Home

21 August 2021

செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்க தமிழக அரசு அனுமதி

✍️ 9 முதல் 12 வகுப்புகள் வரை மற்றும் கல்லூரிகள் செப்டம்பர் 1 முதல் 50% மாணவர்களுடன் சுழற்சி முறையில் நேரடி வகுப்புகள் நடத்த அனுமதி, 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை செப்டம்பர் 15 க்குப் பிறகு திறக்க ஆலோசனை - தமிழக அரசு அறிவிப்பு. 

✍️ தமிழகத்தில் நாளை மறுநாள் காலையுடன் ஊரடங்கு முடிவடைகிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது குறித்து தலைமைச் செயலகத்தில் இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மேலும் பல தளர்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளன. 

✍️ 1-9-2021 முதல் பள்ளிகளில் 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில், நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, செயல்படும். இப்பள்ளிகளில் மதிய உணவுத் திட்டமும் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும். 

✍️ மேற்படி உயர் வகுப்புகள் செயல்படுவதை கவனித்து அதன் அடிப்படையில், மழலையர் வகுப்புகள், 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளை 15-9-2021 க்குப் பிறகு திறப்பது குறித்து ஆலோசனை செய்து அறிவிக்கப்படும் மேலும், ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகளுடன் பின்வரும் செயல்பாடுகள் அனுமதிக்கப்படுகின்றன. 

✍️ அனைத்து கல்லூரிகளும் 01-09-2021 முதல் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும். இதற்குரிய வழிகாட்டு நெறிமுறைகளை தொடர்புடைய துறையின் செயலாளர்கள் வழங்குவார்கள். கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். 

✍️ அனைத்து பட்டயப் படிப்பு வகுப்புகள் ( Diploma Courses, Polytechnic Colleges ) சுழற்சி முறையில் நடத்த அனுமதிக்கப்படும். ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். 

✍️ அங்கன்வாடி மையங்கள் 01-09-2021 முதல் மதிய உணவு வழங்குவதற்காக செயல்பட அனுமதிக்கப்படும். அங்கன்வாடி மைய ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தி இருப்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிசெய்ய வேண்டும். 

TN GOV PRESS NEWS (21.08.2021)

✍️ தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்தது. தமிழகத்தில் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகமானது. இதனையடுத்து கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனா பரவல் குறையத் தொடங்கியதை அடுத்து பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மூன்றாவது அலை வர வாய்ப்பு உள்ளதால் எச்சரிக்கையாக இருக்கும்படி மத்திய சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

No comments:

Post a Comment