பாமினி பேரரசு
அகமது ஷா : (1422 - 1436)
மீர் பஸீலுல்லா என்பவரிடம் கல்வி கற்றார்.
ஷகாபுதீன் அகமது என்ற பெயரில் அரியணை ஏறினார்.
பீடார் குல்பர்காவில் இருந்து 60 மைல் தொலைவில் இருந்தது.
பாரசீக நண்பர் கலப் ஹசனை பிரதம அமைச்சராக நியமித்தார்.
மாலிக் - உத் - துஜ்ஜார் என்ற பட்டத்தை கலப் ஹசனுக்கு வழங்கினார்.
மாலிக் - உத் - துஜ்ஜார் என்பதன் பொருள் வணிகப் பெருமக்களின் அரசர்.
மாலிக் - உத் - துஜ்ஜார் என்பது ஒரு தனிமனிதனுக்கு அளிக்கப்பட்ட உயரிய பட்டமாகும்.
பாரசீக துறவி ஷா நியமத்துல்லா கிர்மானியை தனது அரசவைக்கு அழைத்தார்.
ஷா நியமத்துல்லா தனது பேரன் ஷா நூருல்லாவை அனுப்பி வைத்தார்.
சிறிது காலம் கழித்து ஷா நியமத்துல்லா குடும்பத்துடன் பீடாருக்கு வந்தார்.
அகமது ஷா தனது ஒரு மகளை ஷா நூருல்லாவுக்கு திருமணம் செய்து வைத்தார்.
அகமது ஷா தனது மற்றொரு மகளை ஷா ஹபிபுல்லாவுக்கு திருமணம் செய்து வைத்தார்.
1423 இல் - அகமது ஷா வேட்டைக்கு சென்றிருந்து போது இந்துக்கள் பார்த்துவிட்டனர்.
அப்துல் காதரும் அவருடைய சகோதரர் அப்துல் லத்தீபும் அகமது ஷாவை காப்பாற்றினர்.
அப்துல் காதருக்கு கான் ஜஹான் என்ற பட்டமளித்து பீராரின் ஆளுநராக்கினார்.
அப்துல் லத்தீபுக்கு கான் ஆஜம் என்ற பட்டமளித்து பீடாரின் ஆளுநராக்கினார்.
அகமது ஷா விஜய நகரத்தின் மீது படையெடுத்து 20,000 இந்துக்களை கொன்று குவித்தார்.
இரண்டாம் தேவராயர், அகமது ஷாவின் கோரிக்கையை ஏற்று சமாதான செய்து கொண்டார்.
அகமது ஷா எனும் முஸ்லிம் இரண்டாம் தேவராயரின் நெருங்கிய நண்பர் - ஷெர்வானி கூறுகிறார்.
1424 இல் - பாமினி தளபதி கான் இ ஆஸம் வாரங்கல் அரசரை தோற்கடித்துக் கொன்றார்.
வாரங்கல் பாமினி அரசுடன் இணைக்கப்பட்டதால் வாரங்கலில் இந்துக்கள் ஆட்சி முடிவுற்றது.
அகமது ஷா, 1425 இல் - மாகூர் அரசரை தோற்கடித்துக் கொன்றார்.
அகமது ஷா காண்டேஷ் அரசுடன் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டார்.
1422 இல் மாளவ அரசர் ஹுஷங்ஷா கெர்லா நாட்டை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தார்.
1428 இல் நரசிங்க ராஜனிடம் கப்பம் வசூலிப்பதற்காக கெர்லா நாட்டின் மீது படையெடுத்தார்.
நரசிங்க ராஜன், அகமது ஷாவின் உதவியை நாடினார்.
முஸ்லிம் அரசன் ஒருவனுக்கு எதிராக போர் புரிய பணம் இல்லாமல் அகமது ஷா திரும்பினார்.
அகமது ஷா போரிட பயந்து பின் வாங்குவதாக நினைத்த மாளவ அரசர் அவரை விரட்டிச் சென்றார்.
தபதி நதிக் கரையில் மாளவ அரசர் ஹுஷங்ஷாவை கடுமையாகத் தாக்கித் தோற்கடித்தார்.
அகமது ஷா தான் கைப்பற்றிய பெண்களை ஹுஷங்ஷாவிடமே திருப்பி அனுப்பினார்.
பீடாரில் சில நாள் தங்கி இருந்த போது தான் தலைநகரை பீடாருக்கு மாற்றும் யோசனை வந்தது.
1425 இல் - தலைநகரை குல்பர்காவில் இருந்து பீடாருக்கு மாற்றினார்.
புதிய தலைநகரம் அகமதாபாத் - பீடார் என அழைக்கப்பட்டது.
அகமது ஷாவின் மூத்த மகன் அலாவுதீன் அகமது காண்டேஷ் அரசர் நசீர் கான் மகளை மணந்தார்.
1429 இல் குஜராத்தின் கீழ் இருந்த மாஹி தீவை தாக்கினார்.
குஜராத் அரசர் முதலாம் அகமதுவிடம் பாமினி படைகள் இருமுறை தோல்வி அடைந்தன.
தெலுங்கானாவில் நடைபெற்ற கலகத்தை அடக்கினார்.
1432 இல் - தனது சகோதரியின் மகன் ஷெர்கானை சூழ்ச்சி செய்வதாக கூறி கொன்றுவிட்டார்.
அகமது ஷா பாமினி சுல்தானாவதற்கு உதவியவர்களில் ஷெர்கானும் ஒருவர்.
குஜராத் போரால் அகமது ஷா தன்னுடைய வலிமையை இழந்து விட்டார்.
மாளவ அரசர் ஹுஷங்ஷா, கெர்லா அரசர் நரசிங்க ராஜாவை கொன்றார்.
நசீர்கான் முயற்சியால் அகமது ஷா - ஹுஷங்ஷா இடையே சமாதானம் ஏற்பட்டது.
1436 இல் - அகமது ஷா இறந்தார். இளவரசர் ஜாபர் கானிடம் அதிகாரங்களை ஒப்படைத்தார்.
ஷேக் ஹஸாரி - பாரசீக நாட்டில் உள்ள குராசான் பகுதியைச் சேர்ந்த கவிஞர்.
அகமது ஷா, தன்னை புகழ்ந்து இரண்டு கவிதைகளை எழுதிய ஷேக் ஹஸாரிக்கு ஏழு லட்சம் டங்கா நாணயங்களை பரிசளித்தார்.
பாமன் நாமா எனும் வரலாற்று நூலை கவிதை வடிவில் எழுதுமாறு ஹஸாரியிடம் கூறினார்.
அகமது ஷா ஷியா பிரிவுக்கு மாறினார் என்பதை அவரது கல்லறையில் மீதுள்ள ஒரு கல்வெட்டின் வாயிலாக அறிகிறோம்.
கர்பலாவில் வசிக்கும் ஏழைகளுக்கு வழங்குவதற்காக 30,000 வெள்ளி நாணயங்களை ஈராக் நாட்டிற்கு அனுப்பி வைத்தார்.
அகமது ஷாவின் மறைவு தினம் உரூஸ் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
யஸ்தானி எழுதிய "பீடார் அதன் வரலாறும் ஞாபகச் சின்னங்களும்" எனும் நூல் உரூஸ் விழாவைப் பற்றி விரிவாக கூறுகிறது.
நாட்டில் பஞ்சம் ஏற்பட்ட போது இறைவனிடம் மழை வேண்டி வணங்கினார்.
அகமது ஷா வேண்டியவுடன் மழை பெய்ததால் வலீ எனும் பட்டப் பெயரை பெற்றார்.
வலீ என்ற பெயரை இணைத்து "சுல்தான் அகமது ஷா வலீ" என்று அழைக்கப்பட்டார்.
இரண்டாம் அலாவுதீன் அகமது : (1436 - 1458)
சுல்தான் அகமது ஷாவின் மூத்த மகன் - இரண்டாம் அலாவுதீன் அகமது.
பிரதம அமைச்சர் - திலாவர்கான் ஆப்கானி.
வசீர் அல்லது பிரதமர் - குவாஜா ஜஹான் அஸ்தராபதி.
கலகம் செய்த தனது சகோதரர் முகமதுவை மன்னித்து தெலுங்கானா ஆளுநராக நியமித்தார்.
அதிகமான மது அருந்தும் பழக்கம் கொண்டவராக இருந்தாலும் மற்றவர்கள் மது அருந்துவதை கடுமையாக கண்டித்தார்.
மது அருந்திய குற்றத்திற்காக தொண்டையில் ஈயத்தை காய்ச்சி ஊற்றினார்.
பீடார் நகரில் ஏழைகளுக்காக ஒரு இலவச மருத்துவமனை கட்டினார்.
லோனேகர் வம்சத்தை சேர்ந்த இந்து அரசர்கள் ஆட்சி செய்த பகுதி - கொங்கணம்.
லோனேகர் அரசரை தோற்கடித்து கொங்கண பகுதியை பாமினி அரசுடன் இணைத்தவர் - திலாவர்கான்.
இரண்டாம் அலாவுதீன் அகமது மணந்து கொண்ட கொங்கண நாட்டு அரசரின் மகள் - பாரிசேரா.
பாரிசேரா என்பதன் பொருள் - தேவதை முகம் படைத்தவள்.
இரண்டாம் அலாவுதீன் அகமதுவின் பட்டத்து ராணி - சுல்தானா மலிகா ஜஹான்.
காண்டேஷ் நாட்டு ஃபரூகி வம்சத்தை சேர்ந்த அரசன் நசீர்கான் மகள் - மலிகா ஜஹான்.
காண்டேஷ், குஜராத், மாளவம் ஆகிய மூன்று நாடுகளின் படையிடம் பாமினிப் படைகள் தோல்வி அடைந்த இடம் - மாகிம்.
பாமினி படைத் தளபதி கலப்ஹசன் காண்டேஷ் அரசர் நசீர்கானை அவரது தலைநகரம் வரை விரட்டிச் சென்றார்.
காண்டேஷ் நாட்டின் தலைநகரம் - புரான்பூர்.
காண்டேஷ் அரசர் மீரான் அடில்கான் பாமினி அரசுடன் சமாதானம் செய்து கொண்டார்.
இரண்டாம் அலாவுதீன் அகமது காலத்தில் இருந்த விஜயநகர அரசர் - இரண்டாம் தேவராயர்.
இரண்டாம் தேவராயர் தனது படையில் 2000 முஸ்லிம் இராணுவ அதிகாரிகளை நியமித்தார்.
முஸ்லிம் வீரர்களுக்கு ஜாகிர்கள் வழங்கியதோடு தலைநகரில் ஒரு மசூதியை கட்டினார்.
2 ஆம் தேவராயர் - 60,000 இந்து போர் வீரர்களே தேர்ச்சி பெற்ற வில்லாளிகளாக மாற்றினார்.
பாமினி படைத் தளபதி கலப்ஹசன் விஜயநகர படைகளை தோற்கடித்தார்.
மலபாரின் ஒரு பகுதியை பாமினி ஆட்சிக்குள் கொண்டு வந்தவர் - மாலிக் துஜ்ஜார்.
கலப்ஹசன் தனது இராணுவ மையம் அமைத்த இடம் - சக்கான்.
மலபாரில் பாமினி அரசை எதிர்த்து கலகம் செய்தவர் - சங்கர் ராவ் ஷர்க்கி.
சங்கர் ராவ் ஷர்க்கி இஸ்லாம் மதத்தை தழுவி, பாமினி சுல்தானின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்தார்.
சங்கர் ராவ் ஷர்க்கி, சங்கமேஸ்வர அரசரின் உதவியுடன் கலப்ஹசனை கொன்றுவிட்டார் என புர்ஹான் இ மாசிர் கூறுகிறது.
கலப்ஹசன் நோய்வாய்ப்பட்டு இறந்தார் என ஷெர்வானி கூறுகிறார்.
தக்காண முஸ்லிம்களால் கலப்ஹசன் கொல்லப்பட்டார் என பெரிஷ்டா மற்றும் வி. ஏ. ஸ்மித் கூறுகிறார்கள்.
தக்காண முஸ்லிம் முஷைரு உல் முல்கிடம் சக்கானில் உள்ள அன்னிய முஸ்லிம்களை தண்டிக்குமாறு ஆணையிட்ட பாமினி சுல்தான் - இரண்டாம் அலாவுதீன் அகமது.
கலப்ஹசன் இறந்ததால் அவரது பதவியை பெற்றவர் - காசிம் பேக்.
இரண்டாம் அலாவுதீன் அகமதுவுக்கு எதிராக நளகொண்டா பகுதியில் கலகம் செய்த அவரது மைத்துனர் - ஜலால்கான்
ஜலால்கானின் மகன் சிக்கந்தர் மாணவர் நாட்டின் உதவியை நாடினார்.
மாமூத் கவான் தலைமையிலான பாமினி படை நளகொண்டா பகுதியை கைப்பற்றியது.
ஜலால்கான் மன்னிக்கப்பட்டு நளகொண்டா பகுதி அவரிடமே ஒப்படைக்கப்பட்டது.
இரண்டாம் அலாவுதீன் அகமது 1458 இல் இறந்தார்.
இரண்டாம் அலாவுதீன் அகமது ஆட்சியில் இந்து முஸ்லீம் விரோதம் மறைந்திருந்தது என ஷெர்வானி கூறுகிறார்.
அ. அறிவழகன், முதுகலை ஆசிரியர், 9944573722
No comments:
Post a Comment