12 ஆம் வகுப்பு - வரலாறு - அலகு 12
தேதி :
வகுப்பு : 12 ஆம் வகுப்பு
பாடம் : வரலாறு
தலைப்பு : 12. ஐரோப்பாவில் அமைதியின்மை.
கற்பித்தல் துணைக் கருவிகள் :
திறன்பேசி, கணிப்பொறி, QR Code ஸ்கேனர், இந்திய வரைபடம், உலக உருண்டை.
கற்பித்தல் நோக்கங்கள் :
1. சோஷலிச, கம்யூனிச கருத்துகளின் எழுச்சியை அறியச் செய்தல்.
2. வியன்னா காங்கிரஸ், ஜூலை, பிப்ரவரி புரட்சியை புரியச் செய்தல்.
3. இத்தாலி மற்றும் ஜெர்மானிய இணைப்புகளை உணரச் செய்தல்.
4. 3 ஆம் நெப்போலியன், நீண்டகால பெருமந்தம் விளங்கச் செய்தல்.
ஆயத்தம் செய்தல் :
1. ஐரோப்பாவின் வரைபடத்தை மாற்றியமைத்த மாவீரர் யார்?
2. கார்ல் மார்க்ஸ் எந்த சிந்தனைக்கு பெரும் பங்காற்றினார்?
3. நெப்போலியனுக்குப் பிறகு துண்டாடப்பட்ட நாடுகள் யாவை?
பாடக் குறிப்புகள் :
19 ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டில் நடந்த பல முன்னேற்ற நிகழ்வுகள் ஐரோப்பிய கண்டம் முழுதும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. புனித கூட்டணியை உருவாக்கி ஐரோப்பாவில் எழுந்த மக்களாட்சி உணர்வையும், தேசியவாதப் போக்கையும் ஒடுக்க நினைத்த மெட்டர்னிக் "பிரான்ஸ் தும்மினால், ஐரோப்பாவிற்கு ஜலதோஷம் பிடிக்கும்" எனக் கூறினார்.
* நேப்போலியனின் படையெடுப்புகளும் வீழ்ச்சியும்
* வியன்னா காங்கிரசில் மெட்டர்னிக்கின் செயல்
* சோசலிசத்தின் எழுச்சி, கம்யூனிசத்தின் பிறப்பு
* செயின்ட் சைமன், சார்லஸ் ஃபூரியர், ராபர்ட் ஓவன்
* பிரௌதன், லூயி பிளாங்க், கார்ல் மார்க்ஸ், ஏங்கல்ஸ்
* இங்கிலாந்தின் சாசனத்துவம், வில்லியம் லவெட்
* 1830 ஜூலை புரட்சி, 1848 பிப்ரவரி புரட்சி
* இத்தாலிய இணைப்பு - மாசினி, கவுண்ட் கவூர், கரிபால்டி
* கார்பொனாரி, இளம் இத்தாலி இயக்கம், இத்தாலிய படையணி
* இத்தாலிய அரசர் இரண்டாம் விக்டர் இமானுவேல்
* ஜெர்மனி இணைப்பு - ஜே. ஜி. ஃபிக்ட், பிஸ்மார்க்
* ஆஸ்திரிய - பிரஷ்ய போர், பிராங்கோ - பிரஷ்ய போர்
* பிரான்சில் மூன்றாவது குடியரசு, மூன்றாம் நெப்போலியன்
* நீண்டகால பெருமந்தம், 1873 ஆம் ஆண்டு பீதி
* போலியான பொருளாதார பகட்டுக் காலம்
* புல்மேன் வேலைநிறுத்தப் போராட்டம்
* மகளிர் தீப்பெட்டி தொழிலாளர் போராட்டம்
மதிப்பிடுதல் :
1. இத்தாலி வெறும் பூகோள வெளிப்பாடே எனக் கூறியவர் யார்?
2. இரண்டாம் பன்னாட்டு அமைப்பு எந்த நகரில் துவங்கப்பட்டது?
3. எம்ஸ் தந்தி எந்த இரு நாடுகளிடையே போர் ஏற்பட வித்திட்டது?
கற்றல் விளைவுகள் :
1. சோஷலிச, கம்யூனிச கருத்துகளின் எழுச்சியை அறிந்து கொண்டனர்.
2. வியன்னா காங்கிரஸ், ஜூலை, பிப்ரவரி புரட்சியை புரிந்து கொண்டனர்.
3. இத்தாலி மற்றும் ஜெர்மானிய இணைப்புகளை உணர்ந்து கொண்டனர்.
4. 3 ஆம் நெப்போலியன், நீண்டகால பெருமந்தம் தெரிந்து கொண்டனர்.
தொடர்பணி :
1. இத்தாலிய இணைவு எவ்வாறு சாத்தியமாக்கப்பட்டது?
2. "ஜெர்மனியின் உண்மையான வடிவமைப்பாளர் பிஸ்மார்க்" - விவாதி.
3. "சோஷலிச கருத்துக்கள் உருப்பெற தொழில்புரட்சியே முகாந்திரம் அமைத்தது" - நிறுவுக.
அ. அறிவழகன், மாநிலத் தலைவர்
TNPGHTA அமைப்பு - 9944573722
Download Pdf Link 👇👇👇
12th History - Notes of Lesson - Week 12
No comments:
Post a Comment