Home

02 May 2024

திரிபிடகங்கள்

திரிபிடகங்கள் என்பதன் பொருள் மூன்று கூடைகள். இது பௌத்தர்களின் புனித நூல். பாலி மொழியில் எழுதப்பட்டுள்ளது.

இதிலுள்ள ஒவ்வொரு பாடலையும் ஒரு குறுகிய இலையின் மீது எழுதி பௌத்த மடாலயத்தில் இருந்த மூன்று கூடைகளில் இட்டு பாதுகாப்பாக சேகரித்து வைத்தனர். பின்னர் அவை மூன்று பகுதிகளாகத் தொகுக்கப்பட்டன. இதன் காரணமாகவே திரிபிடகங்கள் (மூன்று கூடைகள்) என்ற பெயர் வந்தது. 


திரிபிடகம் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. 

1. சுத்த பிடகம்

தொகுத்தவர் - ஆனந்தர் 

காலம் - முதல் சங்கம் 

இதில் புத்தரின் வாழ்க்கை மற்றும் போதனைகள் இடம்பெற்று உள்ளன. 

இது ஐந்து நிகாயங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளன. 

1. திகா நிகாயம் 

2. மஜ்ஜிம நிகாயம் 

3. சம்யுத்த நிகாயம் 

4. அங்குதார நிகாயம் 

   (16 மகாஜனப் பதங்கள் பற்றி கூறுகிறது) 

5. குந்தக நிகாயம் 

(குந்தக நிகாயத்தில் 15 நூல்கள் உள்ளன. அவற்றில் சில முக்கியமான நூல்கள் பின்வருமாறு - ஜாதகங்கள், தம்மபதம், புத்தவம்சம், தேராகதா, தேரிகதா) 


2. வினய பிடகம்

தொகுத்தவர் - உபாலி 

காலம் - முதல் சங்கம் 

இதில் பௌத்த துறவிகளுக்கான ஒழுக்க விதிமுறைகள் இடம்பெற்று உள்ளன. 

இதில் இரண்டு முதன்மைப் பகுதிகளும் ஒரு இணைப்பு பகுதியும் உள்ளன. 

1. சுத்த விபாங்கா 

(மகா விபாங்கா பிக்குனி விபாங்கா) 

2. காந்தகா 

(மகா வாகா, சுள்ள வாகா) 

3. பரிவாரா (இணைப்புப் பகுதி) 

மகா விபாங்கா - ஆண் துறவிகளுக்கான 227 விதிமுறைகளை கொண்டது. 

பிக்குனி விபாங்கா - பெண் துறவிகளுக்கான 311 விதிமுறைகளை கொண்டது. 


3. அபிதம்ம பிடகம் 

தொகுத்தவர் - மொக்கலி புத்ததிஸா 

காலம் - மூன்றாவது சங்கம் 

இதில் பௌத்த மதத் கோட்பாடுகள் பற்றிய தத்துவ விளக்கங்கள் இடம்பெற்று உள்ளன. 

இதில் மொத்தம் ஏழு நூல்கள் உள்ளன்.

No comments:

Post a Comment

Featured Post

சிந்தனைக் களம் - 3

வெற்றிக்குத் தேவை இலக்கு வெற்றி என்பது தேர்ந்தெடுத்த ஒரு இலக்கை அடைவதன் மூலம் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் மகிழ்ச்சியடையச் செய்யும் ஒ...

Popular Posts