Home

07 November 2023

12 ஆம் வகுப்பு வரலாறு - பாடக்குறிப்பேடு - வாரம் 15

12 ஆம் வகுப்பு - வரலாறு - அலகு 15

தேதி  :       

வகுப்பு  12 ஆம் வகுப்பு      

பாடம்  : வரலாறு     

தலைப்பு  : 15. இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம். 

கற்பித்தல் துணைக் கருவிகள் :       

திறன்பேசி, கணிப்பொறி, QR Code ஸ்கேனர், இந்திய வரைபடம், உலக உருண்டை.  

கற்பித்தல் நோக்கங்கள் :       

1. இரு துருவ உலகம், பனிப்போர் காலம் பற்றி அறியச் செய்தல்.

2. மூன்றாம் உலக நாடுகள், அணிசேரா இயக்கம் புரியச் செய்தல்.

3. ஐ.நா.சபையும் உலகளாவிய பிரச்சனைகளும் உணரச் செய்தல்.

4. ஐரோப்பிய சமூக அமைப்பின் ஒருங்கிணைப்பு விளங்கச் செய்தல்.

ஆயத்தம் செய்தல் :      

1. இரண்டாம் உலகப் போரில் வென்ற நாடுகள் யாவை?

2. இருதுருவ நாடுகள் என்று அழைக்கப்படுபவை எவை?

3. பன்னாட்டு சங்கத்திற்கு மாற்றாக உருவான அமைப்பு எது?

பாடக் குறிப்புகள் :      

இரண்டாவது உலகப்போரின் இறுதியில் அமெ ரிக்காவும் சோவியத் ரஷ்யாவும் வல்லரசுகளாக உருவாயின. கருத்தியல் ரீதியான செல்வாக்கை பெறுவதற்கு இரு நாடுகளுமே முயன்றதால் இவ்விரு நாடுகளிடையே பரஸ்பரம் சந்தேகமும் நம்பிக்கையின்மையும் நிலவின. இரு நாடுகளும் உலக நாடுகளை தன்வசப்படுத்த முயன்றன.

* ஐரோப்பாவில் போருக்குப் பிந்தைய நிலைமைகள்

* இரு துருவ உலகம் உருவாதல் - அமெரிக்கா, சோவியத் ரஷ்யா

* பெர்லின் முற்றுகையும் கிழக்கு ஜெர்மனி மற்றும் மேற்கு ஜெர்மனி உருவாதலும்

* கெடுபிடிப்போர் (பனிப்போர்) - பனிப்போர் செயல்திட்டங்கள்

* பொருளாதார உதவி - ட்ரூமன் திட்டம், மார்ஷல் திட்டம்

* இராணுவ ஒப்பந்தங்கள் - நேட்டோ, சிட்டோ

* வார்சா உடன்படிக்கை அமைப்பு, சென்டோ

* பரப்புரை செய்தல், உளவறிதல், போரின் விளிம்புவரை செல்வது

* மறைமுகப் போர்கள் - கொரியா போர், வியட்நாம் போர்

* மூன்றாம் உலக நாடுகளும் அணிசேரா இயக்கமும்

* உலகளாவிய பிரச்சனைகளைத் தீர்ப்பதில் ஐ.நா. சபையின் பங்கு

* பாலஸ்தீன பிரச்சனை, தேசிய சீனாவை அங்கீகரித்தல்

* கொரியப் போர், சூயஸ் கால்வாய் பிரச்சனை - 1956

* ஹங்கேரி சிக்கல் - 1956, அரபு - இஸ்ரேல் போர் பின்னணி

* ஐரோப்பிய சமூக அமைப்பின் ஒருங்கிணைப்பும் விரிவாக்கமும்

* ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி, ஐரோப்பிய நிலக்கரி, எஃகு சமுதாயம்

* ஐரோப்பிய பொருளாதார சமுதாயம், ஒற்றை ஐரோப்பியச் சட்டம்

* பனிப்போரின் முடிவு, சோவியத் யுனியன் பிளவு, போரிஸ் யெல்ட்சின்

மதிப்பிடுதல் :      

1. நேட்டோ உருவாக்கப்பட்டதன் பின்னணி யாது?

2. சூயஸ் கால்வாய் சிக்கல் குறித்து கூறுக.

3. பனிப்போர் கால மறைமுக போர்களை கூறுக.

கற்றல் விளைவுகள் :      

1. இரு துருவ உலகம், பனிப்போர் காலம் பற்றி அறிந்து கொண்டனர்.

2. மூன்றாம் உலக நாடுகள், அணிசேரா இயக்கம் புரிந்து கொண்டனர்.

3. ஐ.நா.சபையும் உலகளாவிய பிரச்சனைகளும் உணர்ந்து கொண்டனர்.

4. ஐரோப்பிய சமூக அமைப்பின் ஒருங்கிணைப்பு தெரிந்து கொண்டனர்.

தொடர்பணி :       

1. அணிசேரா இயக்கத்தின் இலக்குகளையும் நோக்கங்களையும் கோடிட்டுக் காட்டவும்.

2. அரபு - இஸ்ரேலிய முரண்பாட்டின் தோற்றம், காரணங்களை விவாதிக்கவும்.

3. நிரந்தர உறுப்பினர்கள் தொடர்புள்ள பிரச்சனைகளில் ஐ.நா. சபை மௌனமாக உள்ளது.


அ. அறிவழகன், மாநிலத் தலைவர் 

TNPGHTA அமைப்பு - 9944573722   

Download Pdf Link 👇👇👇

12th History - Notes of Lesson - Week 15








No comments:

Post a Comment

Featured Post

சிந்தனைக் களம் - 3

வெற்றிக்குத் தேவை இலக்கு வெற்றி என்பது தேர்ந்தெடுத்த ஒரு இலக்கை அடைவதன் மூலம் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் மகிழ்ச்சியடையச் செய்யும் ஒ...

Popular Posts