04 September 2021

மத்திய அரசு ஊழியர்களுக்கான DA 28% லிருந்து 31% மாக உயர வாய்ப்பு.

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜாக்பாட். நிலுவையில் இருந்த 11% DA மற்றும் DR சமீபத்தில் உயர்த்தி வழங்கப்பட்ட நிலையில் தற்போது ஜூலை 2021 கான அகவிலைப்படி மேலும் 3% உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டு உள்ளது. 

கொரோனா பேரிடர் காரணமாக ஊதியதாரர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு கடந்த ஜனவரி 2020 முதல் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அகவிலைப்படி உயர்வு ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை 2021 முதல் அனுமதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்பின்னர் கடந்த 18 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மூன்று தவணை அகவிலைப்படி உயர்வுகள் முறையே ஜனவரி 2020 இல் 4% + ஜூலை 2020 3% + ஜனவரி 2021 இல் 4% என மொத்தமாக 11% அகவிலைப்படி உயர்வை அனுமதித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததோடு அரசாணையும் வெளியிடப்பட்டது. அதன் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அகவிலைப்படி 17% லிருந்து 28% மாக உயர்ந்துள்ளது. 

2021 ஜனவரி முதல் மே மாதம் வரையிலான புள்ளிவிவரங்கள்படி ஜூலை 2021 கான அகவிலைப்படி மேலும் 3% உயர வாய்ப்புள்ளதாக AIPCI தகவல் தெரிவித்து உள்ளது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான DA மற்றும் DR 28% லிருந்து 31% மாக (17+4+3+4+3) உயர்த்தி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அகவிலைப்படி உயர்வு ஏப்ரல் 2022 முதல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதால் 17% அகவிலைப்படி மட்டுமே தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான இந்த 14% (4+3+4+3) DA மற்றும் DR உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது மார்ச் 2022 வரை தொடரும் எனத் தெரிகிறது. 

No comments:

Post a Comment

Featured Post

வருமான வரியில் விளிம்பு நிவாரணம் (Marginal Relief) எப்படி கணக்கிடுவது.

விளிம்பு நிவாரணம் (Marginal Relief) :  7 இலட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 25,000 ரூபாய் வரை வருமான வரி தள்ளுபடி (Rebate) என்பது பெ...

Popular Posts