்காலம்.
* கீழ்ப் பழங்கற்காலம், இடைப் பழங்கற்காலம், மேல் பழங்கற்காலம்.
* பழங்கற்காலம் - கருவி வகைகள், காலவரிசை, பரவல், வாழ்க்கைமுறை.
* அச்சூலியன் மரபு மற்றும் சோஹானியன் மரபு.
* ஹோமினின் மற்றும் விலங்குகளின் புதைபடிவங்கள்.
* இடைக்கற்காலம் - தற்காலிக வசிப்பிடம், இறந்தோரை புதைத்தல், கலைகள்.
* வரலாற்றுக் காலத்தைச் சேர்ந்த வேட்டையாடிகள் - சேகரிப்பாளர்கள்.
* தொடக்க நிலைப் புதிய கற்காலப் பண்பாடுகள் - வேளாண்மையின் தொடக்கம்.
* புதிய கற்காலப் பண்பாடு - வடமேற்கு இந்தியா, காஷ்மீர்.
* புதிய கற்காலப் பண்பாடு - மத்திய இந்தியா, தென்னிந்தியா.
* புதிய கற்காலப் பண்பாடு - கிழக்கு இந்தியா, வடகிழக்கு இந்தியா.
* சிந்து நாகரிகம் - பெயரிடும் முறை, அமைவிடம்.
* சிந்து நாகரிகம் - காலவரிசையும் பரவலும்.
* திட்டமிடப்பட்ட நகரங்கள் - ஹரப்பா, மொகஞ்சதாரோ.
* சிந்து நாகரிக மக்களின் வாழ்வாதாரம், வேளாண்மை.
* பொருளாதாரம், கைவினைத் தயாரிப்பு, வணிகம்.
* கலைகள், பொழுதுபோக்கு, நம்பிக்கைகள், வீழ்ச்சி
* சிந்து நாகரிகத்தின் சமகாலப் பண்பாடுகள்.
மதிப்பிடுதல் :
1. மனித மூதாதையர்கள் முதலில் எங்கு தோன்றினர்?
2. மெஹர்கார் எந்த பண்பாட்டுடன் தொடர்புடையது?
3. ஹரப்பா மக்களின் முக்கிய வாழ்வாதாரம் எது?
கற்றல் விளைவுகள் :
1. இந்தியாவில் வாழ்ந்த கற்கால மனிதர்களை அறிந்து கொண்டனர்.
2. புதிய கற்காலப் புரட்சியின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டனர்.
3. சிந்து நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டதை உணர்ந்து கொண்டனர்.
4. சிந்து நாகரிகத்தின் சிறப்பியல்புகளை தெரிந்து கொண்டனர்.
தொடர்பணி :
1. வரலாற்றுக்கு முந்தைய இந்தியா குறித்து விளக்குக.
2. திட்டமிடப்பட்ட நகரங்களான ஹரப்பா, மொஹஞ்சதாரோ விளக்குக.
3. சிந்து நாகரிகம் ஏன் ஹரப்பா நாகரிகம் என்று அழைக்கப்படுகிறது?
அ. அறிவழகன், மாநிலத் தலைவர்
தமிழ்நாடு முதுகலை வரலாறு ஆசிரியர் கழகம் - 9944573722
Download Pdf Link 👇👇👇
11th History - Notes of Lesson - Week 1
No comments:
Post a Comment