11 ஆம் வகுப்பு - வரலாறு - அலகு 17
தேதி :
வகுப்பு : 11 ஆம் வகுப்பு
பாடம் : வரலாறு
தலைப்பு : 17. ஆங்கிலேயர் ஆட்சியின் விளைவுகள்
கற்பித்தல் துணைக் கருவிகள் :
திறன்பேசி, கணிப்பொறி, QR Code ஸ்கேனர், இந்திய வரைபடம், உலக உருண்டை.
கற்பித்தல் நோக்கங்கள் :
1. நிலையான நிலவரி திட்டம், இரயத்வாரி முறை அறியச் செய்தல்.
2. துணைப்படைத் திட்டம், வாரிசு உரிமை இழப்பு புரியச் செய்தல்.
3. பிரிட்டிஷாரின் நீதி நிர்வாகம், கல்வி வளர்ச்சி உணரச் செய்தல்.
4. பிண்டாரி போர், சதி ஒழிப்பு, செல்வ சுரண்டல் விளங்கச் செய்தல்.
ஆயத்தம் செய்தல் :
1. இந்தியாவை அடிமைப்படுத்திய நாடு எது ?
2. பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது?
3. ஆற்காடு வீரர் என்று அழைக்கப்பட்டவர் யார்?
பாடக் குறிப்புகள் :
முகலாயப் பேரரசின் வீழ்ச்சியோடு மைய அதிகாரம் நொறுங்கியதால் ஓர் ஆங்கிலேய வணிக நிறுவனம் இந்தியாவை கையகப்படுத்தும் நிலை ஏற்பட்டது. ஆரம்பத்தில் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியின் நோக்கம் நிர்வாகம் செய்வது அல்ல, மாறாக அது சிக்கலில்லாமல் வியாபாரம் புரிவதாகவே இருந்தது.
* ஆங்கிலேய அரசு உருவாக்கம்
* இராபர்ட் கிளைவ் - இரட்டையாட்சி முறை
* வாரன் ஹேஸ்டிங்ஸ், ஒழுங்குமுறைச் சட்டம் 1773
* நிலையான நிலவரி முறை, இரயத்துவாரி முறை
* துணைப்படைத் திட்டம் - வெல்லெஸ்லி பிரபு
* வாரிசு உரிமை இழப்புக் கொள்கை - டல்ஹொசி
* சுதேச அரசுகளும் ஆங்கிலேயரின் மேலாதிக்கமும்
* குடிமை மற்றும் நீதி நிர்வாகங்களில் சீர்திருத்தங்கள்
* கம்பெனி ஆட்சியில் கல்வி வளர்ச்சி - மெக்காலே குழு
* பாதுகாப்பு முயற்சிகளும் வளர்ச்சி நடவடிக்கைகளும்
* பிண்டாரிகளுடன் போர், தக்கர்களை அடக்குதல்
* சதி வழக்கம் ஒழிப்பு - வில்லியம் பெண்டிங் பிரபு
* இருப்புப்பாதையும், தபால் - தந்தி முறையும்
* நீர்ப்பாசன வசதி - ஆர்தர் காட்டன், காடுகள் அழிப்பு
* தொழில் முடக்கம் - கைத்தொழில்கள் வீழ்ச்சியடைதல்
* செல்வச் சுரண்டல் - தாதாபாய் நௌரோஜியின் கருத்து
* வறுமை நிலை சார்லஸ் ட்ராவல்யன், அபே டுபாய்
* ஒப்பந்தக் கூலி முறை - வெளிநாடுகளுக்கு புலம் பெயர்தல்
* பஞ்சங்கள் - சென்னை தாது வருடப் பஞ்சம், ஒரிசா பஞ்சம்
* காலனிய அரசு பின்பற்றிய தலையிடா வணிகக் கொள்கை
மதிப்பிடுதல் :
1. இரட்டையாட்சி முறை என்றால் என்ன?
2. சதி வழக்கம் ஒழிக்கப்பட்டது பற்றி கூறுக.
3. சார்லஸ் உட் அறிக்கையின் கூறுகள் யாவை?
கற்றல் விளைவுகள் :
1. நிலையான நிலவரி திட்டம், இரயத்வாரி முறை அறிந்து கொண்டனர்.
2. துணைப்படைத் திட்டம், வாரிசு உரிமை இழப்பு புரிந்து கொண்டனர்.
3. பிரிட்டிஷாரின் நீதி நிர்வாகம், கல்வி வளர்ச்சி உணர்ந்து கொண்டனர்.
4. பிண்டாரி போர், சதி ஒழிப்பு, செல்வ சுரண்டல் தெரிந்து கொண்டனர்.
தொடர்பணி :
1. வெல்லெஸ்லி அறிமுகப்படுத்திய துணைப்படைத் திட்டத்தை விளக்குக.
2. ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தின் கீழ் கல்வி வளர்ச்சியை விவரி.
3. "செல்வ வளங்கள் வெளியேறியது இந்தியாவை ஏழ்மையாக்கியது" - விவாதி.
அ. அறிவழகன், மாநிலத் தலைவர்
தமிழ்நாடு முதுகலை வரலாறு ஆசிரியர் கழகம் - 9944573722
Download Pdf Link 👇👇👇
11th History - Notes of Lesson - Week 13
No comments:
Post a Comment