12 ஆம் வகுப்பு - வரலாறு - அலகு 6
தேதி :
வகுப்பு : 12 ஆம் வகுப்பு
பாடம் : வரலாறு
தலைப்பு : 6. தேசியவாத அரசியலில் வகுப்புவாதம்.
கற்பித்தல் துணைக் கருவிகள் :
திறன்பேசி, கணிப்பொறி, QR Code ஸ்கேனர், இந்திய வரைபடம், உலக உருண்டை.
கற்பித்தல் நோக்கங்கள் :
1. மதம் சார்ந்த தேசியவாதத்தின் தோற்றத்தை அறியச் செய்தல்.
2. பிரிட்டிஷார் கையாண்ட பிரித்தாளும் கொள்கையை புரியச் செய்தல்,
3. அகில இந்திய இந்து மகாசபையின் எழுச்சியை உணரச் செய்தல்.
4. இந்தியா, பாகிஸ்தான் பிரிவினை செய்யப்படுதலை விளங்கச் செய்தல்.
ஆயத்தம் செய்தல் :
1. வகுப்புவாதம் என்றால் என்ன?
2. பிரித்தாளும் கொள்கை என்பது யாது ?
3. தனித்தொகுதிகள் யாருக்கு வழங்கப்பட்டது?
பாடக் குறிப்புகள் :
1. பிரிட்டிஷ் இந்தியாவில் வகுப்புவாதத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி.
* இந்துமத மறுமலர்ச்சி - ஆரிய சமாஜம்.
* முஸ்லிம் உணர்வின் எழுச்சி - அலிகார் இயக்கம்.
* பிரிட்டிஷாரின் பிரித்தாளும் கொள்கை.
* சையது அகமது கானின் பங்களிப்பு.
* உள்ளாட்சித் தேர்தல்களில் வகுப்புவாதம்.
* காங்கிரசின் பலவீனமான கொள்கைகள்.
2. அனைத்து இந்திய முஸ்லிம் லீக்கின் உருவாக்கம்.
* அனைத்து இந்திய முஸ்லிம் லீக்கின் நோக்கங்கள்.
* தனித்தொகுதியும் வகுப்புவாதப் பரவலும்.
3. அகில இந்திய இந்து மகாசபையின் எழுச்சி.
* ஐக்கிய மாகாணத்தில் வகுப்புவாதம், இந்து மகாசபை,
* முஸ்லிம்களின் டெல்லி மாநாடும் புதிய கருத்துருக்களும்.
* வகுப்புவாதத் தீர்வும் அதன் பின் விளைவுகளும்.
4. முதல் காங்கிரஸ் அமைச்சரவைகள்.
* பாகிஸ்தான் தனி நாடு கோரிக்கை.
* மீட்பு நாள் கடைப்பிடித்தல் - 1939.
* நேரடி நடவடிக்கை நாள் - 1946.
மதிப்பிடுதல் :
1. முகலாயர் கால நீதிமன்ற மொழி எது?
2. இரு நாடு கொள்கையை கொண்டு வந்தவர் யார்?
3. இந்து மகாசபை நிறுவப்பட்ட ஆண்டு எது?
கற்றல் விளைவுகள் :
1. மதம் சார்ந்த தேசியவாதத்தின் தோற்றத்தை அறிந்து கொண்டனர்.
2. பிரிட்டிஷார் கையாண்ட பிரித்தாளும் கொள்கையை புரிந்து கொண்டனர்.
3. அகில இந்திய இந்து மகாசபையின் எழுச்சியை உணர்ந்து கொண்டனர்.
4. இந்தியா, பாகிஸ்தான் பிரிவினை செய்யப்படுதலை தெரிந்து கொண்டனர்.
தொடர்பணி :
1. இந்தியாவில் வகுப்புவாதத்தின் தோற்றம், வளர்ச்சி குறித்து ஆய்வு செய்க.
2. இந்து தேசியம், இஸ்லாமிய தேசியம் மற்றும் இந்திய தேசியம் பற்றி விகள்குக.
3. பிரிட்டிஷாரின் பிரித்தாளும் கொள்கை இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கம் என்ன?
அ. அறிவழகன், மாநிலத் தலைவர்
TNPGHTA அமைப்பு - 9944573722
Download Pdf Link 👇👇👇
12th History - Notes of Lesson - Week 6
No comments:
Post a Comment