Home

24 August 2021

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதி இல்லை.



📍 தமிழகத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி 9 முதல் 12 வரை உள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதி இல்லை என நாளிதழ் செய்தி வெளியாகி உள்ளது. 

📍 ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்ட விவரத்தை பள்ளிக் கல்வித் துறையின் EMIS இணையதளத்தில் பதிவிட வேண்டும். பதிவு செய்யவில்லை என்றால் தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை என்று கருதி நோ வொர்க் நோ பே அடிப்படையில் பள்ளிக்கு வர தடை விதிக்கப்படுவார்கள். 

📍 கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை ஆசிரியர்கள் ஆகஸ்டு 27 ஆம் தேதிக்குள் அந்தந்த பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. 

📍கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை பதிவிறக்கம் செய்ய தடுப்பூசி செலுத்திக் கொண்ட போது வழங்கிய மொபைல் எண் மட்டும் இருந்தால் போதுமானது. https://selfregistration.cowin.gov.in/ என்ற இணையதள முகவரிக்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளவும். நன்றி. 

Download Link

No comments:

Post a Comment

Featured Post

சிந்தனைக் களம் - 3

வெற்றிக்குத் தேவை இலக்கு வெற்றி என்பது தேர்ந்தெடுத்த ஒரு இலக்கை அடைவதன் மூலம் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் மகிழ்ச்சியடையச் செய்யும் ஒ...

Popular Posts