Home

06 November 2023

11 ஆம் வகுப்பு வரலாறு - பாடக்குறிப்பேடு - வாரம் 12

11 ஆம் வகுப்பு - வரலாறு - அலகு 16

தேதி  :       

வகுப்பு  11 ஆம் வகுப்பு      

பாடம்  : வரலாறு     

தலைப்பு  : 16. ஐரோப்பியரின் வருகை 

கற்பித்தல் துணைக் கருவிகள் :       

திறன்பேசி, கணிப்பொறி, QR Code ஸ்கேனர், இந்திய வரைபடம், உலக உருண்டை.  

கற்பித்தல் நோக்கங்கள் :       

1.17,18 ஆம் நூற்றாண்டில் இந்திய அரசியலை அறியச் செய்தல்.

2. போர்த்துகீசியர், டச்சுகள், டேனியர்கள் பற்றி புரியச் செய்தல்.

3. ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள் பற்றி உணரச் செய்தல்.

4. மூன்று கர்நாடகப் போர்களைப் பற்றி விளங்கச் செய்தல்.

ஆயத்தம் செய்தல் :      

1. இந்தியாவிற்கு கடல்வழியை கண்டுபிடித்தவர் யார்?

2. வாஸ்கோடகாமா எந்த இடத்தில் தரையிறங்கினார்?

3. ஐரோப்பிய வணகர்கள் ஏன் இந்தியாவிற்கு வந்தனர்?

பாடக் குறிப்புகள் :      

ஐரோப்பியர் 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இந்தியாவிற்கு வந்துவிட்டனர். அவர்களின் நோக்கம் சந்தைக்குத் தேவையான பொருட்களைக் கொள்முதல் செய்வது. 1757 இல் பிளாசிப் போரில் ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றனர். அதுவே இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியின் தொடக்கமாக அமைந்தது.

* இந்தியாவின் அரசியல் நடவடிக்கைகள் 

* முகலாயப் பேரரசு (1600-1650)

* விஜயநகருக்குப் பின் தென்னிந்தியா (1600-1650)

* முகலாயப் பேரரசு (1650-1700)

* முகலாயப் பேரரசின் வழிதோன்றல்கள் (1700-1750)

* இந்தியாவின் பொருளாதார நிலைமைகள்

* வேளாண்மை, வாணிகம், பருத்தி, நெசவு, கைத்தொழில்

* இந்திய வணிகர்களுடன் கூட்டமைப்பு ஏற்படுத்துதல்

* ஐரோப்பியர் வருகையும் அதற்குப் பிந்தைய அரசியலும்

* இந்தியாவிற்கு போர்த்துகீசியர் வருகையின் தாக்கம்

* டச்சுக்காரர்கள் வருகை, அம்பாய்னா படுகைாலை

* டேனியர்கள் வருகை - தரங்கம்பாடி கோட்டை

* பிரெஞ்சுக்காரர்கள் வருகை - பாண்டிச்சேரி

* ஆங்கிலேயர்கள் வருகை, 1757 பிளாசிப் போர்

* இராபர்ட் கிளைவ், ஆனந்தரங்கம் நாட்குறிப்பு

* முதலாம் கர்நாடகப் போர் - அடையாறுப் போர்

* இரண்டாம் கர்நாடகப் போர் - ஆம்பூர் போர்

* மூன்றாம் கர்நாடகப் போர் - வந்தவாசிப் போர்

மதிப்பிடுதல் :      

1. ஆங்கிலேயர் கட்டிய முதல் வணிகத்தளம் எங்குள்ளது?

2. இந்தியாவிற்கு வருகை தந்த ஐரோப்பிய நாடுகள் யாவை?

3. அம்பாய்னா படுகொலை எங்கு, எதற்காக நடைபெற்றது?

கற்றல் விளைவுகள் :      

1.17,18 ஆம் நூற்றாண்டில் இந்திய அரசியலை அறிந்து கொண்டனர்.

2. போர்த்துகீசியர், டச்சுகள், டேனியர்கள் பற்றி புரிந்து கொண்டனர்.

3. ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள் பற்றி உணர்ந்து கொண்டனர்.

4. மூன்று கர்நாடகப் போர்களைப் பற்றி தெரிந்து கொண்டனர்.

தொடர்பணி :       

1.இந்தியாவில் போர்த்துகீசியரின் வருகையினால் ஏற்பட்ட தாக்கத்தை விவரி.

2. வங்காளத்தின் உண்மையான ஆட்சியாளர்களாக ஆங்கிலேயர் எவ்வாறு மாறினர்?

3. இந்தியாவில் துய்ப்ளேவின் வாழ்க்கை மற்றும் சாதனைகள் பற்றி சுருங்கக் கூறுக.


அ. அறிவழகன், மாநிலத் தலைவர் 

தமிழ்நாடு முதுகலை வரலாறு ஆசிரியர் கழகம் - 9944573722   

Download Pdf Link 👇👇👇

11th History - Notes of Lesson - Week 12









No comments:

Post a Comment

Featured Post

சிந்தனைக் களம் - 3

வெற்றிக்குத் தேவை இலக்கு வெற்றி என்பது தேர்ந்தெடுத்த ஒரு இலக்கை அடைவதன் மூலம் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் மகிழ்ச்சியடையச் செய்யும் ஒ...

Popular Posts