Home

04 September 2021

ஆசிரியர் பணியிட விவரங்களை EMIS இணையத்தில் DSE Staff fixation-ல் பதிவேற்றம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவு.

2021-22ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் சார்பாக கல்வி மேலாண்மைத் தகவல் முகமை இணையதளத்தில் மாணவர்களின் சேர்க்கை விவரம் மற்றும் பணிபுரியும் ஆசிரியர்களின் விவரம் ஆகியவை முதன்மைக் கல்வி அலுவலர்களால் பதிவேற்றம் செய்யப்பெற்று வருகின்றன.


தற்போது கல்வி மேலாண்மைத் தகவல் முகமை இணையதளத்தில் (EMIS) அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் (Sanctioned Posts) சார்பான விவரங்களைப் பதிவேற்றம் செய்திட ஏதுவாக உள்ளீடு செய்ய DSE Staff fixation என்ற தலைப்பில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 


எனவே , சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை (Sanctioned Posts) (Scale Register) ஒப்பிட்டு சரிபார்த்து மேற்படி இணையத்தில் பதிவேற்றம் செய்திடல் வேண்டும்.


அவ்வாறு பதிவேற்றம் செய்யப்படும்போது இப்பணியிடங்கள் கடந்த ஆண்டுகளில் ஆசிரியரின்றி உபரி எனக் கண்டறியப்பட்டு (Surplus post without person) இயக்குநரின் பொதுத்தொகுப்பிற்கு சரண் செய்யப்பட்டிருந்தால் அப்பணியிடங்களை எக்காரணம் கொண்டும் மீளவும் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களாகக் கருதி பதிவேற்றம் செய்தல் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

No comments:

Post a Comment

Featured Post

Income Tax Form FY 2024 - 25 (Version 2.0) Date 20/12/2024 Old Regime and New Regime - By Arivazhagan

Income Tax Form Latest Version 2.0  (Old Regime and New Regime)  Financial Year 2024-25 (AY 2025-26)  Auto calculation is enabled in this So...

Popular Posts