03 July 2024

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பித்தல்

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்தல் - DSE செயல்முறைகள்

 

பார்வையில் காணும் புதுதில்லி மனிதவள மேம்பாட்டுத்துறை இயக்குநரின் கடிதத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதிற்கு விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் அவர்தம் விவரங்களை நேரடியாக http://nationalawardstoteachers.education.gov.n என்ற இணையதளம் மூலம் 27.06.2024 முதல் 15.07.2024 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும், கீழ்கண்டவாறு மாவட்டத் தேர்வுக்குழு அமைக்கப்பட்டு ஆசிரியர்களைத் தேர்வு செய்து மாநிலத் தேர்வுக் குழுவிற்கு தேர்வு பட்டியலை 25.07.2024 தேதிக்குள் இணையதளம் வாயிலாக அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


மாவட்டத் தேர்வுக் குழுவில் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைவராகவும், மாநிலப் பிரதிநிதியாக ஒருவரும். மாவட்ட ஆட்சியரின் பிரிதிநிதியாக சிறந்த கல்வியாளர் ஒருவரையும் உட்படுத்தி மாவட்ட தேர்வுக் குழுவினை அமைத்து, மாவட்ட நிலையில் விண்ணப்பித்த ஆசிரியர்களின் விவரங்களை பரிசீலித்து, ஒரு மாவட்டத்திற்கு மூன்று ஆசிரியர்கள் வீதம் தேர்வு செய்து. மாநிலத் தேர்வுத் குழுவிற்குப் பரிந்துரைக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மாவட்டத் தேர்வுக் குழுவில் சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் மாநிலப் பிரதிநிதியாக செயல்படுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது. 






No comments:

Post a Comment

Featured Post

Income Tax Form FY 2025-2026 (AY 2026-2027) By Arivazhagan - Version 2.0 Dated 10/12/2025

  Income Tax Form Version 2.0 (New Regime) Last Updated 10/12/2025