அமைச்சுப் பணியாளர்களுக்கு 2% ஒதுக்கீட்டில் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கும் வரை முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க இயலாது என புள்ளி விவரங்களுடன் பள்ளிக் கல்வி ஆணையர் திட்டவட்டமாக அறிவித்து உள்ளார்.
அமைச்சுப் பணியாளர்களுக்கு முன்னுரிமை நியமனம் செய்து பதவி உயர்வு வழங்கும் வரை முதுகலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையினை ஏற்க இயலாது. மேலும் 2011-12ம் கல்வியாண்டு முதல் 2020-21 கல்வியாண்டு வரையில் 50% பதவி உயர்வுக்கான காலிப்பணியிடத்தில் அமைச்சுப் பணியாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 2% காலிப்பணியிடங்களான மொத்தம் 235 பணியிடங்களில் 196 பணியாளர்களுக்கு பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியர்களாகப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தற்போது மீதமுள்ள 39 பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்பிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடமிருந்தும் தகுதி வாய்ந்தவர்களின் பெயர் பட்டியல் கோரப்பட்டு அப்பணியிடங்களை நிரப்பிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற விவரம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment