2021-22 ஆம் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகள் சார்பாக அரசாணை வெளியிடப்பட்டு அதில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதலின் அடிப்படையில் மாறுதல் கோரும் ஆசிரியர்கள் உரிய விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து கல்வி தகவல் மேலாண்மை இணையத்தில் (EMIS Online) பதிவேற்றம் செய்தனர். அதன் அடிப்படையில் மேற்படி ஆசிரியர்களுக்கு மாறுதல்கள், பதவி உயர்வுகள், பணிநிரவல் சார்பான கால அட்டவணை வெளியிடப்பட்டு (பதவி வாரியாக) கலந்தாய்வு நடைபெற்று வந்தது.
இந்நிலையில் பள்ளிக் கல்வி ஆணையரக கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரியும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 15.2.2022 முதல் நடக்கவிருந்த மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நிருவாகக் காரணங்களுக்காக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் 04/03/2022 முதல் 16/03/2022 வரை ஆசிரியர்களுக்கு மாறுதல்கள் / பதவி உயர்வுகள் / பணிநிரவல் கலந்தாய்வுகள் நடைபெறவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment