12 ஆம் வகுப்பு - வரலாறு - அலகு 13
தேதி :
வகுப்பு : 12 ஆம் வகுப்பு
பாடம் : வரலாறு
தலைப்பு : 13. ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும்.
கற்பித்தல் துணைக் கருவிகள் :
திறன்பேசி, கணிப்பொறி, QR Code ஸ்கேனர், இந்திய வரைபடம், உலக உருண்டை.
கற்பித்தல் நோக்கங்கள் :
1. ஏகாதிபத்தியம், காலனியாதிக்கம் பரவலை அறியச் செய்தல்.
2. முதல் உலகப் போர், பன்னாட்டுச் சங்கம் புரியச் செய்தல்.
3. ரஷ்யப் புரட்சி, பொருளாதாரப் பெருமந்தம் உணரச் செய்தல்.
4. பாசிசமும், நாசிசமும் தோன்றுதலை விளங்கச் செய்தல்.
ஆயத்தம் செய்தல் :
1. காலனிய ஆதிக்கம் என்றால் என்ன?
2. உலகப் போர் என்பது எதைக் குறிக்கிறது?
3. பொருளாதாரப் பெருமந்தம் என்பது யாது?
பாடக் குறிப்புகள் :
18ஆம் நூற்றாண்டில் தொழிற்துறை ஒரு நிலையான வளர்ச்சி கண்டதால் வணிக நடவடிக்கைகள் தீவிரமடைந்தன. இதன் விளைவாக ஐரோப்பா ஒரு ஆதிக்க சக்தியாக ஏற்றம் கண்டது. ஆசியாவும் ஆப்பிரிக்காவும் ஐரோப்பிய காலனிகளாக மாற்றப்பட்டு சுரண்டலுக்கு உட்படுத்தப்பட்டன. ஏகாதிபத்தியப் போட்டிகள் ஏற்பட்டத் தொடங்கின.
* ஏகாதிபத்தியத்தின் தோற்றம், வணிக காலம்
* தொழில் மூலதன ஆதிக்கமும் தடையற்ற வணிகமும்
* காலனியப் பரவலும் போரை நோக்கியப் பாதையும்
* முதல் உலகப் போர் - போருக்கு முந்தைய அரசியல் நிலை
* முதல் உலகப் போருக்கான காரணங்கள் - கூட்டணி முறை
* மொராக்கோ சிக்கல், போஸ்னியா சிக்கல், பால்கன் போர்கள்
* உடனடிக் காரணம் - ஆஸ்திரிய இளவரசர் படுகொலை
* போரின் போக்கு - ஜட்லாந்து, லூசிடானியா, ஜெர்மனி தோல்வி
* பாரிஸ் அமைதி உடன்படிக்கை, வெர்செயில்ஸ் ஒப்பந்தம்
* ரஷ்யப் புரட்சிக்கான காரணிகள், புரட்சியின் பாதிப்புகள்
* இரண்டாம் நிக்கோலஸ், பிப்ரவரி புரட்சி, இடைக்கால அரசு
* மார்க்சியமும் அதன் தாக்கமும், லெனின், அக்டோபர் புரட்சி
* பன்னாட்டுச் சங்கம், அமைப்பு, குறிக்கோள், செயல்பாடுகள்
* அத்துமீறல் சம்பவங்கள், பன்னாட்டுச் சங்கத்தின் தோல்வி
* பொருளாதாரப் பெருமந்தம், பங்குச் சந்தைகளின் வீழ்ச்சி
* இத்தாலியின் பாசிசப் போக்கு - முசோலினி ஏற்றமடைதல்
* போருக்குப் பிந்தைய ஜெர்மனி, ஜெர்மனியில் நாசிசம் - ஹிட்லர்
மதிப்பிடுதல் :
1. அகழிப் போர் எவ்வாறு நடத்தப்பட்டது?
2. ஜட்லாந்து போரின் முக்கியத்துவம் யாது?
3. ரஷ்யப் புரட்சி ஏற்படுத்திய பாதிப்புகள் யாவை?
கற்றல் விளைவுகள் :
1. ஏகாதிபத்தியம், காலனியாதிக்கம் பரவலை அறிந்து கொண்டனர்.
2. முதல் உலகப் போர், பன்னாட்டுச் சங்கம் புரிந்து கொண்டனர்.
3. ரஷ்யப் புரட்சி, பொருளாதார பெருமந்தம் உணர்ந்து கொண்டனர்.
4. பாசிசமும், நாசிசமும் தோன்றுதலை தெரிந்து கொண்டனர்.
தொடர்பணி :
1. முதல் உலகப் போரின் காரணங்களையும், விளைவுகளையும் கணக்கிடுக.
2. மார்க்ஸ் தீப்பொறியை வழங்கவும், அதை லெனின் தீபமாக ஏற்றினார் - விவாதி.
3. வெர்செய்ல்ஸ் ஒப்பந்தம் கடுமையானதாகவும், அவமானகரமாகவும் தெரிந்தது - விவரி.
அ. அறிவழகன், மாநிலத் தலைவர்
TNPGHTA அமைப்பு - 9944573722
Download Pdf Link 👇👇👇
12th History - Notes of Lesson - Week 13
No comments:
Post a Comment