Home

06 November 2023

11 ஆம் வகுப்பு வரலாறு - பாடக்குறிப்பேடு - வாரம் 10

11 ஆம் வகுப்பு - வரலாறு - அலகு 14

தேதி  :       

வகுப்பு  11 ஆம் வகுப்பு      

பாடம்  : வரலாறு     

தலைப்பு  : 14. முகலாயப் பேரரசு 

கற்பித்தல் துணைக் கருவிகள் :       

திறன்பேசி, கணிப்பொறி, QR Code ஸ்கேனர், இந்திய வரைபடம், உலக உருண்டை.  

கற்பித்தல் நோக்கங்கள் :       

1. முகலாயப் பேரரசர்களின் ஆட்சியை அறியச் செய்தல்.

2. முகலாயர் கால அரசியல் நிர்வாகத்தை புரியச் செய்தல்.

3. முகலாயர் கால சமூகம், பொருளாராரம் உணரச் செய்தல்.

4. முகலாயர் கால கலை, கட்டடக்கலை விளங்கச் செய்தல்.     

ஆயத்தம் செய்தல் :      

1. டெல்லி சுல்தானியத்தின் கடைசி அரசர் யார்?

2. முதல் பானிப்பட் போர் எப்பொழுது நடைபெற்றது?

3.இந்தியாவில் முகலாயர் ஆட்சியை நிறுவியர் யார்?

பாடக் குறிப்புகள் :      

மங்கோலிய செங்கிஸ்கான், துருக்கிய தைமூர் ஆகியோரின் வழித்தோன்றலான பாபர் இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவினர். இப்பேரரசு 1526 இல் பானிப்பட் போரில் இப்ராகிம் லோடியை தோற்கடித்த பின் நிறுவப்பட்டது. முகலாயப் பேரரசு மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாக ஆட்சி நடத்தி வந்தது.

* ஜாகிருத்தீன் முகமது பாபர், முதலாம் பானிப்பட் போர்.

* கான்வாப் போர், சந்தேரிப் போர், காக்ராப் போர்.

* ஹூமாயூன் - கன்னோசிப் போர், சௌசாப் போர்.

* ஷெர்ஷாவின் சீர்திருத்தங்கள், ஜாகீர்தாரி முறை.

* அக்பர் - இரண்டாம் பானிப்பட் போர், பைராம்கான்.

* அக்பரின் ரஜபுத்திரக் கொள்கை, மன்சப்தாரி முறை.

* அக்பரின் மதக் கொள்கை, தீன் இலாஹி, ஜோதா அக்பர்.

* ஜஹாங்கீர் நூர்ஜஹான், ஷாஜஹான் - தாஜ்மஹால்.

* தக்காணத்து சுல்தானியம், மாலிக் ஆம்பர், கோல்கும்பாஸ். 

* ஔரங்கசீப் - தக்காண, மராத்திய போர்கள், மதக்கொள்கை.

* முகலாயர் கால சமூகக் கட்டமைப்பு, சாதிமுறை.

* முகலாயர் கால பொருளாதாரம், வேளாண்மை.

* முகலாயர் கால வர்த்தகம் மற்றும் வணிகம்.

* முகலாயர் கால மதம் - கபீர், சீக்கியம், சூபியிஸம், கிறித்தவம்.

* முகலாயர் கால கலைகள் - இசை, ஓவியம், இலக்கியம்.

* கட்டடக்கலை - பதேபூர் சிக்ரி, தாஜ்மஹால், செங்கோட்டை.

* அபுல் பாசல், அபுல் பெய்சி, தாராஷூகோ, ஜெகநாத பண்டிதர்.

* முகலாயர் காலத்து ஐரோப்பியக் குடியேற்றங்கள்.  

மதிப்பிடுதல் :      

1. மன்சப்தாரி முறையை தோற்றுவித்தவர் யார்?

2. முகலாயக் கட்டடக் கலையின் மறுவடிவம் எது?

3. பாதுஷா நாமா யாருடைய வாழ்க்கை வரலாறு ?

கற்றல் விளைவுகள் :      

1. முகலாயப் பேரரசர்களின் ஆட்சியை அறிந்து கொண்டனர்.

2. முகலாயர் கால அரசியல் நிர்வாகத்தை புரிந்து கொண்டனர்.

3. முகலாயர் கால சமூகம், பொருளாராரம் உணர்ந்து கொண்டனர்.

4. முகலாயர் கால கலை, கட்டடக்கலை தெரிந்து கொண்டனர்.

தொடர்பணி :       

1. "வருவாய் நிர்வாகத்தில் ஷெர்ஷா அக்பரது முன்னோடி" - விளக்குக.

2. ஔரங்கசீப்பின் தக்காணக் கொள்கை முகலாயப் பேரரசின் அழிவுக்கு வழி வகுத்தது?

3. முகலாயக் கட்டடக்கலையின் சிறப்பம்சங்களை விளக்குக.


அ. அறிவழகன், மாநிலத் தலைவர் 

தமிழ்நாடு முதுகலை வரலாறு ஆசிரியர் கழகம் - 9944573722   

Download Pdf Link 👇👇👇

11th History - Notes of Lesson - Week 10








No comments:

Post a Comment

Featured Post

Income Tax Form FY 2024 - 25 (Version 2.0) Date 20/12/2024 Old Regime and New Regime - By Arivazhagan

Income Tax Form Latest Version 2.0  (Old Regime and New Regime)  Financial Year 2024-25 (AY 2025-26)  Auto calculation is enabled in this So...

Popular Posts