Home

07 November 2023

12 ஆம் வகுப்பு வரலாறு - பாடக்குறிப்பேடு - வாரம் 10

12 ஆம் வகுப்பு - வரலாறு - அலகு 10

தேதி  :       

வகுப்பு  12 ஆம் வகுப்பு      

பாடம்  : வரலாறு     

தலைப்பு  : 10. நவீன உலகம் : பகுத்தறிவின் காலம். 

கற்பித்தல் துணைக் கருவிகள் :       

திறன்பேசி, கணிப்பொறி, QR Code ஸ்கேனர், இந்திய வரைபடம், உலக உருண்டை.  

கற்பித்தல் நோக்கங்கள் :       

1. இத்தாலிய மறுமலர்ச்சியின் தோற்றம், பரவலை அறியச் செய்தல்.

2. புதிய கடல்வழி கண்டுபிடிப்பு, வர்த்தகப் புரட்சியை புரியச் செய்தல்.

3. சமய மற்றும் எதிர் சமய சீர்திருத்த இயக்கத்தை உணரச் செய்தல்.

4. புதிய தேசிய அரசுகளின் தோற்றத்தை பற்றி விளங்கச் செய்தல்.

ஆயத்தம் செய்தல் :      

1. மறுமலர்ச்சி அல்லது மறுபிறப்பு என்றால் என்ன?

2. இந்தியாவிற்கு வருகை தந்த ஐரோப்பியர்கள் யார்?

3. சமய சீர்திருத்த இயக்கங்கள் ஏன் தோன்றுகிறது?

பாடக் குறிப்புகள் :      

பதினைந்து மற்றும் பதினாறாம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த மூன்று பெரும் நிகழ்வுகளாக மறுமலர்ச்சி, புவியியல் கண்டுபிடிப்புகள், சீர்திருத்த இயக்கங்களின் தோற்றம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவைகள் இடைக்காலம் தொடங்கி நவீனகாலம் வரையிலான மாற்றங்களைக் குறிக்கும் விதமாக அமைந்தன.

1. இத்தாலியில் ஏற்பட்ட மறுமலர்ச்சியும் ஐரோப்பியாவில் அதன் பரவலும் :

* மறுமலர்ச்சியின் தாயகமாக இத்தாலி - மெடிசி குடும்பம்

* இலக்கியம் - பெட்ராக், பொக்காஷியோ, மாக்கியவல்லி

* கலையில் மறுமலர்ச்சி - டாவின்சி, மைக்கேல் ஆஞ்சிலோ, ரபேல்

* அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் - கோபர்நிகஸ், கலிலியோ, ஹார்வி

* இங்கிலாந்தில் மறுமலர்ச்சி - முதலாம் எலிசபெத், ஷேக்ஸ்பியர், பேக்கன்

2. கிழக்குப் பகுதிகளுக்கான புதிய கடல்வழித் தடங்களை கண்டுபிடித்தல் ;

* திசைகாட்டும் கருவி, போப்பின் ஆணை, ஸ்பானிய ஆர்முடா

* மாலுமி ஹென்றி, கொலம்பஸ், வாஸ்கோடகாமா, பெட்ரோ காப்ரல்

* மெகல்லன், ஜான் கேபட், ஹென்றி ஹட்சன், ஜியோவனி

* வர்த்தகப் புரட்சிக்கு காரணங்கள், விளைவுகள்

3. பிராட்டஸ்டன்ட் சீர்திருத்தமும் கத்தோலிக்க எதிர் சீர்திருத்தமும்

* சமய சீர்திருத்தம் காரணங்கள் - பாவ மன்னிப்பு சீட்டு

* பிராட்டஸ்டன்ட் சீர்திருத்தம் - ஜான் வைக்ளிப், ஜான் ஹஸ்,

* மார்டின் லூதர், ஜான் கால்வின், உல்ரிச் ஸ்விங்ளி

* ஆங்கிலிகன் திருச்சபை - பியூரிட்டன் இயக்கம்

* கத்தோலிக்க எதிர் சீர்திருத்தம் - இயேசு சங்கம், லயோலா

* டிரெண்ட் கவுன்சில், சமய விசாரணை நீதிமன்றம்

* இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ் தேசிய அரசுகள் தோற்றம்

மதிப்பிடுதல் :      

1. சமயத்தை இரண்டாம் நிலைக்கு தள்ளியது எது?

2. நவீன செயல்முறை அறிவியலின் தந்தை யார்?

3. போப்பின் ஆணை எந்த ஆண்டு வெளியானது?

கற்றல் விளைவுகள் :      

1. இத்தாலிய மறுமலர்ச்சியின் தோற்றம், பரவலை அறிந்து கொண்டனர்.

2. புதிய கடல்வழி கண்டுபிடிப்பு, வர்த்தகப் புரட்சியை புரிந்து கொண்டனர்.

3. சமய மற்றும் எதிர் சமய சீர்திருத்த இயக்கத்தை உணர்ந்து கொண்டனர்.

4. புதிய தேசிய அரசுகளின் தோற்றத்தை பற்றி தெரிந்து கொண்டனர்.

தொடர்பணி :       

1. இத்தாலிய மறுமலர்ச்சிக்கு பிளாரன்ஸ் நகர மக்கள் ஆற்றிய பங்களிப்பு யாது?

2. இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் தேசிய அரசுகளாக உருவெடுத்ததை விவரி.

3. மார்ட்டின் லூதர் பிராட்டஸ்டண்ட் இயக்கத்தை எவ்வாறு ஒருங்கிணைத்தார்?


அ. அறிவழகன், மாநிலத் தலைவர் 

TNPGHTA அமைப்பு - 9944573722   

Download Pdf Link 👇👇👇

12th History - Notes of Lesson - Week 10








No comments:

Post a Comment

Featured Post

சிந்தனைக் களம் - 3

வெற்றிக்குத் தேவை இலக்கு வெற்றி என்பது தேர்ந்தெடுத்த ஒரு இலக்கை அடைவதன் மூலம் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் மகிழ்ச்சியடையச் செய்யும் ஒ...

Popular Posts