12 ஆம் வகுப்பு - வரலாறு - அலகு 11
தேதி :
வகுப்பு : 12 ஆம் வகுப்பு
பாடம் : வரலாறு
தலைப்பு : 11. புரட்சிகளின் காலம்.
கற்பித்தல் துணைக் கருவிகள் :
திறன்பேசி, கணிப்பொறி, QR Code ஸ்கேனர், இந்திய வரைபடம், உலக உருண்டை.
கற்பித்தல் நோக்கங்கள் :
1. அமெரிக்க விடுதலை போருக்கான காரணங்களை அறியச் செய்தல்.
2. பிரெஞ்சு புரட்சிக்கான காரணங்கள், விளைவுகளை புரியச் செய்தல்.
3. இலத்தீன் அமெரிக்கப் புரட்சியின் போக்கினை உணரச் செய்தல்.
4. இங்கிலாந்தில் நடைபெற்ற தொழிற்புரட்சியை விளங்கச் செய்தல்.
ஆயத்தம் செய்தல் :
1. புதிய உலகம் என்றழைக்கப்படும் கண்டம் எது?
2. அமெரிக்க கண்டத்தைக் கண்டறிந்தவர் யார்?
3. தொழிற்புரட்சி பற்றி நீங்கள் அறிந்தது என்ன?
பாடக் குறிப்புகள் :
நிலவியல் கண்டுபிடிப்புகள், மறுமலர்ச்சி, சமய மறுமலர்ச்சி, "முடியரசர்களின் காலம்" ஆகியவற்றின் காரணமாக, பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், உலகம் முழுவதிலும், அரசியல், சமய, சமூக, பொருளாதார நிலைகள் மாற்றமடையத் தொடங்கின. பதினெட்டாம் நூற்றாண்டு முடிவடைகின்ற தருவாயில் அமெரிக்க புரட்சி, பிரெஞ்சுப் புரட்சி நடைபெற்றன.
அமெரிக்க விடுதலை போர் :
* மேபிளவர் கப்பல், சர் வால்டர் ராலே, 13 குடியேற்றங்கள்.
* நாவாய்ச் சட்டங்கள், ஏழாண்டுப் போர், சர்க்கரை மீதான வரி.
* முத்திரைச் சட்டம், பாஸ்டன் படுகொலை, பாஸ்டன் தேநீர் விருந்து.
* பொறுக்க முடியாத சட்டங்கள், கியூபெக் சட்டம், சுதந்திரப் பிரகடனம்.
* ஜார்ஜ் வாஷிங்டன், சாரடோகா வெற்றி, பாரிஸ் உடன்படிக்கை.
பிரெஞ்சுப் புரட்சி :
* 18 ஆம் நூற்றாண்டு பிரான்ஸ், விவசாயிகள் நிலை, மூன்று பிரிவுகள்.
* நிதி நிர்வாகச் சீர்கேடுகள், அறிவார்ந்த மக்களின் பங்கு.
* முப்பேராயம், டென்னிஸ் மைதான உறுதிமொழி, பாஸ்டில் தகர்ப்பு.
* அரசியலமைப்பு உருவாக்கம், தேசிய சட்டமன்றம், தேசிய பேரவை.
* டான்டன், ரோபிஸ்பியர், இயக்குநர் குழு, புரட்சியின் தாக்கம்.
இலத்தீன் அமெரிக்கப் புரட்சிகள் :
* ஹைட்டி புரட்சி, வெனிசுலா, கொலம்பியா, மெக்சிகோ.
* பிரேசில், அரிஜெண்டினா, பெரு, சிலி, பொலிவியா.
தொழிற்புரட்சி தொடக்கம் :
* இங்கிலாந்தில் தொழிற்புரட்சி ஏற்படக் காரணங்கள்.
* பருத்தி தொழிற்சாலை, இரும்பு எஃகு தொழிற்சாலை.
* நீராவி இயந்திரங்கள், தொழிற்புரட்சியின் தாக்கம்.
* அமெரிக்கா, ஜெர்மனியில் ஏற்பட்ட தொழிற்புரட்சிகள்.
மதிப்பிடுதல் :
1. பாஸ்டன் தேநீர் விருந்து எப்போது நடைபெற்றது?
2. செப்டம்பர் படுகொலைக்கு காரணமானவர் யார்?
3. அமெரிக்கத் தொழிற்புரட்சியின் தந்தை யார்?
கற்றல் விளைவுகள் :
1. அமெரிக்க விடுதலை போருக்கான காரணங்களை அறிந்து கொண்டனர்.
2. பிரெஞ்சு புரட்சிக்கான காரணங்கள், விளைவுகளை புரிந்து கொண்டனர்.
3. லத்தீன் அமெரிக்கப் புரட்சியின் போக்கினை உணர்ந்து கொண்டனர்.
4. இங்கிலாந்தில் நடைபெற்ற தொழிற்புரட்சியை தெரிந்து கொண்டனர்.
தொடர்பணி :
1. அமெரிக்க விடுதலைப் போருக்கான காரணங்களை விவாதிக்கவும்.
2. ரோபஸ்பியர் வரையிலான பிரெஞ்சுப் புரட்சியின் போக்கினை வரைக.
3. தொழிற்புரட்சி ஏன் முதலில் இங்கிலாந்தில் தொடங்கியது? விவரிக்க.
அ. அறிவழகன், மாநிலத் தலைவர்
TNPGHTA அமைப்பு - 9944573722
Download Pdf Link 👇👇👇
12th History - Notes of Lesson - Week 11
No comments:
Post a Comment