10 December 2025

Income Tax Form FY 2025-2026 (AY 2026-2027) By Arivazhagan - Version 2.0 Dated 10/12/2025

 

Income Tax Form Version 2.0 (New Regime) Last Updated 10/12/2025

வருமான வரி படிவத்தை பூர்த்தி செய்யும் வழிமுறை : Financial Year 2024-25 (AY 2025-26) Auto calculation is enabled in this Software. HRA Hike and Pay Drawn Changes entry is available to CPS Changes, Allowance Changes, Less Salary, New Appointment. Thanks to all Supporters.

Download Link 👇👇👇

New Regime FY 2025-26

New and Old Regime FY 2025-26


Whatsapp Group Link 👇👇👇

IT Tax Form Info (Whatsapp Group)


வருமான வரி படிவத்தை பூர்த்தி செய்யும் வழிமுறை : 

மேலே உள்ள லிங்கை கிளிக் செய்து வருமான வரி படிவத்தை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தவும். இதை ஆன்லைனில் Edit செய்ய முடியாது. எனவே உங்கள் மொபைலிலோ அல்லது கணினியிலோ பதிவிறக்கம் செய்து பயன்படுத்தவும். இது ஒரு தானியங்கு கணக்கீடு படிவம் (Auto Calculation Form). எனவே மாஸ்டர் பக்கத்தில் பதிவிட்டால் போதும் படிவம் தானாகவே பூர்த்தியாகிவிடும். 


MASTER PAGE : 

முதலில் மாஸ்டர் பக்கத்தில் தங்கள் சுயவிவரத்தையும், மார்ச் மாதம் பெற்ற ஊதிய விவரத்தையும் நிரப்பவும். இது மட்டும் செய்தால் போதும் உங்களது படிவம் 90 சதவீதம் தயாராகிவிடும். EL சரண்டர் செய்திருந்தால் பணப்பலன் பெற்ற மாதத்தை எண்ணில் பதிவிடவும். 


EARNINGS (March Salary) என்ற கலத்தில் மார்ச் மாதம் பெற்ற Basic Pay, Personal Pay, HRA, மற்றும் இதர படிகளையும் (Allowance) பூர்த்தி செய்யவும். DA பதிவிட வேண்டியதில்லை. அது Paydrawn Particulars இல் தானாகவே கணக்கிட்டுக் கொள்ளும். 


DEDUCTIONS (March Salary) என்ற கலத்தில் GPF - 1 / CPS - 2 என்ற கட்டத்தில் உங்களது ஓய்வூதிய திட்டத்தை எண்ணில் (Number) உள்ளீடு செய்யவும். GPF என்றால் 1 என உள்ளீடு செய்து பிறகு இடது பக்கம் அம்புக்குறிக்கு கீழே GPF பிடித்தங்களை பதிவிடவும். மார்ச் மாதத்திற்கு மட்டும் பதிவிட்டாலே அனைத்து மாதங்களுக்கும் அதே தொகை காட்டும். எனவே GPF பிடித்தம் உயர்த்தி இருந்தால் எந்த மாதத்தில் உயர்த்தப்பட்டதோ அதில் மட்டும் உள்ளீடு செய்யவும். 


CPS என்றால் 2 என உள்ளீடு செய்தால் மட்டும் போதும். CPS பிடித்தங்களை பதிவிட வேண்டியதில்லை. அது Paydrawn Particulars இல் தானாகவே கணக்கிட்டுக் கொள்ளும். பிறகு மார்ச் மாதம் பிடித்தம் செய்த FBF, SPF, NHIS, PLI/LIC, GST மற்றும் இதர பிடித்தங்களையும் பதிவிடவும்.  

DA ARREARS என்ற கலத்தில் அகவிலைப்படி உயர்வுடன் ஊதியம் பெற்ற மாதத்தை எண்ணில் (Number) உள்ளீடு செய்யவும். உதாரணமாக ஏப்ரல் மாதம் எனில் நான்கு (4) என உள்ளிடவும். இவ்வாறு DA 1 / DA 2 தாமதமாக கிடைத்து இருந்தாலும் ஊதியத்தில் உயர்தப்பட்ட மாதம் எதுவோ அந்த மாதத்தை மட்டும் பதிவிடவும். அதோடு DA 1 / DA 2 Arrear மற்றும் அதற்கான CPS பிடித்தம் சரியாக உள்ளதா என்று பார்க்கவும். இவற்றில் திருத்தம் இருந்தால் நீங்களே மாற்றிக் கொள்ளலாம். 


அடுத்ததாக வலது பக்கம் மேலே INCREMENT DETAILS என்ற கலத்தில் Increment வழங்கப்பட்ட மாதத்தையோ அல்லது தாமதமாக அளித்திருந்தால் ஊதியம் உயர்த்தி வழங்கப்பட்ட மாதத்தையோ எண்ணில் (Number) உள்ளீடு செய்யவும். அதோடு ஊதிய உயர்வின் போது HRA மாற்றம் ஏற்பட்டு இருந்தால் அந்த மாத்தை எண்ணிலும் அதற்கு கீழே புதிய HRA தொகையை உள்ளிடவும். பிறகு Increment Arrear இருந்தால் அதையும் பதிவிடவும். 



INCREMENT DETAILS க்கு பின்பற்றிய அதே வழிமுறையை SEL. GR. / SPL GR. DETAILS கலத்தில் தேர்வு நிலை அல்லது சிறப்பு நிலை பெற்ற விவரத்தை உள்ளீடு செய்யவும். 


இறுதியாக இடது பக்கம் EMPLOYEE DETAILS க்கு கீழே உள்ள DEDUCTIONS FROM SALARY கலத்தில் ஒவ்வொரு மாதமும் பிடித்தம் செய்யப்பட்ட வருமான வரியை உள்ளீடு செய்யவும். அதன் அருகில் IT CESS தானாகவே கணக்கிட்டுக் கொள்ளும். அதில் திருத்தம் இருந்தால் நீங்களே மாற்றிக் கொள்ளலாம். சம்பளத்தில் பிடித்தம் செய்யாமல் தனியாக Income Tax செலுத்தி இருந்தால் ADVANCE TAX / SELF ASSESSMENT TAX என்ற கலத்தில் பதிவிடவும். 

NEW REGIME இல் இருப்பவர்கள் இதுவரை பதிவிட்டதை வைத்தே வருமான வரி படிவத்தை பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். OLD REGIME இல் உள்ளவர்கள் மட்டும் கீழே தொடரவும். 

OLD REGIME : 

OLD REGIME இல் உள்ளவர்கள் DEDUCTIONS AND SAVINGS கலத்திற்கு செல்லவும். அதில் HRA - 1 / HOUSING LOAN INTEREST எதை கழிக்க வேண்டுமோ அதை எண்ணில் (Number) உள்ளீடு செய்யவும். அதன் பிறகு கீழே உள்ள தேவையான கலத்தில் உங்களுக்கான கழிவுகளை பதிவிடவும். பிறகு OLD P1 பக்கத்தில் Hill Allowance Exemption இருந்தால் அதற்கான தொகையை நீங்களே உள்ளீடு செய்யவும். அதே பக்கத்தில் Deduction U/s 80CCD(1B) இல் 50,000 கழிவு அனுமதி இருந்தால் மட்டும் உள்ளீடு செய்யவும். தற்போது OLD REGIME க்கான படிவத்தை பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். 


ADJUST PAGE : 

இந்த படிவத்தில் அட்ஜஸ்ட் என்ற பக்கம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த பக்கத்திற்கு செல்லும் முன் NEW P2 / OLD P4 பக்கத்தை பார்க்கவும். அங்கு Paydrawn Particulars இல் ஏதேனும் திருத்தம் இருந்தால் மட்டும் Adjust Page இல் அதற்கான கட்டத்தில் மட்டும் பதிவிடவும். மற்ற கட்டங்களை காலியாக விடவும். 

அட்ஜஸ்ட் பக்கத்தில் PAY DRAWN PARTICULARS செல்லவும். புதிதாக பணியில் சேர்ந்தவர்கள் அல்லது பணி மாறுதலில் சென்றவர்கள் Earnings / Deduction ஏதாவது நிறுத்தப்பட்டு இருந்தால் அந்த மாதங்கள்களுக்கு நேராக உரிய கட்டத்தில் 0 (Zero) என உள்ளிடவும். அல்லது குறைக்கப்பட்டு இருந்தால் அந்த தொகையை உள்ளிடவும். அதேபோல் பதவி உயர்வு பெற்றவர்கள் Earnings / Deduction ஏதாவது உயர்த்தப்பட்டு இருந்தால் அந்த மாதங்கள்களுக்கு நேராக உரிய கட்டத்தில் சரியான தொகையை உள்ளிடவும். இத்துடன் வருமான வரி படிவத்தை பூர்த்தி செய்யும் வழிமுறை நிறைவு பெற்றது. 


MASTER PAGE / NEW P1 / OLD P1 ஆகிய பக்கங்களில் மேலே வலது ஓரத்தில் NEW REGIME மற்றும் OLD REGIME இல் எவ்வளவு வரி வருகிறது? என்று தரப்பட்டு உள்ளது. உங்களுக்கு எதில் வரி குறைவாக வருகிறது என ஒப்பிட்டுப் பார்த்து தேவையான படிவத்தை பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். 
பிடித்தம் செய்யப்பட்ட வருமான வரி போக நீங்கள் செலுத்த வேண்டிய மீதம் INCOME TAX and IT CESS தொகை NEW P1 / OLD P2 பக்கத்தில் கீழே இறுதியாகத் தரப்பட்டுள்ளது. தேவையெனில் அதை ஒருமுறை பார்த்துக் கொள்ளலாம். 
நன்றி. 🙏🙏🙏 


Prepared By
A. Arivazhagan, M.A., M.Phil., M.Ed.,
PG Teacher, GBHSS Thimiri
Ranipet District, Cell - 9944573722






No comments:

Post a Comment