Home

24 August 2021

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதி இல்லை.



📍 தமிழகத்தில் செப்டம்பர் 1 ஆம் தேதி 9 முதல் 12 வரை உள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதி இல்லை என நாளிதழ் செய்தி வெளியாகி உள்ளது. 

21 August 2021

செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்க தமிழக அரசு அனுமதி

✍️ 9 முதல் 12 வகுப்புகள் வரை மற்றும் கல்லூரிகள் செப்டம்பர் 1 முதல் 50% மாணவர்களுடன் சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் நடத்த அனுமதி, 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை செப்டம்பர் 15 க்குப் பிறகு திறக்க ஆலோசனை - தமிழக அரசு அறிவிப்பு. 

17 August 2021

மேல்நிலை வகுப்புகளுக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டம் 2021-22

முன்னுரிமைப் பாடதிட்டம்

2021-2022 ஆம் கல்வி ஆண்டின், 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான முன்னுரிமை அளிக்கப்பட்ட பாடத்திட்டம் - பள்ளிக் கல்வித் துறை வெளியீடு. அரசாணை எண் 126, பள்ளிக் கல்வித் துறை நாள்: 13.08.2021 இன் படி 2020-21 ஆம் கல்வியாண்டிற்கான முன்னுரிமை அளிக்கப்பட்ட பாடத்திட்டமானது 2021-22 ஆம் கல்வியாண்டிற்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான முன்னுரிமை அளிக்கப்பட்ட பாடத்திட்ட விவரம் குறித்த இணைப்புகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளது.




15 August 2021

12 ஆம் வகுப்பு வரலாறு அலகு 1 - தேசியம் என்பதன் பொருள்

1. இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி

தேசியம் என்பதன் பொருள் 

தேசியம் என்பது ஒரு நாட்டிற்கு விசுவாசமாகவும் பக்தியுடன் இருத்தல். தனது நாட்டை ஏனைய நாடுகளை விட உயர்வான இடத்தில் வைத்துப் போற்றுதல். தனது நாட்டின் பண்பாடு மற்றும் விருப்பங்களின் வளர்ச்சியில் சிறப்பு கவனம் செலுத்துதல்.  

09 August 2021

10th STD Social Science Kavin Guide 2021 EM


10th STD Social Science 

English Medium Study Material

Kavin Guide 2021 👇👇👇

06 August 2021

10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு அலகு 1 அறிமுகம்

 1. முதல் உலகப் போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

அறிமுகம் : 

அனைவருக்கும் வணக்கம்.  முதலில் ஒரு சிறு கேள்வியுடன் தொடங்கலாம். வரலாற்றின் இரு கண்கள் என்று அழைக்கப்படுபவை எவை? 

🖍️உலகில் நடைபெற்ற எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் அது எந்த இடத்தில் நடைபெற்றது எந்த ஆண்டு நடைபெற்றது என்று கட்டாயம் வரலாற்றில் குறிப்பிடப்பட்டு இருக்கும். இவை இரண்டும் இல்லாமல் வரலாறு எழுத முடியாது. அதன் காரணமாகத் தான் இடம் மற்றும் காலம் ஆகிய இரண்டும் வரலாற்றின் இரு கண்கள் என்று அழைக்கப்படுகின்றது. 

05 August 2021

12 ஆம் வகுப்பு வரலாறு அலகு 1 அறிமுகம்

 1. இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி.

அறிமுகம். 

✍️ இந்தியா இயற்கை வளம் மிகுந்த ஒரு நாடாக இருந்தது. மூலப் பொருட்கள் உற்பத்தியிலும் கைவினை தயாரிப்புகளிலும் முன்னணியில் இருந்தது. இந்திய பொருட்களுக்கு உலகம் முழுவதும் தேவை அதிகமாக இருந்தது. அதனால் உலகின் மிகச் சிறந்த ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா விளங்கியது. ஆனால் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆட்சி நிறுவப்பட்ட பிறகு இந்தியப் பொருளாதாரத்தின் நிலைமை தலைகீழாக மாறியது.