Home

07 November 2023

12 ஆம் வகுப்பு வரலாறு - பாடக்குறிப்பேடு - வாரம் 2

12 ஆம் வகுப்பு - வரலாறு - அலகு 2

தேதி  :       

வகுப்பு  12 ஆம் வகுப்பு      

பாடம்  : வரலாறு     

தலைப்பு  : 2. தீவிரவாதத்தின் எழுச்சியும் சுதேசி இயக்கமும் 

கற்பித்தல் துணைக் கருவிகள் :       

திறன்பேசி, கணிப்பொறி, QR Code ஸ்கேனர், இந்திய வரைபடம், உலக உருண்டை.  

கற்பித்தல் நோக்கங்கள் :       

1. தீவிர தேசியவாதத்தின் எழுச்சியை அறியச் செய்தல்.

2. தீவிர மற்றும் புரட்சிகர தேசியவாதம் புரியச் செய்தல்.

3. வங்காளத்தில் சுதேசி இயக்கத்தை உணரச் செய்தல்.

4. சென்னையில் சுதேசி இயக்கத்தை விளங்கச் செய்தல்.

ஆயத்தம் செய்தல் :      

1. இந்திய தேசியக் காங்கிரஸ் ஏன் தோன்றியது ?

2. வங்கப் பிரிவினை ஏதற்காக நடைபெற்றது ?

3. சுதேசி இயக்கம் என்றால் என்ன ?

பாடக் குறிப்புகள் :      

இந்திய தேசிய காங்கிரசுக்குள் மிதவாத அரசியலுக்கு எதிரான வெறுப்பு நிலவியது. இவ்வெறுப்பு முடிவில் தீவிரவாதப் போக்கு என்ற ஒரு புதியப் போக்காகத் தோற்றம் பெற்றது. அதனை முன்னின்று நடத்தியவர்கள் தீவிர தேசியவாதிகள் என்று அழைக்கப்பட்டனர். வ.உ.சி. தமிழ்நாட்டில் சுதேசி இயக்கத்தை தொடங்கி நடத்தி வந்தார்.

1. வங்கப் பிரிவினை 1905

* இந்து முஸ்லிம்களைப் பிரிக்கும் நோக்கம்

2. பிரிவினை எதிர்ப்பு இயக்கம்

3. வங்காளத்தில் சுதேசி இயக்கமும் புறக்கணித்தலும்.

* ஆக்கபூர்வமான சுதேசி, சமிதிகள்.

4. தீவிர தேசியவாதம்.

* சுயராஜ்ஜியம், அரசியல் சுதந்திரம், சூரத் பிளவு.

5. புரட்சிகரத் தீவிரவாதம்.

* அலிப்பூர் குண்டுவெடிப்பு வழக்கு.

* ஆங்கிலேயரின் அடக்குமுறைகள்.

6. தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம்.

* வட்டாரமொழி சொற்பொழிவுக் கலையின் வளர்ச்சி.

* வ.உ.சி. யும் சுதேசி நீராவி கப்பல் கம்பெனியும்.

* கோரல் நூற்பாலை வேலை நிறுத்தம்.

* சுப்பிரமணிய பாரதி : கவிஞர், தேசியவாதி.

* வ.உ.சி.யும் சுப்ரமணிய சிவாவும் சிறைவாசமும் 

* ஆஷ் படுகொலை, பின்விளைவுகள்.

மதிப்பிடுதல் :      

1. வங்கப் பிரிவினை எந்த ஆண்டு நடைபெற்றது ?

2. மும்மூர்த்திகள் என்று யாரை அழைத்தனர் ?

3. சுதேசி கப்பல் கம்பெனியை நிறுவியவர் யார் ?

கற்றல் விளைவுகள் :      

1. தீவிர தேசியவாதத்தின் எழுச்சியை அறிந்து கொண்டனர்.

2. தீவிர மற்றும் புரட்சிகர தேசியவாதம் புரிந்து கொண்டனர்.

3. வங்காளத்தில் சுதேசி இயக்கத்தை உணர்ந்து கொண்டனர்.

4. சென்னையில் சுதேசி இயக்கத்தை தெரிந்து கொண்டனர்.

தொடர்பணி :       

1. வங்கப் பிரிவினை மேற்கொள்ளப்பட்டதை விளக்குக.

2. தமிழ்நாட்டில் சுதேசி இயக்கத்தின் செயல்பாடுகளை ஆய்க.

3. வ.உ. சிதம்பரத்தின் சுதேசி இயக்க முயற்சிகளை விவரிக்க.


அ. அறிவழகன், மாநிலத் தலைவர் 

TNPGHTA அமைப்பு - 9944573722   

Download Pdf Link 👇👇👇

12th History - Notes of Lesson - Week 2








No comments:

Post a Comment