06 November 2023

11 ஆம் வகுப்பு வரலாறு - பாடக்குறிப்பேடு - வாரம் 15

11 ஆம் வகுப்பு - வரலாறு - அலகு 19

தேதி  :       

வகுப்பு  11 ஆம் வகுப்பு      

பாடம்  : வரலாறு     

தலைப்பு  : 19. நவீனத்தை நோக்கி 

கற்பித்தல் துணைக் கருவிகள் :       

திறன்பேசி, கணிப்பொறி, QR Code ஸ்கேனர், இந்திய வரைபடம், உலக உருண்டை.  

கற்பித்தல் நோக்கங்கள் :       

1. சமூக, சமய சீர்திருத்த இயக்கங்களின் பணிகளை அறியச் செய்தல்.

2. இஸ்லாமிய சீர்திருத்த இயக்கங்களின் பணிகளை புரியச் செய்தல்.

3. தமிழ்நாட்டில் ஏற்பட்ட சீர்திருத்த இயக்கங்களை உணரச் செய்தல்.

4. கிறித்தவ சமய பரப்புக் குழுக்களை பங்களிப்பை விளங்கச் செய்தல்.

ஆயத்தம் செய்தல் :      

1. சதி எனும் உடன்கட்டை ஏறும் வழக்கம் என்றால் என்ன?

2. யாருடைய பிறந்தநாள் இந்தியாவில் இளைஞர் தினமாகும்?

3. வாடியப் பயிரை கண்டபோது வாடினேன் என யார் கூறியது?

பாடக் குறிப்புகள் :      

19 ஆம் நூற்றாண்டில் இந்தியச் சமூகத்தில் மூடநம்பிக்கைகள் நிரம்பி இருந்தது. இங்கு சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்பு நிலவுகிறது என ஆங்கிலேயர்கள் கூறினர். இதை பின்பற்ற உருவ வழிபாடும், பல கடவுள் வழிபாடும் மக்களைத் தூண்டின. அதற்கு இணையாகச் சமூகச் சூழலும் உயிரோட்டம் இல்லாமல் தாழ்ந்த நிலையில் இருந்தது.

* சமூக, சமய சீர்திருத்த இயக்கங்களின் எழுச்சி

* பிரம்ம சமாஜம் - ராஜா ராம்மோகன் ராய்

* பிரார்த்தனை சமாஜம் - ஆத்மராம் பாண்டுரங்

* ஆரிய சமாஜம் - சுவாமி தயானந்த சரஸ்வதி

* இராமகிருஷ்ண இயக்கம் - சுவாமி விவேகானந்தர்

* பிரம்மஞான சபை - அன்னி பெசன்ட் அம்மையார்

* சத்யசோதக் சமாஜம் - ஜோதிபா புலே, சாவித்திரிபா புலே

* பண்டித ரமாபாய் - சாரதா சதன், முக்தி சதன்

* ஸ்ரீ நாராயண குரு தர்ம பரிபாலன யோகம் - ஸ்ரீ நாராயண குரு

* இஸ்லாமிய சீர்திருத்த இயக்கங்கள்

* அலிகர் இயக்கம் சையது அகமது கான்

* அகமதியா இயக்கம் - மிர்சா குலாம் அகமது

* தியோபந்த் இயக்கம் - வைதீகப் பிரிவைச் சார்ந்தவர்கள்

* நட்வத்-அல்-உலாமா, ஃபிரங்கி மஹால்

* பார்சி சீர்திருத்த இயக்கங்கள் - ரக்னுமய் மத்யஸ்னன் சபா

* சீக்கிய சீர்திருத்த இயக்கம் - சிங் சபா, அகாலி இயக்கம்

* தமிழ்நாட்டில் சீர்திருத்த இயக்கங்கள்

* இராமலிங்க அடிகள், அயோத்திதாச பண்டிதர்

* கிறித்தவ சமயப் பரப்பு நிறுவனங்கள்

* சீர்திருத்த இயக்கங்களின் முக்கியத்துவம்

மதிப்பிடுதல் :      

1. "இந்திய மறுமலர்ச்சியின் தந்தை" என்று கருதப்பட்டவர் யார்?

2. "வேதங்களை நோக்கி திரும்புக” என்று முழக்கமிட்டவர் யார்?

3. "ஒரு பைசாத் தமிழன்" வாரப் பத்திரிகையை நடத்தியவர் யார்?

கற்றல் விளைவுகள் :      

1. சமூக, சமய சீர்திருத்த இயக்கங்களின் பணிகளை அறிந்து கொண்டனர்.

2. இஸ்லாமிய சீர்திருத்த இயக்கங்களின் பணிகளை புரிந்து கொண்டனர்.

3. தமிழ்நாட்டில் ஏற்பட்ட சீர்திருத்த இயக்கங்களை உணர்ந்து கொண்டனர்.

4. கிறித்தவ சமய பரப்புக் குழுவின் பங்களிப்பை தெரிந்து கொண்டனர்.

தொடர்பணி :       

1. இந்தியாவில் கிறித்தவ மதப்பரப்பாளர்கள் ஆற்றிய பணிகளை விளக்குக.

2. தமிழ்நாட்டில் நடந்த சமூக சீர்திருத்த இயக்கங்களை எடுத்துக்காட்டுக.

3. இராஜா ராம்மோகன் ராயின் சீர்திருத்தப் பணிகளை பட்டியலிடுக.


அ. அறிவழகன், மாநிலத் தலைவர் 

தமிழ்நாடு முதுகலை வரலாறு ஆசிரியர் கழகம் - 9944573722   

Download Pdf Link 👇👇👇

11th History - Notes of Lesson - Week 15








No comments:

Post a Comment

Featured Post

IT Projection Form FY 2025-26 (AY 2026-27) Version 26.0

வருமான வரி கணிப்பு படிவம்  நிதியாண்டு (2025 - 2026) Income Tax Projection Form - Version 26.0  (Old Regime and New Regime)  Financial Year 2...