Home

07 February 2024

எட்டுத்தொகை நூல்கள்

எட்டுத்தொகை : 

சங்க கால இலக்கியங்களில் முக்கியமானவை எட்டுத்தொகை, பத்துப்பாட்டு. இவை இரண்டும் சேர்ந்ததே பதினெண் மேல்கணக்கு நூல்கள். தொகை என்பதற்கு பல புலவர்கள் பாடியது என்றும் பாட்டு என்பதற்கு தனி ஒரு புலவர் பாடியது என்றும் பொருள். 


எட்டுத்தொகை நூல்கள் கடைச்சங்க காலத்தில் தோன்றியவை. எட்டுத்தொகை என்பது எட்டு நூல்களின் தொகுப்பாகும். 

"நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு 

ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் 

கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்று 

இத்திறத்த எட்டுத் தொகை". 

- என்ற வெண்பா மூலம் எட்டுத்தொகை நூல்களின் பெயரை அறியலாம். 


அதாவது நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய நூல்களைக் கொண்டதே எட்டுத்தொகை நூல்கள் ஆகும். எட்டுத்தொகை நூல்களில் உள்ள பாடல்கள் பல்வேறு புலவர்களால் பல்வேறு கால கட்டங்களில் பாடப்பட்டவை. இதில் 2352 பாடல்களை 25 அரசர்கள், 30 பெண்பாற் புலவர்கள் உட்பட மொத்தம் 700 புலவர்கள் பாடியுள்ளனர். மேலும் 102 பாடல்களுக்கு பாடியவர்கள் பெயர் தெரியவில்லை. 


எட்டுத்தொகை நூல்களை அகப்பொருள் சார்ந்தவை, புறப்பொருள் சார்ந்தவை என இரண்டாகப் பிரிக்கின்றனர். நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகிய ஐந்தும் அகம் சார்ந்த நூல்கள். பதிற்றுப்பத்து, புறநானூறு ஆகிய இரண்டும் புறம் சார்ந்த நூல்கள். பரிபாடல் மட்டும் அகமும் புறமும் கலந்த நூலாகும். 


1. நற்றிணை : 

நற்றிணை என்பது 400 பாடல்களைக் கொண்ட நூலாகும். இதைத் தொகுத்தவர் பெயர் தெரியவில்லை. தொகுப்பித்தவர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி.  


நற்றிணைப் பாடல்கள் அக்காலச் சமூகத்தைப் பற்றி அறிய பெரிதும் உதவுகின்றன. மன்னர்களின் ஆட்சிச் சிறப்பு, கொடைத் தன்மை, மக்களின் வாழ்க்கை முறைகள், நம்பிக்கைகள், சடங்குகள் போன்றவற்றை உணர்த்துகின்றன. 


பல்லி கத்தும் ஓசையை வைத்து சகுனம் பார்க்கும் வழக்கம், கால்பந்து விளையாட்டை பெண்களும் விளையாடும் வழக்கம், கிளி, நாரை ஆகியவற்றைத் தூதுவிடும் வழக்கம், தலைவனைப் பிரிந்து வாடும் தலைவி அவனது வருகையை சுவரில் கோடிட்டு எண்ணும் வழக்கம் ஆகியவற்றை நற்றிணைப் பாடல்கள் வாயிலாக அறிகிறோம். 


அதியமான், அழிசி, ஆய் அண்டிரன், ஓரி, காரி, உதியன், செங்குட்டுவன், சேந்தன், நன்னன், தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் போன்ற வேந்தர்களும் குறுநில மன்னர்களும் நற்றிணையில் குறிப்பிடப்பட்டுள்ளனர். 


2. குறுந்தொகை : 

குறுந்தொகை என்பது 400 பாடல்களைக் கொண்ட நூலாகும். இதைத் தொகுத்தவர் பூரிக்கோ. தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.  


குறுந்தொகைப் பாடல்கள் மூலம் சங்க காலத் தமிழர்களின் இல்லற வாழ்க்கை, ஆடை அணிகலன்கள், உணவுப் பழக்கங்கள், பண்டமாற்று முறை, விருந்தோம்பல் வழக்கம், தலைவியைப் பிரிந்து தலைவன் பொருள் ஈட்டச் செல்லுதல், பொழுதுபோக்கு விளையாட்டுகள் ஆகியவைப் பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. 


3. ஐங்குறுநூறு : 

ஐங்குறுநூறு என்பது 500 பாடல்களைக் கொண்ட நூலாகும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஒவ்வொரு திணைக்கும் 100 பாடல்கள் பாடப்பட்டு உள்ளன. இதைத் தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார். தொகுப்பித்தவர் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.  


அரசன் வெற்றியுடன் வாழ வேண்டும். மக்கள் குறைகளை போக்க வேண்டும். அப்போது தான் நாட்டில் அமைதி நிலவும். மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ முடியும் எனக் கூறுகிறது. தலைவி தலைவனுடன் சென்றதால் தலைவியின் தாய் துன்புறும் காட்சி வருகிறது. தொண்டி, கொற்கை, தகட்டூர் போன்ற நகரங்களைப் பற்றியும் தேனூர், ஆமூர் போன்ற ஊர்களைப் பற்றியும் கூறுகிறது. கற்பு வாழ்க்கை, களவு மணம், நடுகற்கள் வழிபாடு முறை, 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அந்தணர்கள் பற்றியும் கூறுகிறது. 


4. பதிற்றுப்பத்து : 

பதிற்றுப்பத்து என்பது 100 பாடல்களைக் கொண்ட நூலாகும். ஒவ்வொரு 10 பாடல்களும் ஒரு சேர மன்னர் மீது பாடப்பட்டு உள்ளது. இதில் 80 பாடல்கள் மட்டுமே தற்போது வரை கிடைத்துள்ளன. முதல் பத்தும் கடைசி பத்தும் கிடைக்கவில்லை. இதைத் தொகுத்தவர் மற்றும் தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.  


பதிற்றுப்பத்தில் பத்து சேர அரசர்களின் வரலாறு இடம் பெற்றுள்ளது. 

2 ஆம் பத்து இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பற்றியும், 3 ஆம் பத்து பல்யானை செல்கெழு குட்டுவன் பற்றியும், 4 ஆம் பத்து களங்காய்க் கண்ணி நாற்முடிச் சேரல் பற்றியும், 5 ஆம் பத்து கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் பற்றியும், 6 ஆம் பத்து ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் பற்றியும், 7 ஆம் பத்து செல்வக் கடுங்கோ வாழியாதன் பற்றியும், 8 ஆம் பத்து பெருஞ்சேரல் இரும்பொறை பற்றியும், 9 ஆம் பத்து இளஞ்சேரல் இரும்பொறை பற்றியும் கூறுகிறது. முதல் பத்து உதியஞ் சேரலாதன் பற்றியும் கடைசிப் பத்து மாந்தரஞ்சேரல் இரும்பொறை பற்றியும் கூறுவதாக நம்பப்படுகிறது. 


5. பரிபாடல் : 

பரிபாடல் என்பது 70 பாடல்களைக் கொண்ட நூலாகும். இதில் 22 பாடல்கள் மட்டுமே தற்போது வரை கிடைத்துள்ளன. இதைத் தொகுத்தவர் மற்றும் தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.  


சிவன், முருகன், திருமால், பிரம்மா போன்ற கடவுள்கள் பற்றி கூறுகிறது. கடவுளை ஏற்போரும் மறுப்போரும் இருந்தனர். விரிநூல் அந்தணர், புரிநூல் அந்தணர் என இரு பிரிவினர் இருந்தனர். மதுரை மாநகர மக்கள் அந்தணர்கள் வேதம் ஓதுவதைக் கேட்டும் உறையூர் மற்றும் வஞ்சி மாநகர மக்கள் சேவல் கூவுவதைக் கேட்டும் விடியற் காலையிலேயே விழித்தனர். ஆறுகளின் குறுக்கே அணை கட்டி நீர்ப்பாசனம் செய்தனர். நடனமாடும் மகளிர் இருந்தனர். மாடு, யானை, குதிரை, கழுதை பூட்டிய வண்டிகளை வாகனங்களாகப் பயன்படுத்தினர். பூவேலைபாடுடன் கூடிய ஆடைகள் மற்றும் பலவகை அணிகலன்களை அணிந்தனர். முகம் பார்க்கும் கண்ணாடி இருந்தது. இரதி-மன்மதன் ஓவியங்களும் அகலிகையின் வரலாற்றை விளக்கும் ஓவியமும் எழுதப்பட்டு இருக்கிறது. நடனம் ஆடுவோர், பாடல் பாடுவோர், சூது ஆடுவோர் தங்கள் திறமையை நிரூபிக்க அவரவர் துறையில் போட்டி போட்டனர். 


6. கலித்தொகை : 

கலித்தொகை என்பது 150 பாடல்களைக் கொண்ட நூலாகும். இதைத் தொகுத்தவர் நல்லந்துவனார். தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.  


கடையேழு வள்ளல்களில் ஒருவனான பறம்பு மலை தலைவன் பாரியைப் பற்றி கபிலர் பாடியுள்ளார். ஏறுதழுவுதல், கற்பு மணம், களவு மணம், ஆண்களின் வீரம், பெண்களின் கற்பு நெறி, விருந்தோம்பல், நட்புக்கு தகுதி இல்லாதவர்கள் செய்யும் செயல்கள், அணிகலன்கள், கொடுக்கல் வாங்கல் கடன் பெறும் வழக்கம், இசைக்கருவிகள் பற்றி கூறப்பட்டுள்ளது. 


அளவுக்கு மீறி வரி வாங்கினால் நாடு பாழாகும். நேர்மையான வழியில் ஆண்கள் பொருள் ஈட்டுதல் வேண்டும். இராமாயணம், மகாபாரதம் மற்றும் புராணங்களில் வரும் செய்திகளை சுட்டிக் காட்டுகிறது. வேதம் ஓதும் அந்தணர்கள், வேள்வி செய்யும் அந்தணர்கள் இருந்தார்கள் எனக் கூறுகிறது. பொய் சாட்சி சொன்னவன் ஒரு மரத்தின் கீழ் நின்றால் அம்மரம் தீப்பற்றி எரியும், சந்திரனை ராகு என்னும் பாம்பு விழுங்குவதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது, பல்லி சொல்லுக்கு பலன் உண்டு, பெண்களின் இடது கண் துடித்தால் நன்மை உண்டாகும் போன்ற நம்பிக்கைகளை மக்கள் பின்பற்றியதைக் கூறுகிறது. 


7. அகநானூறு : 

அகநானூறு என்பது 400 பாடல்களைக் கொண்ட நூலாகும். இதைத் தொகுத்தவர் உருத்திரக் கண்ணனார். தொகுப்பித்தவர் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி.  


சோழர்கள் குடவோலை தேர்தல் முறையில் சபை உறுப்பினர்களை தேர்வு செய்தனர். அலெக்ஸாண்டர் படையெடுத்து வந்த போது நந்தர்கள் தமது செல்வத்தை கங்கை ஆற்றின் அடியில் புதைத்து வைத்தனர். பண்டைய தமிழ்நாட்டின் வட எல்லையாக வேங்கட மலை இருந்தது. சேரலாதன் என்ற சேர மன்னன் வட இந்தியா மீது படையெடுத்துச் சென்று இமயத்தில் வில் அம்பு கொடியை நட்டார். வெண்ணிப் போரில் கரிகாலன் வெற்றி பெற்றார் என்றும் தோல்வி அடைந்த சேரலாதன் வடக்கிருந்து உயிர் துறந்தார். தலையாலங்கானம் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் பாண்டியன் நெடுஞ்செழியன் வெற்றி பெற்றார். கடையேழு வள்ளல்களில் ஒருவனான காரி, மற்றொரு வள்ளலான வில் வித்தையில் சிறந்த ஓரியை போரில் கொன்றார். முசிறி துறைமுகத்துக்கு வந்த யவனர்களின் கப்பல் பொன்னை கொடுத்துவிட்டு மிளகை ஏற்றிச் சென்றது. மேலும் கற்பு மணம், களவு மணம், திருமணச் சடங்குகள், நடுகற்கள் வழிபாடு போன்ற பல வரலாற்று செய்திகள் அகநானூற்று பாடல்களில் இடம் பெற்றுள்ளன. 


மேலும் இந்நூலில் வஞ்சி, மதுரை, காவிரிப்பூம்பட்டினம், முசிறி, தொண்டி, கொற்கை, கருவூர் போன்ற நகரங்களின் பெயர்களும் நன்னன், அதியமான், பேகன், ஆய் அண்டிரன், காரி, ஓரி போன்ற வள்ளல்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. 


8. புறநானூறு : 

புறநானூறு என்பது 400 பாடல்களைக் கொண்ட நூலாகும். இதைத் தொகுத்தவர் மற்றும் தொகுப்பித்தவர் பெயர் தெரியவில்லை.  







No comments:

Post a Comment