12 ஆம் வகுப்பு - வரலாறு - அலகு 8
தேதி :
வகுப்பு : 12 ஆம் வகுப்பு
பாடம் : வரலாறு
தலைப்பு : 8. காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு.
கற்பித்தல் துணைக் கருவிகள் :
திறன்பேசி, கணிப்பொறி, QR Code ஸ்கேனர், இந்திய வரைபடம், உலக உருண்டை.
கற்பித்தல் நோக்கங்கள் :
1. இந்தியப் பிரிவினையின் விளைவுகளை அறியச் செய்தல்.
2. சுதேச அரசுகளை ஒருங்கிணைத்தலை புரியச் செய்தல்.
3. மொழிவாரி மாநிலங்கள் மறுசீரமைத்தலை உணரச் செய்தல்.
4. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை விளங்கச் செய்தல்.
ஆயத்தம் செய்தல் :
1. இந்தியாவிலிருந்து பிரிந்து சென்ற நாடு எது?
2. மாநிலங்கள் எதன் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது?
3. இந்தாவின் அண்டை நாடுகளின் பெயர்களைக் கூறுக.
பாடக் குறிப்புகள் :
காலனித்துவ ஆட்சியிலிருந்து கிடைத்த விடுதலைக்கு ஒரு விலை கொடுக்க வேண்டி இருந்தது. இந்தியப் பிரிவினை வங்காளம் மற்றும் பஞ்சாபின் மாகாணங்களை இரண்டாகப் பிரித்தது. இந்துக்கள் இந்நியாவிற்கும் முஸ்லிம்கள் பாகிஸ்தானிற்கும் இடம்பெயர்ந்தனர்.
* இந்தியா - பாகிஸ்தான் பிரிவினை, வங்காளம் மற்றும் பஞ்சாப்
* இங்கிலாந்து பிரதமர் அட்லி அறிக்கை, மௌண்ட்பேட்டன் திட்டம்
* ராட்க்ளிஃப் எல்லைக் கோடும் இந்தியப் பிரிவினையும்
* பிரிவினைக்கு காந்தியடிகளின் எதிர்ப்பும் மனமாற்றமும்
* பிரிவினையின் விளைவுகள் - வன்முறைச் சம்பவங்கள்
* இந்திய அரசமைப்பு உருவாக்கம் - அம்பேத்கர்
* அரசமைப்பு நிர்ணயச் சபை, அரசமைப்பு வரைவுக் குழு
* இந்திய அரசமைப்பின் சிறப்புகள், குறிக்கோள் தீர்மானம்
* சுதேச அரசுகளின் இணைப்பு - படேல்
* இணைப்புறுதி ஆவணம், மன்னர் மானியங்கள்
* சுதேச அரசுகளின் இணைப்பு போராட்டம்
* ஜூனாகத், ஹைதராபாத், காஷ்மீர் இணைப்பு
* மொழி அடிப்படையில் மாநிலங்கள் மறுசீரமைப்பு
* பட்டாபி சீதாராமையா, பொட்டி ஸ்ரீ ராமுலு
* ஜேவிபி குழு, பசல் அலி குழு, மாநில மறுசீரமைப்புச் சட்டம்
* இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை - நேரு
* பஞ்சசீலக் கொள்கை, இந்தியா - சீனாப் போர்
* அணிசேரா இயக்கம், பாண்டுங் பேரறிக்கை
மதிப்பிடுதல் :
1. மொழிவாரி அமைக்கப்பட்ட முதல் மாநிலம் எது?
2. காந்தியடிகள் படுகைாலை செய்யப்பட்ட நாள் என்ன?
3. அரசமைப்பின் குறிக்கோள் தீர்மானம் கொண்டு வந்தவர் யார்?
கற்றல் விளைவுகள் :
1. இந்தியப் பிரிவினையின் விளைவுகளை அறிந்து கொண்டனர்.
2. சுதேச அரசுகளை ஒருங்கிணைத்தலை புரிந்து கொண்டனர்.
3. மொழிவாரி மாநிலங்கள் மறுசீரமைப்பை உணர்ந்து கொண்டனர்.
4. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை தெரிந்து கொண்டனர்.
தொடர்பணி :
1. 1920 - 1956 வரை இந்திய மாநிலங்கள் மறுசீரமைக்கப்பை விவாதிக்க.
2. சுதேச அரசுகளை இணைப்பது தொடர்பான பிரச்சினைகளை விவரி.
3. பஞ்சசீலக் கொள்கையின் ஐந்து கோட்பாடுகளை விளக்குக.
அ. அறிவழகன், மாநிலத் தலைவர்
TNPGHTA அமைப்பு - 9944573722
Download Pdf Link 👇👇👇
12th History - Notes of Lesson - Week 8
No comments:
Post a Comment