02 May 2024

திரிபிடகங்கள்

பௌத்தர்களின் புனித நூல் திரிபிடகங்கள். இதன் பொருள் மூன்று கூடைகள். இது பாலி மொழியில் எழுதப்பட்டுள்ளது.

22 April 2024

Character Certificate for College TRB

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் கல்லூரி உதவிப் பேராசிரியர் போட்டித் தேர்வுக்கான நன்னடத்தைச் சான்றிதழ்.

05 April 2024

11th History - Public Exam Answe Keys - March 2024

11 ஆம் வகுப்பு வரலாறு மார்ச் 2024 அரசு பொதுத்தேர்வு விடைக் குறிப்புகள். 

14 March 2024

கல்லூரி விரிவுரையாளர் - போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு

கல்லூரி விரிவுரையாளர் போட்டித் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.

11th STD History - Unit Wise - Public Exam Questions - TM

11 ஆம் வகுப்பு வரலாறு முந்தைய ஆண்டு பொதுத்தேர்வுகளில் இதுவரை கேட்கப்பட்ட வினாக்கள் அலகு வாரியாகவும், வரைபடம், காலக் கோடு, கட்டாய வினா எனப் பிரித்தும் தரப்பட்டுள்ளது.

06 March 2024

பதினாறு மகாஜனபதங்கள் - குரு, பாஞ்சாலம், மத்சயம், சூரசேனம்

குரு

டெல்லி, மீரட் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக குரு இருந்தது. அதன் தலைநகரம் இந்திரப்பிரஸ்தம். மற்றொரு முக்கிய நகரம் ஹஸ்தினாபுரம். குரு அரசு வேதகாலத்தில் பெரும் செல்வாக்குடன் இருந்தது.

04 March 2024

பதினாறு மகாஜனப்பதங்கள் - அவந்தி, பிரத்யோதா

அவந்தி
மத்தியப்பிரதேச மாநிலத்தில் மாளவத்தைச் (உஜ்ஜயினி மாவட்டம்) சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கியதாக அவந்தி இருந்தது. வெட்ராவதி (பேட்வா) ஆறு அவந்தி நாட்டை இரண்டாகப் பிரிந்தது. இதன் முதன்மைத் தலைநகரம் உஜ்ஜயினி.

02 March 2024

பதினாறு மகாஜனப்பதங்கள் - வத்சம், உதயணன்

வத்சம்
உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கியதாக வத்சம் இருந்தது. வத்சம் யமுனை ஆற்றின் வலது கரையில் அமைந்து இருந்தது. அங்கு நேர்த்தியான பருத்தி ஆடைகள் உற்பத்தி செய்யப்பட்டன. இதன் தலைநகரம் கௌசாம்பி அல்லது கோசாம்பி. இது அலகாபாத்திற்கு தெற்கே சுமார் 38 மைல்கள் (அதாவது 64 கி.மீ.) தொலைவில் தற்போதுள்ள கோசம் என்ற இடத்தில் அமைந்திருந்தது.

29 February 2024

பதினாறு மகாஜனப்பதங்கள் - அங்கம், காசி

அங்கம் 

கிழக்கு பீகாரில் உள்ள மாங்கீர் மற்றும் பாகல்பூர் ஆகிய இரு மாவட்டங்களை உள்ளடக்கியதாக அங்கம் இருந்தது. இதன் தலைநகரம் சம்பா அல்லது மாலினி. இது சம்பா என்ற ஆற்றின் பெயரால் அழைக்கப்பட்டது. அங்க நாட்டில் சம்பா, கங்கை ஆகிய இரு ஆறுகள் பாய்ந்தன. இவ்விரு ஆறுகளும் சங்கமிக்கும் இடத்தில்தான் சம்பா நகரம் அமைந்திருந்தது.

27 February 2024

பதினாறு மகாஜனப்பதங்கள் - கோசலம், பிரசேனஜித்

கோசலம் 

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியைச் சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கியதாக கோசலம் இருந்தது. மேற்கே கோமதி நதிக்கும் கிழக்கே சதாநிரா நதிக்கும் இடையே அமைந்திருந்தது. சராயு நதி கோசலத்தை இரண்டாகப் பிரித்தது. வடக்கே சிராஸ்வதியும் தெற்கே குஷாவதியும் அதன் தலைநகரங்களாக இருந்தன.

25 February 2024

பதினாறு மகாஜனப்பதங்கள் - சான்றுகள்

மகாஜனப்பதங்கள்
ஜனபதம் என்பது ஜனா என்ற சொல்லில் இருந்து வந்தது. இதில் "ஜனா என்றால் இனக்குழு" என்றும் "ஜனபதம் என்றால் இனக்குழு தன் பாதம் பதித்த இடம்" என்றும் பொருள். அதாவது பின் வேதகாலத்தில் ஒவ்வொரு இனக்குழுவினரும் தமக்கென ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து நிலையாகத் தங்கி வாழ ஆரம்பித்தனர். அங்கு வம்சாவளி அடிப்படையிலான இனக்குழு அரசை தோற்றுவித்தனர். அவையே ஜனபதங்கள் என்று அழைக்கப்பட்டன. ஜனபதங்கள் வளங்களுக்காகவும் அரசியல் மேலாதிக்கத்திற்காகவும் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டன. அதில் சில ஜனபதங்கள் வலிமையாக இருந்ததால் அருகிலிருந்த மற்ற ஜனபதங்களைக் கைப்பற்றிக் கொண்டான. அதன் விளைவாக ஆட்சியாளரின் அதிகாரம் பெருகியது; அவரது எல்லையும் விரிவடைந்தது. இறுதியில் ஜனபதங்கள் மறைந்து "மகாஜனப்பதங்கள்" என்ற பெரிய அரசுகள் மலரத் தொடங்கின. 

13 February 2024

HRA and Housing Loan Deduction

வருமான வரி கணக்கிடும் போது வீட்டுக் கடனுக்கான அசலும், வட்டியும் மற்றும் வீட்டு வாடகைப் படியும் கழித்துக் கொள்ளலாம் - RTI மூலம் பெறப்பட்ட விளக்கம். 




12 February 2024

11 ஆம் வகுப்பு வரலாறு கட்டாய வினாக்கள் 2024

1. அரையாண்டுத் தேர்வு
2. முதல் திருப்புதல் தேர்வு 
3. இரண்டாம் திருப்புதல் தேர்வு 
வரலாறு கட்டாய வினாக்கள். 

11 ஆம் வகுப்பு - வரலாறு 
வினா எண். 30 

இராணிப்பேட்டை மாவட்டம். 
1. இராமலிங்க அடிகள் 
2. இராமலிங்க அடிகள்
3. இராஜா ராம் மோகன் ராய் 

திருவண்ணாமலை மாவட்டம் 
1. சமூக சீர்திருத்தம் இராஜாராம் மோகன் ராய் பங்களிப்பு.
2. தாமஸ் மன்றோ குறிப்பு.
3. புரிந்தார் உடன்படிக்கை. 

திருப்பூர் மாவட்டம்


புதுக்கோட்டை மாவட்டம்
1. வராகன் (பகோடா) 
2. இராமலிங்க அடிகள்
3. பெருங்குளம் 

தஞ்சாவூர் மாவட்டம்


கோயம்புத்தூர் மாவட்டம்


விழுப்புரம் மாவட்டம்
1. ராமலிங்க அடிகள்
2. சுவாமி விவேகானந்தர்
3. 1801 புரட்சி





11 ஆம் வகுப்பு - வரலாறு 
வினா எண். 40 

இராணிப்பேட்டை மாவட்டம். 
1. 1806 வேலூர் புரட்சி
2. 1857 புரட்சி விளைவுகள்
3. கீழடியில் கிடைத்த அணிகலன்கள்

திருவண்ணாமலை மாவட்டம் 
1. எம் ஜி ரானடே
2.ஆனந்தரங்கர்
3. 1857 புரட்சி 

திருப்பூர் மாவட்டம்


புதுக்கோட்டை மாவட்டம்
1. 1806 வேலூர் புரட்சி
2. 1806 வேலூர் புரட்சி
3. அயோத்தி தாசர் 

தஞ்சாவூர் மாவட்டம்


கோயம்புத்தூர் மாவட்டம்


விழுப்புரம் மாவட்டம்
1. 1857 புரட்சியின் விளைவுகள்
2. 1806 புரட்சி 
3. தாமஸ் மன்றோ 
4. தீரன் சின்னமலை 







12 ஆம் வகுப்பு வரலாறு கட்டாய வினாக்கள் 2024

1. அரையாண்டுத் தேர்வு
2. முதல் திருப்புதல் தேர்வு 
3. இரண்டாம் திருப்புதல் தேர்வு 
வரலாறு கட்டாய வினாக்கள். 

12 ஆம் வகுப்பு - வரலாறு 
வினா எண். 30 

இராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்கள். 
1. ஷுமன் திட்டம்
2. இந்தியப் பிரிவினையில் ராட்கிளிஃப் பங்கு. 
3. சமூக ஒப்பந்தம் நூலின் தொடக்க வரி 

திருவண்ணாமலை மாவட்டம் 
1. USA, USSR, உளவு நிறுவனங்கள்
2.கெல்லாக்-பிரையாணட் உடன்படிக்கை.
3. கோமிங்பார்ம். 

திருப்பூர் மாவட்டம் 
1. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பற்றி குறிப்பு. 
2. பி. ஆர். அம்பேத்கரால் வழி நடத்தப்பட்ட மஹத் சத்தியாகிரகம். 
3. எவ்வாறு இத்தாலி இணைவு முழுமை பெற்றது?

புதுக்கோட்டை மாவட்டம்
1. ரோம்-பெர்லின்-டோக்கியோ அச்சு
2. கோமிங்பார்ம் 
3. முதல் உலகப் போரில் பங்குபெற்ற மைய நாடுகள்

தஞ்சாவூர் மாவட்டம்
1. USA, USSR, உளவு நிறுவனங்கள்
2.கெல்லாக்-பிரையாணட் உடன்படிக்கை.
3. கவைட் கிளர்ச்சி முக்கியத்துவம். 

கோயம்புத்தூர் மாவட்டம் 
1. நேரு தலைமை புதிய அரசின் முன்னிருந்த கடமைகள் 
2. பி. ஆர். அம்பேத்கர் வழிநடத்திய மஹத் சத்தியாகிரகம். 
3. எவ்வாறு இத்தாலிய இணைவு முழுமை பெற்றது. 

விழுப்புரம் மாவட்டம் 
1. பாலஸ்தீன விடுதலை இயக்கம் 
2. உளவு நிறுவனங்கள் 
3. பூமிதான இயக்கம் 

சேலம் மாவட்டம்
1. மூனிச் ஒப்பந்தம் 
2. கவைட் கிளர்ச்சி முக்கியத்துவம் 
3. 

அரியலூர் மாவட்டம்
1. பாஸ்டன் தேநீர் விருந்து
2. மூன்றாவது ரெய்க் 
3. 

தூத்துக்குடி மாவட்டம்
1. பன்னாட்டுச் சங்கம் 
2. இந்திய அரசியலமைப்பு உறுப்பு 3 
3. முதல் உலகப் போரில் பங்குபெற்ற மைய நாடுகள்

தென்காசி மாவட்டம்
1. கோமிங்பார்ம்
2. அணிசேரா இயக்கம்
3. ரூசோ எழுதிய சமூக ஒப்பந்தம்

நீலகிரி மாவட்டம்
1. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி அளிப்பு சட்டம். 
2. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.
3. பி.ஆர்.அம்பேத்கரால் வழிநடத்தப்பட்ட மகத் சத்தியாகிரகம். 

நாமக்கல் மாவட்டம்
1. பூமிதான இயக்கம்
2. அட்லாண்டிக் பட்டயம் 
3. ஐ.நா. வின் அமைதிக்காக இணைகிறோம் தீர்மானம். 
4. பன்னாட்டுச் சங்கத்தில் இருந்து 1933 இல் ஜெர்மனி வெளியேறுதல். 

விருதுநகர் மாவட்டம்
1. ரூசோ குறிப்பு 
2. ஹிட்லர் குறிப்பு
3. பாஸ்டன் தேநீர் விருந்து

ஈரோடு மாவட்டம் 
1. மெடிசி குடும்பம் பற்றி குறிப்பு
2. ஷூமன் திட்டம் என்றால் என்ன?
3. லியானார்டோ டாவின்சி குறிப்பு 





12 ஆம் வகுப்பு - வரலாறு 
வினா எண். 40 

இராணிப்பேட்டை, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்கள்.  
1. சூயஸ் கால்வாய் சிக்கல் 
2. அணுகுண்டு தாக்குதல் ஏற்படுத்திய பாதிப்புகள் 
3. மௌண்ட்பேட்டன் திட்டம் 

திருவண்ணாமலை மாவட்டம் 
1. சீன தேசிய அரசியலில் கோமின்டாங் கட்சியின் பங்கு. 
2. சுகர்னோ‌ ஆற்றிய பங்கு.
3. சூயஸ் கால்வாய் சிக்கல். 

திருப்பூர் மாவட்டம்
1. முதல் உலகப்போரில் அமெரிக்கா ஈடுபட காரணமான நிகழ்வுகள். 
2. பஞ்சசீலக் கொள்கையின் ஐந்து கோட்பாடுகள்.
3. மெளண்ட் பேட்டன் திட்டம். 

புதுக்கோட்டை மாவட்டம்
1. இரண்டாம் உலகப் போரின் முக்கிய விளைவுகள் 
2. சன்யாட் சென் 
3. ஹிட்லர் 

தஞ்சாவூர் மாவட்டம்
1. சீன தேசிய அரசியலில் கோமின்டாங் கட்சியின் பங்கு. 
2. சுகர்னோ ஆற்றிய பங்கு. 
3. டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் 

கோயம்புத்தூர் மாவட்டம்
1. சூயஸ் கால்வாய் சிக்கல் 
2. பஞ்சசீலக் கொள்கையின் ஐந்து கோட்பாடுகள். 
3. மெளண்ட் பேட்டன் திட்டம். 

விழுப்புரம் மாவட்டம் 
1. இரண்டாம் உலகப்போரின் முக்கிய விளைவுகள்
2. கோமிங்பார்ம்
3. சூயஸ் கால்வாய் சிக்கல் 

சேலம் மாவட்டம்
1. இரண்டாம் உலகப் போரின் முக்கிய விளைவுகள் 
2. டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் 
3. 

அரியலூர் மாவட்டம்
1. சூயஸ் கால்வாய் சிக்கல்
2. U படகுகள் மற்றும் Q கப்பல்கள்
3. 

தூத்துக்குடி மாவட்டம்
1. இயேசு சபை
2. பாண்டுங் அறிக்கை 
3. அணிசேரா இயக்கம்

தென்காசி மாவட்டம்
1. சூயஸ் கால்வாய் சிக்கல்
2. ஹிட்லர் குறிப்பு 
3. மௌண்ட் பேட்டன் திட்டம்

நீலகிரி மாவட்டம்
1. பி.ஆர். அம்பேத்கர்  சிறுகுறிப்பு. 
2 முதல் உலகப்போரில் அமெரிக்கா ஈடுபட காரணமான நிகழ்வு. 
3. பஞ்சசீலக் கொள்கையின் ஐந்து கோட்பாடுகள். 

நாமக்கல் மாவட்டம்
1. சூயஸ் கால்வாய் சிக்கல்
2. U படகுகள் மற்றும் Q கப்பல்கள் 
3. இரண்டாம் உலகப் போரின் முக்கிய விளைவுகள் 

விருதுநகர் மாவட்டம்
1. இரண்டாம் உலகப் போரின் முக்கிய விளைவுகள் 
2. 1492 இல் கொலம்பஸ் பயணம் 
3. இரண்டாம் உலகப் போரின் விளைவுகள் 

ஈரோடு மாவட்டம் 
1. மறுமலர்ச்சியின் தாயகமாக இத்தாலி ஏன்?
2. இந்தோனேசியா விடுதலை சுகர்னோ ஆற்றிய பங்கு. 
3. தாதாபாய் நௌரோஜி குறிப்பு. 









08 February 2024

பொதுத் தேர்வுகளுக்கான கையேடு 2024

10, 11, மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள், தேர்வுப் பணிகளுக்கான கையேடு 2024 - அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியீடு 

Handbook on Exam Duties and Responsibilities - March / April 2024

Download File

வருமானவரி படிவம் நிதியாண்டு 2023-2024

வருமானவரி படிவம் நிதியாண்டு 2023-2024 

Income Tax Form 2023-24_Automatic Calculator_With Form 16_Version 24.0

Download File





வருமானவரி பிடித்தம் (TDS) வழிகாட்டுதல் கையேடு 2023

வருமானவரி பிடித்தம் (TDS) தொடர்பான வழிகாட்டுதல் கையேடு 2023 

தலைமை வருமானவரி ஆணையரகம் (சென்னை) 

Download File


வருமானவரி பிடித்தம் (TDS) தொடர்பான கருவூலக் கணக்குத் துறையின் சுற்றறிக்கை

Download File





07 February 2024

பத்துப்பாட்டு நூல்கள்

பத்துப்பாட்டு : 

சங்க கால இலக்கியங்களில் முக்கியமானவை எட்டுத்தொகை, பத்துப்பாட்டு. இவை இரண்டும் சேர்ந்ததே பதினெண் மேல்கணக்கு நூல்கள். தொகை என்பதற்கு பல புலவர்கள் பாடியது என்றும் பாட்டு என்பதற்கு தனி ஒரு புலவர் பாடியது என்றும் பொருள். 


பத்துப்பாட்டு நூல்கள் கடைச்சங்க காலத்தில் தோன்றியவை. பத்துப்பாட்டு என்பது பத்து தனித்தனி பாடல்களின் தொகுப்பாகும். ஒவ்வொரு பாடலும் நூறு அல்லது அதற்கு மேலான அடிகளைக் கொண்ட ஒரு நூலாக விளங்குகிறது. 


"முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை

பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய

கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி‌ பட்டினப்

பாலை கடாத்தொடும் பத்து". ,

- என்ற வெண்பா மூலம் பத்துப்பாட்டில் உள்ள நூல்களின் பெயர்களை அறியலாம். 


அதாவது திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, முல்லைப் பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகிய நூல்களைக் கொண்டதே பத்துப்பாட்டு நூல்கள் ஆகும். பத்துப்பாட்டில் உள்ள பாடல்கள் பல்வேறு காலங்களில் பல்வேறு புலவர்களால் பாடப்பட்டவை ஆகும். ஆற்றுப்படை நூல்களில் வரும் ஆற்றுப்படுத்துதல் என்பதன் பொருள் வழிப்படுத்துதல். 


1. திருமுருகாற்றுப்படை : 

திருமுருகாற்றுப்படை இயற்றியவர் நக்கீரர். பாட்டுடையத் தலைவன் முருகன். இந்நூல் 317 அடிகளைக் கொண்ட ஒரே பாடலாக உள்ளது. முருகனிடம் வீடுபேறு அடைந்த ஒரு புலவர், வீடுபேறு அடைய விரும்பும் புலவரை ஆற்றுப்படுத்தி அனுப்புகிறார். எனவே இதற்கு புலவர் ஆற்றுப்படை என்ற மற்றொருப் பெயரும் உண்டு. முருகப் பெருமானின் திருவுருவம், அவரது ஆறுபடை வீடுகள், அங்கு நடைபெறும் வழிபாட்டு முறைகள் ஆகியவை பற்றிக் கூறுகிறது. 


2. பொருநராற்றுப்படை : 

பொருநராற்றுப்படை ஆசிரியர் முடத்தாமக் கண்ணியார். பாட்டுடைய தலைவன் கரிகாலச் சோழன். இந்நூல் 248 அடிகளைக் கொண்ட ஒரே பாடலாக உள்ளது. கரிகாலனிடம் பரிசில் பெற்ற ஒரு பொருநன், பரிசில் பெற விரும்பும் பொருநனை ஆற்றுப்படுத்தி அனுப்புகிறார். பொருநன் என்பவன் யாழ் இசைத்துக் கொண்டு, பாடல் பாடிக் கொண்டு, தாளத்துக்கு ஏற்ப நடித்துக் கொண்டு வந்து அரசனிடம் பரிசில் பெரும் கலைஞர்கள் ஆவார். கரிகாலனின் பெருமை, வீரச் செயல்கள், கொடைத்தன்மை, போர்த்திறம், வெண்ணிப் போரில் பெற்ற வெற்றி, அரசியல் மேன்மை, விருந்தோம்பல் குணம், சோழ நாட்டின் வளங்கள், பாலை யாழின் சிறப்பு, பொருநனின் வறுமை நிலை, பொருநன் மனைவி பாடினி, பண்டமாற்று முறை, நெசவுத் தொழில் ஆகியவை பற்றிக் கூறுகிறது. 


3. சிறுபாணாற்றுப்படை : 

சிறுபாணாற்றுப்படை இயற்றியவர் நல்லூர் நத்தத்தனார். பாட்டுடையத் தலைவன் நல்லியக் கோடன். இந்நூல் 269 அடிகளைக் கொண்ட ஒரே பாடலாக உள்ளது. சிறிய யாழை வாசிப்போர் சிறு பாணர் என்று அழைக்கப்பட்டனர். நல்லியக் கோடனிடம் பரிசில் பெற்ற ஒரு பாணன், பரிசில் பெற விரும்பும் பாணனை ஆற்றுப்படுத்தி அனுப்புகிறார். சிறிய யாழின் சிறப்பு, சிறு பாணனின் வறுமை நிலை, பாணன் மனைவி பாணினி, நல்லியக் கோடனின் பெருமை, கொடைப் பண்பு, விருந்தோம்பல் குணம், அவனது ஒய்மான் நாட்டின் வளங்கள், கடையேழு வள்ளல்களின் வரலாறு, மூவேந்தர்களின் நாடுகள் ஆகியவை பற்றிக் கூறுகிறது. 


4. பெரும்பாணாற்றுப்படை : 

பெரும்பாணாற்றுப்படை ஆசிரியர் கடியலூர் உருத்திரங் கண்ணனார். பாட்டுடைய தலைவன் தொண்டைமான் இளந்திரையன். இந்நூல் 500 அடிகளைக் கொண்ட ஒரே பாடலாக உள்ளது. பெரிய யாழை வாசிப்போர் பெரும் பாணர் என்று அழைக்கப்பட்டனர். இளந்திரையனிடம் பரிசில் பெற்ற ஒரு பாணன், பரிசில் பெற விரும்பும் பாணனை ஆற்றுப்படுத்தி அனுப்புகிறார். பெரிய யாழின் சிறப்பு, பெரும் பாணரின் வறுமை நிலை, பாணன் மனைவி பாணினி, இளந்திரையனின் கொடைப் பண்பு, தொண்டை நாட்டின் வளங்கள், பல தொழில் புரியும் மக்கள், வேடர், ஆயர், உழவர், பரதவர், எயினர், மறவர், அந்தணர் ஆகிய குடிகளையும் அவர்களின் விருந்தோம்பல் பண்பு, தொண்டை நாட்டின் தலைநகரான காஞ்சி மாநகரின் சிறப்பு, கடற்கரையில் இருந்த வானுயர்ந்த கலங்கரை விளக்கம், உப்பு வணிகம் செய்த உமணர்கள் ஆகியவை பற்றிக் கூறுகிறது. 


5. முல்லைப் பாட்டு : 

முல்லைப் பாட்டு ஆசிரியர் நப்பூதனார். பாட்டுடைய தலைவன் பெயர் தெரியவில்லை. இந்நூல் 103 அடிகளைக் கொண்ட ஒரே பாடலாக உள்ளது. தலைவியைப் பிரிந்து தலைவன் போர்க்களம் செல்வது, தலைவனின் பிரிவை தாங்க முடியாமல் தலைவி வருந்துவது, தலைவன் வெற்றியோடு திரும்பி வருவான் என முதிய பெண் ஆறுதல் கூறுவது, தமிழர்களின் போர்க்களம், போர்க் கருவிகள், யவனர்கள் காவல் புரிவது, முல்லை நில கடவுள், பாவை விளக்கு, மழைக் காலத்தில் பூக்கும் மலர்கள் ஆகியவை பற்றிக் கூறுகிறது. 


6. மதுரைக் காஞ்சி : 

மதுரைக் காஞ்சி ஆசிரியர் மாங்குடி மருதனார். பாட்டுடைய தலைவன் நெடுஞ்செழியன். இந்நூல் 782 அடிகளைக் கொண்ட ஒரே பாடலாக உள்ளது. உலகில் எதுவும் நிலையில்லை என்ற உண்மையை தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு எடுத்துக் கூறுவது, நெடுஞ்செழியனின் வீரம், நேர்மையான ஆட்சி, முன்னோர்களின் சிறப்பு, பாண்டிய நாட்டின் இயற்கை வளம், ஐவகைத் திணைகள், மதுரையில் இயங்கிய வந்த பாண்டியர்கள் நீதிமன்றம், நாலங்காடி மற்றும் அல்லங்காடி, ஏழைகளுக்கு உணவளிக்கும் அன்ன சாலைகள், மதுரையின் தோற்றம், வீதிகள் மற்றும் வீடுகளின் அமைப்பு, மதுரையைச் சுற்றி இருந்த மதில்கள், அகழிகள், சமண - பௌத்த பள்ளிகள், அந்தணர் பள்ளிகள், சமய சகிப்புத்தன்மை, பலவகை தொழில்கள், கடல்கடந்த வாணிகம், பூவேலை செய்யப்பட்ட ஆடைகள், ரத்தினக் கற்கள் பதித்த ஆபரணங்கள் ஆகியவை பற்றிக் கூறுகிறது. 


7. நெடுநல்வாடை : 

திருமுருகாற்றுப்படை இயற்றியவர் நக்கீரர். பாட்டுடையத் தலைவன் நெடுஞ்செழியன். இந்நூல் 188 அடிகளைக் கொண்ட ஒரே பாடலாக உள்ளது. நெடுநல்வாடை என்பதற்கு நீண்ட நல்ல வாடைக் காற்று என்று பொருள். வடக்கு இருந்து வீசுவது வடை காற்று தெற்கில் இருந்து வீசுவது தென்றல் காற்று. வாடை என்பது குளிர்க் காற்றை குறிக்கிறது. அரசன் போர்களம் செல்கிறான். அரசனைப் பிரிந்து வாடும் அரசிக்கு வாடைக் காற்று நெடியதாக தோன்றுகிறது. அதனைக் கண்ட அரண்மனை பெண் அரசன் விரைவில் திரும்ப வேண்டும் என்று கொற்றவை வழிபாடு செய்கிறாள். அரசன் போர்களத்தில் புண்பட்ட வீரர்களுக்கும், யானைகளுக்கும், குதிரைகளுக்கும் அன்பு காட்டி ஆறுதல் செலுத்துகிறார். வீரன் ஒருவனுடன் அரசன் போர்க் களத்தைச் சுற்றிப் பார்ப்பது, பெரிய அரண்மனை, உயரமான மதில் சுவர்கள், கோட்டை வாயில்கள், அரசனது அந்தப்புரம், சதுர வடிவில் கட்டப்பட்ட வீடுகள், ஆடை அணிகலன்கள், சடங்குகள், பழக்க வழக்கங்கள் ஆகியவை பற்றிக் கூறுகிறது. 


8. குறிஞ்சிப் பாட்டு : 

குறிஞ்சிப் பாட்டு ஆசிரியர் கபிலர். பாட்டுடைய தலைவன் ஆரிய அரசன் பிரகதத்தன். இந்நூல் 261 அடிகளைக் கொண்ட ஒரே பாடலாக உள்ளது. ஆரிய அரசன் பிரகதத்தனுக்கு தமிழர்களின் அறத்தை கூறுவறு, கற்பு மணம், களவு மணம், தலைவி தலைவன் மேல் கொண்ட அன்பு, தலைவன் யானையை விரட்டிய வீரம், தலைவனைப் பிரிந்த தலைவி துயரப்படும் காட்சி, நவரத்தின ஆபரணங்கள், 99 வகையான மலர்கள், குறிஞ்சி நிலத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை, மலை வளம், மறுபிறப்பில் நம்பிக்கை, முருகன் வழிபாடு ஆகியவை பற்றிக் கூறுகிறது. 


9. பட்டினப்பாலை : 

பட்டினப்பாலை ஆசிரியர் கடியலூர் உருத்திரங் கண்ணனார். பாட்டுடைய தலைவன் கரிகாலச் சோழன். இந்நூல் 301 அடிகளைக் கொண்ட ஒரே பாடலாக உள்ளது. பொருள் தேட வேண்டி தலைவன் தலைவியை பிரிந்து செல்ல நினைக்கிறான். தான் பிரிந்து செல்வதை தலைவி தாங்கமாட்டால் எனக் கருதும் தலைவன் தனது முடிவைக் கைவிடுவதைப் பற்றி கூறுகிறது. பட்டினம் என்பது துறைமுக நகரத்தைக் குறிக்கிறது. கரிகாலனின் சிறப்பு, வீரச் செயல்கள், கொடைப் பண்பு, அவனது தலைநகரமான காவிரிப் பூம்பட்டினத்தின் சிறப்பு, அங்கு நிறுத்தப்பட்டு இருந்த கப்பல்கள், கடல் கடந்த வாணிகம், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, சுங்க வரி வசூல், ஆகியவை பற்றிக் கூறுகிறது. 


10. மலைபடுகடாம் : 

மலைபடுகடாம் ஆசிரியர் பெருங்கௌசிகனார். பாட்டுடைய தலைவன் நன்னன் சேய் நன்னன். இந்நூல் 583 அடிகளைக் கொண்ட ஒரே பாடலாக உள்ளது. நன்னனிடம் பரிசில் பெற்ற ஒரு கூத்தன், பரிசில் பெற விரும்பும் கூத்தனை ஆற்றுப்படுத்தி அனுப்புகிறார். எனவே இதற்கு கூத்தர் ஆற்றுப்படை என்று மற்றொருப் பெயரும் உண்டு. நன்னன் ஒரு சிறந்த போர் வீரன், கொடை வள்ளல், விருந்தோம்பல் குணம் மிகுந்தவன். தொண்டை நாட்டின் ஒரு பகுதியாக இருந்த பல் குன்றக் கோட்டம் என்பது இவனுடைய நாடு. அதன் தலைநகர் செங்கன்மா என்கிற செங்கம். நாகத்தை வழிபடுதல், நடுகற்கள் வழிபாடு, நன்னன் நாட்டு மக்களின் வாழ்க்கை முறை, உணவுப் பொருட்கள், பழக்க வழக்கங்கள் ஆகியவை பற்றிக் கூறுகிறது. 






எட்டுத்தொகை நூல்கள்

எட்டுத்தொகை : 

சங்க கால இலக்கியங்களில் முக்கியமானவை எட்டுத்தொகை, பத்துப்பாட்டு. இவை இரண்டும் சேர்ந்ததே பதினெண் மேல்கணக்கு நூல்கள். தொகை என்பதற்கு பல புலவர்கள் பாடியது என்றும் பாட்டு என்பதற்கு தனி ஒரு புலவர் பாடியது என்றும் பொருள். 


எட்டுத்தொகை நூல்கள் கடைச்சங்க காலத்தில் தோன்றியவை. எட்டுத்தொகை என்பது எட்டு நூல்களின் தொகுப்பாகும். 

"நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு 

ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் 

கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று 

இத்திறத்த எட்டுத் தொகை". 

- என்ற வெண்பா மூலம் எட்டுத்தொகை நூல்களின் பெயரை அறியலாம். 


அதாவது நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய நூல்களைக் கொண்டதே எட்டுத்தொகை நூல்கள் ஆகும். எட்டுத்தொகை நூல்களில் உள்ள பாடல்கள் பல்வேறு புலவர்களால் பல்வேறு கால கட்டங்களில் பாடப்பட்டவை. இதில் 2352 பாடல்களை 25 அரசர்கள், 30 பெண்பாற் புலவர்கள் உட்பட மொத்தம் 700 புலவர்கள் பாடியுள்ளனர். மேலும் 102 பாடல்களுக்கு பாடியவர்கள் பெயர் தெரியவில்லை. 


எட்டுத்தொகை நூல்களை அகப்பொருள் சார்ந்தவை, புறப்பொருள் சார்ந்தவை என இரண்டாகப் பிரிக்கின்றனர். நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகிய ஐந்தும் அகம் சார்ந்த நூல்கள். பதிற்றுப்பத்து, புறநானூறு ஆகிய இரண்டும் புறம் சார்ந்த நூல்கள். பரிபாடல் மட்டும் அகமும் புறமும் கலந்த நூலாகும். 


1. நற்றிணை : 

நற்றிணை என்பது 400 பாடல்களைக் கொண்ட நூலாகும். இதைத் தொகுத்தவர் பெயர் தெரியவில்லை. தொகுப்பித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி.  


நற்றிணைப் பாடல்கள் அக்காலச் சமூகத்தைப் பற்றி அறிய பெரிதும் உதவுகின்றன. மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு, கொடைத் தன்மை, மக்களின் வாழ்க்கை முறைகள், நம்பிக்கைகள், சடங்குகள் போன்றவற்றை உணர்த்துகின்றன. 


பல்லி கத்தும் ஓசையை வைத்து சகுனம் பார்க்கும் வழக்கம், கால்பந்து விளையாட்டை பெண்களும் விளையாடும் வழக்கம், கிளி, நாரை ஆகியவற்றைத் தூதுவிடும் வழக்கம், தலைவனைப் பிரிந்து வாடும் தலைவி அவனது வருகையை சுவரில் கோடிட்டு எண்ணும் வழக்கம் ஆகியவற்றை நற்றிணைப் பாடல்கள் வாயிலாக அறிகிறோம். 


அதியமான், அழிசி, ஆய் அண்டிரன், ஓரி, காரி, உதியன், செங்குட்டுவன், சேந்தன், நன்னன், தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் போன்ற வேந்தர்களும் குறுநில மன்னர்களும் நற்றிணையில் குறிப்பிடப்பட்டுள்ளனர். 


2. குறுந்தொகை : 

குறுந்தொகை என்பது 400 பாடல்களைக் கொண்ட நூலாகும். இதைத் தொகுத்தவர் பூரிக்கோ. தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.  


குறுந்தொகைப் பாடல்கள் மூலம் சங்க காலத் தமிழர்களின் இல்லற வாழ்க்கை, ஆடை அணிகலன்கள், உணவுப் பழக்கங்கள், பண்டமாற்று முறை, விருந்தோம்பல் வழக்கம், தலைவியைப் பிரிந்து தலைவன் பொருள் ஈட்டச் செல்லுதல், பொழுதுபோக்கு விளையாட்டுகள் ஆகியவைப் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. 


3. ஐங்குறுநூறு : 

ஐங்குறுநூறு என்பது 500 பாடல்களைக் கொண்ட நூலாகும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஒவ்வொரு திணைக்கும் 100 பாடல்கள் பாடப்பட்டு உள்ளன. இதைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார். தொகுப்பித்தவர் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.  


அரசன் வெற்றியுடன் வாழ வேண்டும். மக்கள் குறைகளை போக்க வேண்டும். அப்போது தான் நாட்டில் அமைதி நிலவும். மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ முடியும் எனக் கூறுகிறது. தலைவி தலைவனுடன் சென்றதால் தலைவியின் தாய் துன்புறும் காட்சி வருகிறது. தொண்டி, கொற்கை, தகட்டூர் போன்ற நகரங்களைப் பற்றியும் தேனூர், ஆமூர் போன்ற ஊர்களைப் பற்றியும் கூறுகிறது. கற்பு வாழ்க்கை, களவு மணம், நடுகற்கள் வழிபாடு முறை, 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அந்தணர்கள் பற்றியும் கூறுகிறது. 


4. பதிற்றுப்பத்து : 

பதிற்றுப்பத்து என்பது 100 பாடல்களைக் கொண்ட நூலாகும். ஒவ்வொரு 10 பாடல்களும் ஒரு சேர மன்னர் மீது பாடப்பட்டு உள்ளது. இதில் 80 பாடல்கள் மட்டுமே தற்போது வரை கிடைத்துள்ளன. முதல் பத்தும் கடைசி பத்தும் கிடைக்கவில்லை. இதைத் தொகுத்தவர் மற்றும் தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.  


பதிற்றுப்பத்தில் பத்து சேர அரசர்களின் வரலாறு இடம் பெற்றுள்ளது. 

2 ஆம் பத்து இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பற்றியும், 3 ஆம் பத்து பல்யானை செல்கெழு குட்டுவன் பற்றியும், 4 ஆம் பத்து களங்காய்க் கண்ணி நாற்முடிச் சேரல் பற்றியும், 5 ஆம் பத்து கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் பற்றியும், 6 ஆம் பத்து ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் பற்றியும், 7 ஆம் பத்து செல்வக் கடுங்கோ வாழியாதன் பற்றியும், 8 ஆம் பத்து பெருஞ்சேரல் இரும்பொறை பற்றியும், 9 ஆம் பத்து இளஞ்சேரல் இரும்பொறை பற்றியும் கூறுகிறது. முதல் பத்து உதியஞ் சேரலாதன் பற்றியும் கடைசிப் பத்து மாந்தரஞ்சேரல் இரும்பொறை பற்றியும் கூறுவதாக நம்பப்படுகிறது. 


5. பரிபாடல் : 

பரிபாடல் என்பது 70 பாடல்களைக் கொண்ட நூலாகும். இதில் 22 பாடல்கள் மட்டுமே தற்போது வரை கிடைத்துள்ளன. இதைத் தொகுத்தவர் மற்றும் தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.  


சிவன், முருகன், திருமால், பிரம்மா போன்ற கடவுள்கள் பற்றி கூறுகிறது. கடவுளை ஏற்போரும் மறுப்போரும் இருந்தனர். விரிநூல் அந்தணர், புரிநூல் அந்தணர் என இரு பிரிவினர் இருந்தனர். மதுரை மாநகர மக்கள் அந்தணர்கள் வேதம் ஓதுவதைக் கேட்டும் உறையூர் மற்றும் வஞ்சி மாநகர மக்கள் சேவல் கூவுவதைக் கேட்டும் விடியற் காலையிலேயே விழித்தனர். ஆறுகளின் குறுக்கே அணை கட்டி நீர்ப்பாசனம் செய்தனர். நடனமாடும் மகளிர் இருந்தனர். மாடு, யானை, குதிரை, கழுதை பூட்டிய வண்டிகளை வாகனங்களாகப் பயன்படுத்தினர். பூவேலைபாடுடன் கூடிய ஆடைகள் மற்றும் பலவகை அணிகலன்களை அணிந்தனர். முகம் பார்க்கும் கண்ணாடி இருந்தது. இரதி-மன்மதன் ஓவியங்களும் அகலிகையின் வரலாற்றை விளக்கும் ஓவியமும் எழுதப்பட்டு இருக்கிறது. நடனம் ஆடுவோர், பாடல் பாடுவோர், சூது ஆடுவோர் தங்கள் திறமையை நிரூபிக்க அவரவர் துறையில் போட்டி போட்டனர். 


6. கலித்தொகை : 

கலித்தொகை என்பது 150 பாடல்களைக் கொண்ட நூலாகும். இதைத் தொகுத்தவர் நல்லந்துவனார். தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.  


கடையேழு வள்ளல்களில் ஒருவனான பறம்பு மலை தலைவன் பாரியைப் பற்றி கபிலர் பாடியுள்ளார். ஏறுதழுவுதல், கற்பு மணம், களவு மணம், ஆண்களின் வீரம், பெண்களின் கற்பு நெறி, விருந்தோம்பல், நட்புக்கு தகுதி இல்லாதவர்கள் செய்யும் செயல்கள், அணிகலன்கள், கொடுக்கல் வாங்கல் கடன் பெறும் வழக்கம், இசைக்கருவிகள் பற்றி கூறப்பட்டுள்ளது. 


அளவுக்கு மீறி வரி வாங்கினால் நாடு பாழாகும். நேர்மையான வழியில் ஆண்கள் பொருள் ஈட்டுதல் வேண்டும். இராமாயணம், மகாபாரதம் மற்றும் புராணங்களில் வரும் செய்திகளை சுட்டிக் காட்டுகிறது. வேதம் ஓதும் அந்தணர்கள், வேள்வி செய்யும் அந்தணர்கள் இருந்தார்கள் எனக் கூறுகிறது. பொய் சாட்சி சொன்னவன் ஒரு மரத்தின் கீழ் நின்றால் அம்மரம் தீப்பற்றி எரியும், சந்திரனை ராகு என்னும் பாம்பு விழுங்குவதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது, பல்லி சொல்லுக்கு பலன் உண்டு, பெண்களின் இடது கண் துடித்தால் நன்மை உண்டாகும் போன்ற நம்பிக்கைகளை மக்கள் பின்பற்றியதைக் கூறுகிறது. 


7. அகநானூறு : 

அகநானூறு என்பது 400 பாடல்களைக் கொண்ட நூலாகும். இதைத் தொகுத்தவர் உருத்திரக் கண்ணனார். தொகுப்பித்தவர் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி.  


சோழர்கள் குடவோலை தேர்தல் முறையில் சபை உறுப்பினர்களை தேர்வு செய்தனர். அலெக்ஸாண்டர் படையெடுத்து வந்த போது நந்தர்கள் தமது செல்வத்தை கங்கை ஆற்றின் அடியில் புதைத்து வைத்தனர். பண்டைய தமிழ்நாட்டின் வட எல்லையாக வேங்கட மலை இருந்தது. சேரலாதன் என்ற சேர மன்னன் வட இந்தியா மீது படையெடுத்துச் சென்று இமயத்தில் வில் அம்பு கொடியை நட்டார். வெண்ணிப் போரில் கரிகாலன் வெற்றி பெற்றார் என்றும் தோல்வி அடைந்த சேரலாதன் வடக்கிருந்து உயிர் துறந்தார். தலையாலங்கானம் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் பாண்டியன் நெடுஞ்செழியன் வெற்றி பெற்றார். கடையேழு வள்ளல்களில் ஒருவனான காரி, மற்றொரு வள்ளலான வில் வித்தையில் சிறந்த ஓரியை போரில் கொன்றார். முசிறி துறைமுகத்துக்கு வந்த யவனர்களின் கப்பல் பொன்னை கொடுத்துவிட்டு மிளகை ஏற்றிச் சென்றது. மேலும் கற்பு மணம், களவு மணம், திருமணச் சடங்குகள், நடுகற்கள் வழிபாடு போன்ற பல வரலாற்று செய்திகள் அகநானூற்று பாடல்களில் இடம் பெற்றுள்ளன. 


மேலும் இந்நூலில் வஞ்சி, மதுரை, காவிரிப்பூம்பட்டினம், முசிறி, தொண்டி, கொற்கை, கருவூர் போன்ற நகரங்களின் பெயர்களும் நன்னன், அதியமான், பேகன், ஆய் அண்டிரன், காரி, ஓரி போன்ற வள்ளல்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. 


8. புறநானூறு : 

புறநானூறு என்பது 400 பாடல்களைக் கொண்ட நூலாகும். இதைத் தொகுத்தவர் மற்றும் தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.  







ஐந்திணைகள்

ஐந்திணைகள் : 

தமிழர்கள் தங்கள் வாழ்வியலை அகம், புறம் என இரண்டாகப் பிரித்திருந்தனர். அதே போல் நிலத்தை ஐந்து திணைகளாகப் பிரித்திருந்தனர். அவையாவன: குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை. நிலம் அகத்தின் கீழ் வருவதால் அதை அன்பின் ஐந்திணை என்று அழைத்தனர். 


அகம் என்பது முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இவை ஐந்திணைகளுக்கும் தனித்தனியே ஒதுக்கப்பட்டு இருந்தன. முதற்பொருள் என்பது ஐந்திணைக்கு உரிய நிலம், பெரும்பொழுது, சிறுபொழுது ஆகியவற்றைக் கூறுகிறது. கருப்பொருள் என்பது ஐந்திணைக்கு உரிய மக்கள், தொழில், கடவுள், உணவு, விலங்கு, பறவை, மரம், மலர், பண், யாழ் ஆகியவற்றைக் கூறுகிறது. உரிப்பொருள் என்பது ஐந்திணைக்கு உரிய ஒழுக்கத்தைக் கூறுகிறது. 


பெரும்பொழுது ஒரு வருடத்தை ஆறு காலங்களாகவும் சிறுபொழுது ஒரு நாளினை ஆறு கூறுகளாகவும் பிரிக்கிறது. இளவேனில், முதுவேனில், கார்காலம், குளிர்காலம், முன்பனிக் காலம், பின்பனிக் காலம் ஆகிய ஆறும் பெரும்பொழுதுகள். வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம் ஆகிய ஆறும் சிறுபொழுதுகள். 


1. குறிஞ்சித் திணை : 

குறிஞ்சி நிலம் என்பது மலையும் மலை சார்ந்த இடமாகும். குறிஞ்சி நில மக்கள் சேயோன்‌ அல்லது முருகனை கடவுளாக வழிபட்டனர். இங்கு வாழ்ந்த மக்கள் குறவர், குறத்தியர் என அழைக்கப்பட்டனர். முக்கியத் தொழிலாக வேட்டையாடுதல் இருந்தது. இவர்கள் மலை நெல், தினை ஆகிய உணவுகளை உண்டனர். குறிஞ்சி நில ஊர்கள் சிறுகுடி என்று அழைக்கப்பட்டன. 


2. முல்லைத் திணை : 

முல்லை நிலம் என்பது காடும் காடு சார்ந்த இடமாகும். முல்லை நில மக்கள் மாயோன் அல்லது திருமாலை கடவுளாக வழிபட்டனர். இங்கு வாழ்ந்த மக்கள் ஆயர், ஆய்ச்சியர் என அழைக்கப்பட்டனர். முக்கியத் தொழிலாக மேய்த்தல் தொழில் இருந்தது. இவர்கள் சாமை, வரகு ஆகிய உணவுகளை உண்டனர். முல்லை நில ஊர்கள் பாடி, சேரி என்று அழைக்கப்பட்டன. 


3. மருதத் திணை : 

மருத நிலம் என்பது வயலும் வயல் சார்ந்த இடமாகும். மருத நில மக்கள் இந்திரனை கடவுளாக வழிபட்டனர். இங்கு வாழ்ந்த மக்கள் உழவர், உழத்தியர் என அழைக்கப்பட்டனர். முக்கியத் தொழிலாக வேளாண்மை செய்தல் இருந்தது. செந்நெல், வெண்ணெல் ஆகிய உணவுகளை உண்டனர். மருத நில ஊர்கள் பேரூர், மூதூர் என்று அழைக்கப்பட்டன. 


4. நெய்தல் திணை : 

நெய்தல் நிலம் என்பது கடலும் கடல் சார்ந்த இடமாகும். நெய்தல் நில மக்கள் வருணனை கடவுளாக வழிபட்டனர். இங்கு வாழ்ந்த மக்கள் பரதர், பரத்தியர் என அழைக்கப்பட்டனர். முக்கியத் தொழிலாக மீன் பிடித்தல் இருந்தது. நெய்தல் நில ஊர்கள் பட்டினம், பாக்கம் என்று அழைக்கப்பட்டன. 


5. பாலைத் திணை : 

பாலை நிலம் என்பது மணலும் மணல் சார்ந்த இடமாகும். பாலை நில மக்கள் கொற்றவை அல்லது காளியை கடவுளாக வழிபட்டனர். இங்கு வாழ்ந்த மக்கள் எயினர், எய்ற்றியர் என அழைக்கப்பட்டனர். முக்கியத் தொழிலாக வழிப்பறிக் தொழில் இருந்தது. இவர்கள் கொள்ளை அடிப்பதில் கிடைத்த உணவுகளை உண்டனர். பாலை நில ஊர்கள் குறும்பு என்று அழைக்கப்பட்டன. 







Featured Post

Income Tax Form FY 2024 - 25 (Version 2.0) Date 20/12/2024 Old Regime and New Regime - By Arivazhagan

Income Tax Form Latest Version 2.0  (Old Regime and New Regime)  Financial Year 2024-25 (AY 2025-26)  Auto calculation is enabled in this So...

Popular Posts