Home

07 November 2023

12 ஆம் வகுப்பு வரலாறு - பாடக்குறிப்பேடு - வாரம் 4

12 ஆம் வகுப்பு - வரலாறு - அலகு 4

தேதி  :       

வகுப்பு  12 ஆம் வகுப்பு      

பாடம்  : வரலாறு     

தலைப்பு  : 4. காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல். 

கற்பித்தல் துணைக் கருவிகள் :       

திறன்பேசி, கணிப்பொறி, QR Code ஸ்கேனர், இந்திய வரைபடம், உலக உருண்டை.  

கற்பித்தல் நோக்கங்கள் :       

1. காந்தியடிகளின் ஆரம்பகால போராட்டங்களை அறியச் செய்தல்.

2. ஒத்துழையாமை இயக்கத்தின் பங்களிப்பினை புரியச் செய்தல்.

3. சட்டமறுப்பு இயக்கம், காந்தி - இர்வின் ஒப்பந்தம் உணரச் செய்தல்.

4. வட்டமேசை மாநாடுகள், அம்பேத்கரின் அரசியலை விளங்கச் செய்தல்.

ஆயத்தம் செய்தல் :      

1. எந்த ஆண்டு காந்தியடிகள் இந்தியா திரும்பினார் ?

2. மிதவாத தேசியவாதிகள் யார் ?

3. தீவிரத்தன்மை கொண்ட தேசியவாதிகள் யார் ?

பாடக் குறிப்புகள் :      

காந்தியடிகள் 1869 இல் கடற்கரையோர நகரான போர்பந்தரில் பிறந்தார். 1915 இல் ஆண்டு அவர் தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார். கோபால கிருஷ்ண கோகலேவை தனது அரசியல் குருவாக அடையாளம் கண்டார். சத்யம் மற்றும் அஹிம்சை வழியில் சத்யாகிரகப் போராட்டங்களை நடத்தினார்.

1. காந்தியடிகளின் சத்தியாகிரக சோதனைகள்

* சம்பரான் இயக்கம், கேதா சத்தியாகிரகம்.

* அகமதாபாதில் காந்தியடிகள் உண்ணாவிரதம்.

* இந்தியப் பணியாளர்கள் சங்கம்.

2. மாண்டேகு செம்ஸ்ஃபோர்டு சீரதிருத்தங்கள்

3. பிராமணரல்லாத இயக்கம் - ஜோதிபா பூலே, அம்பேத்கர், பெரியார்.

4. ரௌலட் சட்டம், ஜாலியன் வாலாபாக் படுகொலை.

* ஒத்துழையாமை இயக்கம், சௌரி சௌரா சம்பவம்

5. சுயராஜ்யா கட்சியும் அதன் செயல்பாடுகளும்.

* இடதுசாரி இயக்கமும் புரட்சியாளர்களும்.

6. சைமன் குழு வருகை, நேரு அறிக்கை.

* லாகூர் காங்கிரஸ் மாநாடு - பூரண சுயராஜ்யம்.

7. சட்டமறுப்பு இயக்கம் - தண்டி யாத்திரை.

* வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம்.

* மூன்று வட்டமேசை மாநாடுகள்.

8. அம்பேத்கரின் தனித்தொகுதி போராட்டம்.

* வகுப்புவாரி தொகுதி ஒதுக்கீடு, பூனா ஒப்பந்தம்.

* அம்பேத்கர் தொடங்கிய அரசியல் கட்சிகள்.

மதிப்பிடுதல் :      

1. காந்தியடிகளின் அரசியல் குரு யார் ?

2. ரௌலட் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது ?

3. தண்டி யாத்திரை எங்கிருந்து தொடங்கப்பட்டது ?

கற்றல் விளைவுகள் :      

1. காந்தியடிகளின் ஆரம்பகால போராட்டங்களை அறிந்து கொண்டனர்.

2. ஒத்துழையாமை இயக்கத்தின் பங்களிப்பினை புரிந்து கொண்டனர்.

3. சட்டமறுப்பு இயக்கம், காந்தி - இர்வின் ஒப்பந்தம் உணர்ந்து கொண்டனர்.

4. வட்டமேசை மாநாடுகள், அம்பேத்கரின் அரசியலை தெரிந்து கொண்டனர்.

தொடர்பணி :       

1. ஒத்துழையாமை இயக்கத்தின் செயல்பாடுகளை விவாதிக்க.

2. இந்திய விடுதலை இயக்கத்தில் காந்தியடிகளின் பங்கு.

3. பூனா ஒப்பந்தத்தின் முக்கியத்துவங்களை விவாதிக்க.


அ. அறிவழகன், மாநிலத் தலைவர் 

TNPGHTA அமைப்பு - 9944573722   

Download Pdf Link 👇👇👇

12th History - Notes of Lesson - Week 4








No comments:

Post a Comment

Featured Post

Income Tax Form FY 2024 - 25 (Version 2.0) Date 20/12/2024 Old Regime and New Regime - By Arivazhagan

Income Tax Form Latest Version 2.0  (Old Regime and New Regime)  Financial Year 2024-25 (AY 2025-26)  Auto calculation is enabled in this So...

Popular Posts