04 March 2022

11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு பாடத்திட்டம்!!!

10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு முதல் திருப்புதல் தேர்வு பிப்ரவரி மாதம் நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு வரும் ஏப்ரல் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வு தேதி அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 



11th Genaral Subject Syllabus TM

11th Vocational Subjects Syllabus TM



03 March 2022

2021-22 ஆம் கல்வி ஆண்டிற்கான கலந்தாய்வு மீள நடத்துதல் குறித்து ஆணையரின் செயல்முறைகள் மற்றும் கால அட்டவணை வெளியீடு!

2021-22 ஆம் கல்வி ஆண்டில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகள் சார்பாக அரசாணை வெளியிடப்பட்டு அதில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதலின் அடிப்படையில் மாறுதல் கோரும் ஆசிரியர்கள் உரிய விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து கல்வி தகவல் மேலாண்மை இணையத்தில் (EMIS Online) பதிவேற்றம் செய்தனர். அதன் அடிப்படையில் மேற்படி ஆசிரியர்களுக்கு மாறுதல்கள், பதவி உயர்வுகள், பணிநிரவல் சார்பான கால அட்டவணை வெளியிடப்பட்டு (பதவி வாரியாக) கலந்தாய்வு நடைபெற்று வந்தது.


இந்நிலையில் பள்ளிக் கல்வி ஆணையரக கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரியும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 15.2.2022 முதல் நடக்கவிருந்த மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு நிருவாகக் காரணங்களுக்காக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.


தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் 04/03/2022 முதல் 16/03/2022 வரை ஆசிரியர்களுக்கு மாறுதல்கள் / பதவி உயர்வுகள் / பணிநிரவல் கலந்தாய்வுகள் நடைபெறவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 





02 March 2022

10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்களுக்கான தேதி அட்டவணை வெளியீடு.

2021-22 ஆம் கல்வி ஆண்டில் தமிழகத்தில் நடைபெறவுள்ள 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் தேதி அட்டவணையை மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் அவர்கள் இன்று காலை வெளியிட்டார். 

கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. ஆனால் கரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருவதால் மாணவர்களின் உயர்கல்வியை கருத்தில் கொண்டு இவ்வாண்டு தமிழகத்தில் திட்டமிட்டபடி பொதுத்தேர்வுகள்  நடைபெறும் என்று தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில் தற்போது தேர்வுக்கான தேதி வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. 






25 February 2022

மதிப்பீடு செய்யப்பட்ட முதல் திருப்புதல் தேர்வு விடைத்தாட்களை சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு 14/03/2022 க்குள் வழங்க அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!

மதிப்பீடு செய்யப்பட்ட முதல் திருப்புதல் தேர்வு விடைத்தாட்களை சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு 14/03/2022 க்குள் வழங்க அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு!



23 February 2022

மாறுதல் ஆணை பெற்ற ஆசிரியர்கள் 28/02/2022 பிற்பகல் விடுவிக்கப்பட்டு 01/03/2022 முற்பகல் பணியில் சேர்ந்திட ஆணையர் அறிவுறுத்தல்.

மாறுதல் ஆணை பெற்றவர்கள் 28.02.2022 பிற்பகல் விடுவிக்கப்பட்டு 01.03.2022 முற்பகல் பணியில் சேர்வதற்கான ஆணையரின் செயல்முறைகள். 

IFHRMS இல் ஊதியம் பெற்று வழங்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை தவிர்த்திடும் பொருட்டு கலந்தாய்வில் பங்கேற்று பதவி உயர்வு / பணி மாறுதல் / பணிநிரவல் ஆணைகளை பெற்ற ஆசிரியர்களை 28/02/2022 அன்று பிற்பகல் விடுவித்து 01/03/2022 அன்று பணியில் சேரத்தக்க வகையில் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 






16 February 2022

புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் NHIS - 2021 இல் கொரோனாவுக்கான சிகிக்சை சேர்ப்பு - அரசாணை வெளியீடு.

அரசாணை எண் : 39 நாள் : 14/02/2022 

New Health Insurance Scheme for Employees, 2021 Inclusion of Corona treatment (COVID-19) under specified illness list in respect of employees under New Health Insurance Scheme 2021 and Pensioners. (including spouse)/Family Pensioners under New Health Insurance Scheme 2018 Implementation of the Announcement made by the Hon'ble Chief Minister Payment of Rs.1.00 crore each under New Health - Insurance Scheme 2021 for employees and New Health Insurance Scheme 2018 for Pensioners Family Pensioners to United India Insurance Company Limited - Orders - Issued. 

ORDER : The Hon'ble Chief Minister had made the following announcement on the floor of the Legislative Assembly under Rule 110 of LAS Rules on 07-09-2021 : 

"மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர் சங்கங்களால் கொரோனாவுக்கான சிகிச்சைகளை உயர் சிகிச்சைப் பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைகளைப் பொறுத்தவரையில், அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள சிகிச்சை தொகையான 10 இலட்சம் ரூபாயை விடவும் கூடுதலாக , கொரோனா சிகிச்சைக்கான செலவுத் தொகை அரசு நிதி உதவியின் கீழ் அனுமதிக்கப்படும்." 


Download Link


அமைச்சுப் பணியாளர்களுக்கு முதுகலை ஆசிரியராகப் பதவிஉயர்வு வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு குறித்த பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்.

அமைச்சுப் பணியாளர்களுக்கு 2% ஒதுக்கீட்டில் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கும் வரை முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க இயலாது என புள்ளி விவரங்களுடன் பள்ளிக் கல்வி ஆணையர் திட்டவட்டமாக அறிவித்து உள்ளார். 

அமைச்சுப் பணியாளர்களுக்கு முன்னுரிமை நியமனம் செய்து பதவி உயர்வு வழங்கும் வரை முதுகலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையினை ஏற்க இயலாது. மேலும் 2011-12ம் கல்வியாண்டு முதல் 2020-21 கல்வியாண்டு வரையில் 50% பதவி உயர்வுக்கான காலிப்பணியிடத்தில் அமைச்சுப் பணியாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 2% காலிப்பணியிடங்களான மொத்தம் 235 பணியிடங்களில் 196 பணியாளர்களுக்கு பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியர்களாகப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தற்போது மீதமுள்ள 39 பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்பிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடமிருந்தும் தகுதி வாய்ந்தவர்களின் பெயர் பட்டியல் கோரப்பட்டு அப்பணியிடங்களை நிரப்பிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற விவரம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Download Link

15 February 2022

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு வழங்கப்படும் ஊதியப் பட்டியல்கள் வெளியீடு.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 க்கான தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் வாக்கு எண்ணும் அலுவலர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் ஊதியம் குறித்த மாநிலத் தேர்தல் ஆணையத்தின் கடிதம் மற்றும் ஊதியப் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.  







14 February 2022

15.02.2022 முதல் நடைபெறவிருந்த பள்ளிக் கல்வித் துறை கலந்தாய்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு

நாளை (15.02.2022) முதல் நடைபெறவிருந்த பள்ளிக் கல்வித் துறை கலந்தாய்வுகள் அனைத்தும் ஒத்திவைப்பு - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!



11 February 2022

பள்ளி இறுதித் தேர்வில் வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தங்களை மேற்கொள்ள முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு

மாணவ / மாணவியர்களின் மதிப்பெண் சான்றிதழ்களில் மனுதாரரின் பெயர் / தந்தை பெயர் /தாயார் பெயர் / முகப்பெழுத்து / பிறந்ததேதி திருத்தம் செய்வது சார்பான கருத்துருக்களை சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களே ஆய்வு செய்து அவர்கள் வழியாகவே அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு அனுப்பவும், அரசுத் தேர்வுத்துறை மூலம் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட பின்பு சார்ந்த மாணவ / மாணவியர்களின் இதர கல்விச் சான்றுகளில் பள்ளியில் திருத்தங்கள் மேற்கொள்ள முதன்மைக் கல்வி அலுவலர்களே ஆணை வழங்குவது குறித்தும் அனுமதி அளித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. 



10 February 2022

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு வெளியாகும் நாளன்று ஓராண்டு பணிநிறைவு செய்திருக்க வேண்டுமென புதிய அரசாணை வெளியீடு.

அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு குறித்து அறிவிப்பு வெளியாகும் நாளன்று தற்போதைய பணியிடத்தில் ஓராண்டு பணிநிறைவு செய்திருக்க வேண்டுமென கலந்தாய்வு கொள்கைக்கான அரசாணையில் திருத்தம் செய்து புதிய அரசாணை வெளியீடு. 


அரசாணை எண் : 15, நாள் : 10/02/2022




11.2.2022 மற்றும் 12.2.2022 ஆகிய இரு நாட்களில் நடைபெற இருந்த மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு.

11.2.2022 மற்றும் 12.2.2022 ஆகிய இரு நாட்களில் நடைபெற இருந்த மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு. மாறுதல் கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். 


சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இடைக்கால தீர்ப்பாணைக்கு இணங்க, மாறுதல் கலந்தாய்விற்கான முன்னுரிமைப் பட்டியல் திருத்தம் செய்ய வேண்டியுள்ள நிலையில் 11.2.2022 மற்றும் 12.2.2022 ஆகிய இரு நாட்களில் அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர் /கணினி ஆசிரியர் நிலை-1 /உடற்கல்வி இயக்குநர் நிலை-1 /தொழிற்கல்வி ஆசிரியர்கள் (Agriculture) வருவாய் மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டம்விட்டு மாவட்டம் நடைபெறவுள்ள மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுகிறது. மேலும் இப்பதவிக்களுக்கான மாறுதல் கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்


மேலும் அதனையடுத்து 14.2.2022 முதல் திட்டமிட்ட கால அட்டவணைப்படி ஏனைய கலந்தாய்வுகள் நடைபெறும் எனவும், இது சார்ந்த தகவலை தங்கள் ஆளுகைக்குட்பட்ட மேற்படி ஆசிரியர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கலாகிறது என பள்ளிக் கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள செயல்முறைகளில் அறிவிக்கப்பட்டு உள்ளது. 




02 February 2022

உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாவட்டத்திற்குள் நடைபெற்ற மாறுதல் கலந்தாய்விற்குப் பின் ஏற்பட்டுள்ள காலிப் பணியிட விவரங்கள் வெளியீடு

உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான  மாவட்டத்திற்குள் நடைபெற்ற மாறுதல் கலந்தாய்விற்குப் பின் ஏற்பட்டுள்ள காலிப் பணியிட விவரங்கள் வெளியீடு. 


இன்று 02/02/2022 மாவட்டத்திற்குள் நடைபெற்று முடிந்த உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்விற்குப் பின் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்கள் விவரம் வெளியீடு. 

High School HM Vacants


30.09.2024 வரை ஓய்வுபெற உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

30.09.2024 வரை ஓய்வுபெற உள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!



EMIS SCHOOL புதிய செயலியை எவ்வாறு பயன்படுத்துவது? - தெளிவான விளக்கம்!

EMIS இணையதளத்தில் ஆசிரியர் மாணவர் Local body ஆகியோரின் வருகையை குறித்தல் TN EMIS SCHOOL APP புதியதாக உருவாக்கப்பட்டுள்ள செயலியை எவ்வாறு கையாளுதல் என்பதற்கான விளக்கம்
பள்ளியின் வருகையை பதிவு செய்வதற்கான வழிமுறைகள்

Today Status என்பதை Click செய்து பள்ளியின் வேலை நாளை உறுதி செய்தல் வேண்டும் 

இதில் உள்நுழைந்து Fully Working என்பதை Click செயதால் அனைத்து மாணவர்களுக்கும் வருகையை பதிவு செய்ய இயலும் இந்த Option ஐ தேர்வு செய்தால் அனைத்து வகுப்புகளுக்கும் கடடாயம் விடுபடாமல் வருகையை பதிவு செய்தல் வேண்டும்

Fully not working என்பதை தேர்வு செயதால் உரிய காரணத்தை வழங்க வேண்டும் இதில் ஆசிரியர் வருகையை மட்டும் வருகையை பதிவு செய்ய இயலும் மாணவர்களுக்கு பதிவு செய்ய இயலாது

Partially Working என்பதை தேர்வு செய்தால் அன்றைய தினத்தில் நடைபெற இருக்கும் வகுப்புகளை மட்டும் தேர்வு செய்து அவ்வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வருகையை பதிவு செய்ய இயலும் எனவே பள்ளி தலைமையாசிரியர்கள் அன்றைய தினத்தில் செயல்படும் வகுப்புகளை கவனமாக தேர்வு செய்தல் வேண்டும் மேலும் அதற்கான காரணத்தையும் குறிப்பிட்டு Save செய்தல் வேண்டும்

மேலே குறிப்பிட்ட Today Status பதிவு செய்தால் மட்டுமே மாணவர்கள் வருகை ஆசிரியர் வருகை மற்றும் Local body வருகையை பதிவு செய்ய இயலும்

Staff Attendance வருகையை பதிவு செய்ய Click செய்யும் போது Automatic Sync setting open ஆகும் அதில் School Information Todays Status Staff List Students List அனைத்து Sync குறியுடன் இருக்கும் இந்த நான்கு விவரங்கள் அனைத்தையும் ஒரு முறை Click செய்து Sync செய்து கொள்ள வேண்டும் 

School Information Sync செய்த பின்பு Today Status Sync செய்யும் போது Information Box Display வந்தால் மீண்டும் Home page உள்ள Today Status ல் Save செய்த பின்பு தான் பள்ளி விவரங்கள் Sync ஆகும் 

அடுத்து Staff List Sync செய்தால் அனைத்து ஆசிரியர்கள் பெயர் Sync ஆகும். 


பின்பு Students List Sync செய்தல் வேண்டும் பள்ளி தலைமையாசிரியர் Todays Status ல் Partially Working என பதிவு செய்திருந்தால் எந்தெந்த வகுப்புகளுக்கு இன்று வேலை நாள் என்பதை குறிப்பிட்டுள்ளாரோ அந்த வகுப்புகளை Select செய்து Sync செய்தல் வேண்டும்

உதாரணமாக ஒரு உயர் நிலைப் பள்ளியானது அன்றைய தினத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளி வேலை நாள் என குறிப்பிட்டு இருந்தால் 10 ஆம் வகுப்பு மற்றும் அதன் Section யும் select செய்து Sync கொடுத்தல் வேண்டும் தற்போது மாணவர்கள் விவரமும் Sync செய்யப்பட்டிருக்கும்

Teachers Attendance School Login

ஆசிரியர்கள் வருகையை TN EMIS School App ல் School Login ஐ மட்டும் பயன்படுத்தி பதிவு செய்தல் வேண்டும்

Teacher List Strudent List Stored Locally என வரும் Sync Setting ல் அனைத்து முடித்த பின்பு Home page ல் Staff Attendance Click செய்து Open செய்தால் Sync ஆன அணைத்து ஆசிரியர்கள் பெயர்கள் உள்ள பட்டியல் Display ஆகும் இதில் ஆசிரியர் வருகை புரிந்தால் P Present எனவும் இன்றைய நாளில் அவருக்கு Work Allotment இல்லை எனில் ஒரு முறை Click செய்து N/A எனவும் மற்றொரு முறை Click செய்து OD Training Dt Deputation A Absent ( CL ML Half day CL EL RH LOP UEL Parttime Maternity Leave Study Leave Special Leave Un Authorise N/A No Duty Teaching Staff Non Teaching Basic Staff ( Lab Asst Cleark ) இவ்வாறாக வருகையை பள்ளி Login ல் பதிவு செய்தல் வேண்டும்

Students Attendance Teacher Individual Login

மாணவர்கள் வருகையை TN EMIS School App ல் Teacher Login ஐ மட்டும் பயன்படுத்தி பதிவு செய்தல் வேண்டும் 

வருகை புரிந்த மாணவர்கள் வருகையை TN EMIS School App ல் ஆசிரியர்கள் தங்களது EMIS ID Password கொடுத்து Open செய்யவும் Students Attendance Class Teacher Login ல் Open செய்து Student List Sync செய்தல் வேண்டும் பின்பு Students Attendance Click செய்து வருகை புரிந்த மாணவர்களின் வருகையை பதிவு செய்தல் வேண்டும்

Local body Attendance School Login

பள்ளிக்கு நகராட்சி மற்றும் பஞ்சாயத்து மூலம் வகுப்பறை மற்றும் கழிவறை சுத்தம் செய்வதற்காக வருகை புரியும் Sweepers மற்றும் Scvengers ன் எண்ணிக்கை மற்றும் பணிபுரிந்த நேரத்தையும் குறிப்பிட்டு Save செய்தல் வேண்டும். 


குறிப்பு

Save செய்த விவரங்கள் ஆரஞ்ச் கலர் காண்பித்தால் Network கிடைக்கும் நேரங்களில் Open செய்து பச்சை கலர் மாறும் வண்ணம் Save செய்தல் வேண்டும். 

மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்ன ?

2022-23ம் நிதியாண்டிற்கான ஒன்றிய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் கடந்த 2019ம் ஆண்டு முதல் பட்ஜெட் தாக்கல் செய்து வருகின்றார். அவர் தாக்கல் செய்யும் 4வது பட்ஜெட் இது. கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் காகிதமில்லா டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மக்களவையில் ஒன்றிய பட்ஜெட்டை தாக்கல் செய்த பின், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது,கொரோனா காலத்திலும் நாட்டின் பொருளாதாரம் முன்னேறி வருகிறது.தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தியதால் கொரோனா பாதிப்பு குறைவாகவே உள்ளது.


* ஏழைகள், நடுத்தர மக்களின் முன்னேற்றத்திற்காக ஒன்றிய அரசு செயலாற்றி வருகிறது.உலகில் உள்ள பெரிய நாடுகளில் இந்தியாவின் பொருளாதாரம்தான் அதிக வேகத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது.


*நடப்பாண்டில் பொருளாதார வளர்ச்சி 9.2% ஆகா இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. நடுத்தர வகுப்பினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் நிதித்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.


*சிறு, குறு, நடுத்தர தொழிற்துறையினரை மேம்படுத்தும் வகையில் புதிய வரி விதிப்புகள் இருக்காது. அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.


*ஏழைகளுக்கு அனைத்து வாய்ப்புகளையும் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் 60 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.  


*புதிய இந்தியாவை கட்டமைப்பதற்கான பட்ஜெட்டாக நடப்பாண்டின் பட்ஜெட் இருக்கும். ஒருங்கிணைந்த வளர்ச்சியை கருத்தில் கொண்டு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


*எல்ஐசி நிறுவனத்தின் பொது பங்குகள் விரைவில் வெளியிடப்படும்.உற்பத்திக்கான ஊக்கத்தொகைத் திட்டம் நல்ல பலனை அளித்து வருகிறது.


*ஏழை மக்களுக்கு எரிவாயு வசதி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 


*One station, One product திட்டம் உள்ளூர் வணிகத்திற்கு உதவியாக இருக்கும், பொருட்கள் விநியோக பாதையை மேம்படுத்தும்


*நாட்டின் தேசிய நெடுஞ்சாலை வரும் நிதியாண்டில் 25,000 கி.மீ. தொலைவுக்கு புதிதாக அமைக்கப்படவுள்ளது. போக்குவரத்து உட்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.


*400 புதிய வந்தே பாரத் ரயில்கள் அடுத்த 3 ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும்; 100 சரக்கு முனையங்கள் அமைக்கப்படும்


*ரயில் நிலையங்களையும் நகர்ப்புற மெட்ரோக்களையும் இணைக்க பெரிய அளவில் திட்டம் வகுக்கப்படும்.


*நாடு முழுவதும் ரசாயன உரங்களின் பங்களிப்பு இல்லா இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும். விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை


*உள்நாட்டில் எண்ணெய் வித்துகள் உற்பத்தி அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் 1.63 கோடி விவசாயிகளிடம் இருந்து தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. 


*இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்படும் பொருட்களை மதிப்புக்கூட்டி விற்க நடவடிக்கை எடுக்கப்படும். புதிய ஊரக தொழில் மற்றும் வேளாண் நிறுவனங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.


*வேளாண் பொருட்களுக்கு ரூ.2.73 லட்சம் கோடி குறைந்தபட்ச ஆதரவு விலையாக வழங்கப்பட்டுள்ளது                                    


*கிருஷ்ணா நதி - பெண்ணாறு - காவிரி நதி நீர் இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். காவிரி-கிருஷ்ணா நதிநீர் இணைப்புத் திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது.


*விவசாயிகளிடம் இருந்து விளைபொருட்களை கொள்முதல் செய்யும் திறன் அதிகரிப்பு


*ஆத்மநிர்பர் பாரத் என்ற தற்சார்பு இந்தியா திட்டம் பெரியளவில் வளர்ச்சியை கண்டுள்ளது.


*அவசர கால கடன் உதவி திட்டங்கள் மூலம் 1.30 கோடி சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பலன் பெற்றுள்ளன


*வேளாண் ஏற்றுமதிக்கு ரயில்வே துறையை திறம்பட செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். 

Featured Post

Income Tax Form FY 2024 - 25 (Version 2.0) Date 20/12/2024 Old Regime and New Regime - By Arivazhagan

Income Tax Form Latest Version 2.0  (Old Regime and New Regime)  Financial Year 2024-25 (AY 2025-26)  Auto calculation is enabled in this So...

Popular Posts