வ.உ.சி என்று சுருக்கமாக அழைக்கப்படும் வ.உ.சிதம்பரனார் தமிழகத்தில் தோன்றிய சுதந்திர போராட்ட வீரர்களில் மிகவும் தனித்துவம் வாய்ந்த தலைவர். சுதேசி இயக்கத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதோடு 1906 ஆம் ஆண்டு சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனியை நிறுவினார். சுதேசி இயக்கத்தின் செயல் வடிவமாக எழுச்சி பெற்ற வ.உ.சி. நாட்டுக்கே முன்னோடியாகத் திகழ்ந்தார். ஆங்கிலேயர்களின் கடலாதிக்க முற்றுரிமைக்கு சவால்விடும் வகையில் முதன் முதலாக கப்பலோட்டினார். அதன் காரணமாக கப்பலோட்டிய தமிழன் என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்டார்.
05 September 2021
டெல்லி சட்டப்பேரவை முதல் செங்கோட்டை வரை கண்டறியப்பட்ட சுரங்கப்பாதை
டெல்லி சட்டப்பேரவை வளாகத்திற்குள் சுரங்கப்பாதை போன்ற ஒரு அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. டெல்லி செய்தித் தொடர்பாளர் ராம் நிவாஸ் கோயல் அளித்த பேட்டியில், இந்தச் சுரங்கப்பாதை டெல்லி சட்டப்பேரவையை செங்கோட்டையுடன் இணைக்கிறது என்றும் சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் போது வீரர்களின் தாக்குதலில் இருந்து தப்பிக்க ஆங்கிலேயர்களால் பயன்படுத்தப்பட்டது என்றும் கூறினார்.
1993 இல் நான் எம்எல்ஏ ஆனபோது, செங்கோட்டைக்கு செல்லும் ஒரு சுரங்கப்பாதை இருப்பதை அறிந்ததும், அதன் வரலாற்றை தேட முயற்சித்தேன். ஆனால் அது தெளிவாக இல்லை" என்று அவர் கூறினார். இப்போது நாம் சுரங்கப்பாதையின் முகப்பு பகுதியை மட்டுமே கண்டறிந்து உள்ளோம், ஆனால் நாங்கள் அதை மேலும் தோண்ட மாட்டோம், ஏனென்றால் சுரங்கப்பாதையின் அனைத்து வழிகளும் சுரங்கப்பாதை திட்டங்கள் மற்றும் கழிவுநீர் அமைப்புகளால் அழிக்கப்பட்டிருக்கலாம்" என்று அவர் கூறினார்.
ஆங்கிலேயர் ஆட்சியின் போது 1912 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் இருந்து டெல்லிக்கு தலைநகர் மாற்றப்பட்டது. தற்போது டெல்லி சட்டப்பேரவை செயல்பட்டு வரும் இந்த கட்டிடம் அந்த காலகட்டத்தில் மத்திய சட்டப்பேரவையாக இருந்தது. அதன் பின்னர் கடந்த 1926 ஆம் ஆண்டு அது நீதிமன்றமாக மாற்றப்பட்டது. சுதந்திர போராட்ட வீரர்களை நீதிமன்றத்திற்கு அழைத்து வர ஆங்கிலேயர்கள் இந்த சுரங்கப்பாதையைப் பயன்படுத்தினர் என்று கோயல் தெரிவித்தார்.
சட்டப்பேரவை வளாகத்திற்குள் தூக்கு அறை ஒன்று இருப்பதை நாங்கள் அனைவரும் அறிந்திருந்தோம், ஆனால் அதை ஒருபோதும் திறக்கவில்லை. இப்போது சுதந்திரத்தின் 75 வது ஆண்டு, இந்த அறையை ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளோம். இந்த அறையை சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவிடமாக மாற்றும் எண்ணம் உள்ளது. சுதந்திரத்துடன் தொடர்புடைய டெல்லியில் உள்ள சட்டப் பேரவையின் வரலாற்றைக் கருத்தில் கொண்டு, தூக்கு அறையை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட அடுத்த ஆண்டு சுதந்திர தினத்துக்கு முன் திறக்க உள்ளதாகவும் அதற்கான பணிகள் தொடங்கிவிட்டதாகவும் அவர் கூறினார்.
Featured Post
Income Tax Form FY 2025-2026 (AY 2026-2027) By Arivazhagan - Version 2.0 Dated 10/12/2025
Income Tax Form Version 2.0 (New Regime) Last Updated 10/12/2025
-
Income Tax Form Latest Version 2.0 (Old Regime and New Regime) Financial Year 2024-25 (AY 2025-26) Auto calculation is enabled in this So...
-
12 ஆம் வகுப்பு - வரலாறு PPT and Online Test PPT Work Thanks to க. சுந்தரமூர்த்தி திருவண்ணாமலை மாவட்டம் Online Test Thanks to ம. சக்திவேல் க...
-
Income Tax Form Version 2.0 (New Regime) Last Updated 10/12/2025

